
– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று பொறுமையாக இருக்க வேண்டும். முன் கோபப்படக்கூடாது. எந்த ஒரு முடிவையும் அவசரப்பட்டு எடுக்கக் கூடாது. வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விவகாரங்களாக இருந்தாலும் பொறுமையாக பேச வேண்டும். குடும்ப பிரச்சினைகளையும் பொறுமையாக கையாளுங்கள். அவசரப்பட்டால் நஷ்டம் உங்களுக்குத்தான்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மனதளவில் மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் வியாபாரத்தில் பெருசாக எந்த டென்ஷன் வந்தாலும், அதை சமாளிக்கும் தெம்பு உங்கள் மனதில் இருக்கும். காரணம் மகிழ்ச்சி. குடும்பத்தில் சந்தோஷமாக இருக்கும் போது, வெளி பிரச்சனைகள் எவ்வளவு வந்தால் சுலபமாக எதிர் கொள்ளலாம்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த நாள் ரொம்ப ரொம்ப சாந்தமான அமைதியான நாளாக செல்லும். எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இருக்காது. நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம், நல்ல உபசரணை வீட்டில் இருக்கும். பெண்களுக்கும் நல்ல ஓய்வு கிடைக்கும். இன்று மாலை குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்று நேரத்தை செலவு செய்வீர்கள். சுப செலவுகள் உண்டாகும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய வேலைகள் கொஞ்சம் இரட்டிப்பாகும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு உடல் அசதி ஏற்படும். தேவையற்ற டென்ஷன் முன்கோபம் வரவும் வாய்ப்புகள் இருக்கிறது. விடுமுறை நாளை கொஞ்சம் அனுசரணையாக எடுத்துச் செல்ல வேண்டும் என்றால், வேலைகளை முன்கூட்டியே முடித்துக் கொள்ளுங்கள். சுறுசுறுப்பை கூட்டிக் கொள்ளுங்கள். அது தான் ஒரே வழி.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். மனதிற்கு பிடித்தவர்களிடம் பேசி நீண்ட நேரம் செலவு செய்வீர்கள். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் நிம்மதியான வாழ்க்கை என்று இந்த விடுமுறை நாள் உங்கள் மனதிற்கு பிடித்த நாளாக அமையும். பிரிந்த உறவுகள் ஒன்று சேர்ந்து, இந்த நாளை என்ஜாய் பண்ணுவீங்க.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த நாள் சுறுசுறுப்பான நாளாக இருக்கும். விடுமுறை நாள் என்ற ஒரு எண்ணமே உங்கள் மனதில் இருக்காது. வீட்டை சுத்தம் செய்வது பழுதான பொருட்களை சரி பார்ப்பது என்று அத்தியாவசியமான தேவைகளை எல்லாம் பம்பரம் போல செய்து முடிப்பீர்கள். அடுத்த வாரத்தை வரவேற்பதற்கும் இந்த நாளே பிள்ளையார் சுழி போட்டு விடுவீர்கள்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கும். வேலை தொழிலில், புதிய நண்பர்களின் வருகை, புதிய நட்பு, புதுப்புது ஐடியாக்களை கொடுக்கும். வாழ்க்கையில் முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்லும். குடும்ப உறவுகளுக்கு மத்தியில் ஒற்றுமை இருக்கும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேரவும் வாய்ப்புகள் இருக்கிறது. பிள்ளைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும் ஆரோக்கியம் மேம்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று நல்ல பெயர் கிடைக்கும். சொன்ன வேலையை சரியான நேரத்தில் முடித்துக் கொடுத்து விடுவீர்கள். விடுமுறை நாள் என்று கூட பார்க்க மாட்டீர்கள். கடமையில் ரொம்பவும் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். இந்த நாள் உங்களுடைய வாழ்க்கையில் நிறைய தீருப்புமுனைகளை உண்டு பண்ணும். நீண்ட நாள் முயற்சிகள் வெற்றி கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பல் நிறைந்த நாளாக இருக்கும். விடுமுறை நாள் தானே எல்லா வேலைகளையும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நினைப்பீர்கள். ஆனால் இந்த நாள் இறுதியில் எல்லா வேலைகளும் சேர்ந்து ஒட்டுமொத்தமாக நிற்கும். காலையிலிருந்து கொஞ்சம் சோம்பலை ஒதுக்கிவிட்டு, அத்தியாவசிய வேலைகளை மட்டும் மாவதுகவனிப்பது நல்லது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து கூடி வரும் நாளாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நஷ்டமான விஷயங்களை கூட லாபகரமாக மாற்றி விடுவீர்கள். குடும்பத்திலிருந்து வந்த நிதிநிலைமை பிரச்சனைகளை சீர் செய்து விடுவீர்கள். பண கஷ்டத்தில் இருந்து விடுபட அயராது உழைப்பீர்கள். உங்களுக்கான வெற்றியும் வந்து சேரும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோகம் நிறைந்த நாளாக தான் இருக்கும். விடுமுறை நாள், ஆனால் ஏதோ தனிமையில் வாடி வதைவது போல ஒரு எண்ணம் உங்களுக்குள் தோன்றும். உற்சாகம் பெருசாக இருக்காது. நடந்தவைகளை எண்ணி கவலைப்பட்டுக் கொண்டே இருப்பீர்கள். மனதை ஒருநிலைப்படுத்துங்கள் இறை வழிபாடு செய்யுங்கள் நல்லதே நடக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். ஏதாவது ஒரு நிலையில் மனதை அமைதி படுத்த முயற்சிகளை மேற்கொள்வீர்கள். கோவிலுக்கு பயணம் செய்யலாம். வீட்டிலேயே இறை வழிபாடு செய்யலாம். அடுத்தவர்களுக்கு உதவி செய்யக்கூடிய வாய்ப்புகளும் உங்களைத் தேடி வரும். மனதிற்கு அமைதியைத் தேடுவீங்க. தேவையான அமைதியும் இறைவனை ஆசீர்வாதம் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும் கவலை வேண்டாம்.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam