– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று முயற்சிகள் வெற்றி அடையக்கூடிய நாளாக இருக்கும். புதுப்புது யோசனைகள் பிறக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த நிறைய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அடுத்தவர்களுடைய பாராட்டை பெறுவீர்கள். பிரம்மாண்ட வெற்றி அதிகப்படியான லாபத்தையும் பெற்றுக் கொடுக்கும். வேலையிலும் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். இறைவனின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நலம் தரும் நாளாக இருக்கும். வேலைகளில் பெருசாக டென்ஷன் இருக்காது. ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புது மனிதர்களுடைய நட்பு நிறைய நல்ல விஷயங்களை கற்றுக் கொடுக்கும். தேவையற்ற நட்பு வட்டாரம் தானாக உங்களை விட்டு விலகும். எதிரி தொல்லை நீங்கும். கமிஷன் தொழில் நல்ல லாபத்தை கொடுக்கும்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக கிடப்பில் போட்டு வைத்திருந்த வேலையை இன்று கையில் எடுத்தால் வெற்றி கிடைக்கும். நினைத்துப் பார்க்காத நல்ல செய்தி தொலைபேசியின் மூலமாகவோ, நண்பர்களின் மூலமாகவோ, உறவுகளின் மூலமாகவோ செவிகளை எட்டும். மனநிறைவு அடைவீர்கள். நிதி நிலைமை சீராகும் சேமிப்பு உயரும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்பவும் அமைதியான நாளாக இருக்கும். ஆர்பாட்டம் இல்லாமல் இந்த நாள் நகர்ந்து செல்லும். பெரியவர்களிடத்திலும், மேலதிகாரிகளிடமும் ரொம்பவும் பணிவோடு நடந்து கொண்டு, நல்ல பெயர் வாங்குவீர்கள். அடக்கத்தின் மறு உருவம் நீங்களாக திகழ்வீர்கள். முன்கோபம் குறையும். ஞானோதயம் பிறந்தது போல ஒரு உணர்வு ஏற்படும். சந்தோஷத்திற்கு குறையவில்லை நல்லது நடக்கட்டும்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். முக்கியமான வேலைகளை செய்யும் போது கவனம் சிதறக்கூடாது. முன்பின் தெரியாத நபர் பேச்சை கேட்கக்கூடாது. எதிரிகள் உங்களை திசை திருப்ப பார்ப்பார்கள். ஜாக்கிரதியாக இருந்து கொள்ளுங்கள். உங்கள் மனதிற்கு பட்டதை மட்டும் செய்யுங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதி நிறைந்த நாளாக இருக்கும். தேவையற்ற பிரச்சனைகள் தானாக விளக்கும். கடன் சுமை விலகும். மனைவிக்கு தேவையான பொன் பொருள் வாங்கிக் கொடுத்து சந்தோஷம் அடைவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். சுப செலவுகள் ஏற்படும். வீட்டில் பெரியவர்களுடைய ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருக்கவும்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். நிதி நிலைமை சீராகும். வியாபாரத்தில் நல்ல லாபத்தை அடைவீர்கள். ஆரோக்கியத்தில் மேம்பாடு அடைவீர்கள். கட்டுமான தொழில் முன்னேற்றத்தை கொடுக்கும். எதிரிகளைக் கூட பேசி சரி கட்டி நண்பர்களாக மாற்றிக் கொள்வீர்கள். பேச்சாற்றல் அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்கள் இன்று பேசுவதை குறைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக உங்களுடைய முன்னேற்றத்தை அடுத்தவர்களிடம் தம்பட்டம் அடிக்காதீர்கள். தேவையற்ற கண் திருஷ்டி சில தோல்விகளை உங்களுக்கு கொடுத்து விடும். தன்னடக்கம் தேவை. நாவடக்கம் தேவை. இன்று அமைதியாக இருக்கும் பட்சத்தில் நிறைய சாதிக்கலாம். அதிகமாக பேசுபவர்களுக்கு பிரச்சனை வரும் அவ்வளவுதான்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று தேவையற்ற சிக்கல்களில் சிக்கிக் கொள்ள வாய்ப்புகள் இருக்கிறது. தலை குனிந்து நிற்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். சோதனையை கடவுள் உங்களுக்கு உண்டு பண்ணி வேடிக்கை பார்ப்பான். கவலைப்படாதீங்க, இறைவனின் மீது முழு நம்பிக்கையை வையுங்கள். நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். பொய் பேசாதீர்கள் நல்லது நடக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று புகழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். பதவி உயர்வு உங்களை தேடி வரும். நாலு பேர் மத்தியில் உங்களுடைய மதிப்பு மரியாதையும் உயரும். ஏளனமாக பேசியவர்கள் முன்பு முன்னேறி காட்டுவீர்கள். வாழ்க்கையில் ஜெயிக்க கூடிய சந்தர்ப்பங்கள் நிறைய உங்களைத் தேடி வரும். நிதி நிலைமை சீராகும். கடன் சுமை குறையும் நல்லதே நடக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். மனதில் சந்தோஷம் இருக்கும். வேலையில் சின்ன சின்ன சங்கடங்கள் வரலாம். பொறுமையாக இருக்க வேண்டும். மேலதிகாரிகள் எதிர்த்துக் கொள்ளக்கூடாது. வியாபாரத்தில் நினைத்ததை விட நல்ல லாபம் அடைவீர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று கவனத்தோடு இருந்து கொள்ளுங்கள். கவனக்குறைவாக யாரிடமும் அனாவசியமாக பேச வேண்டாம். ஒரே சமயத்தில் இரண்டு வேலைகளை செய்யக்கூடாது. வாகனம் ஓட்டும் போது கவனம் சிதற கூடாது. ஜாக்கிரதியாக இருக்க வேண்டும். வாழ்க்கை துணை பேச்சை கேட்டு நடப்பது நல்லது. செலவை குறைத்துக் கொள்ளுங்கள். இறைவனின் அருளால் தலைக்கு வந்த பிரச்சனை தலைப்பாகையுடன் விலகும்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam