
– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. சோம்பேறித்தனத்தோடு இருந்தால், முக்கியமான வேலைகளில் பின்னடைவு உண்டாகிவிடும். பிறகு எதிர்காலத்தில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டும். இன்று ஞாயிற்றுக்கிழமையாகவே இருந்தாலும், இன்றைக்கான வேலையை கட்டாயம் இன்றே முடித்து விடுங்கள். சோம்பேறித்தனம் இன்று இருக்கவே கூடாது. தூக்கம் வந்தாலும் அதை பொருட்படுத்தாமல், வேலையில் ஆர்வம் காட்டவும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த லாபம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முதலீடுகளை செய்யலாம். புதிய வேலை தேடுவது, புது வியாபாரம் தொடங்குவது, இதுபோல முயற்சிகளில் ஈடுபடலாம். நல்லது நடக்கும் நாள். சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு தேவையற்ற மன பயம் இருக்கும். பதட்டம் இருக்கும். வேலையில் கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை உண்டாகும். நீண்ட தூர பயணங்களால் அலைச்சல் ஏற்படும். புது முயற்சிகளை இன்று மேற்கொள்ள வேண்டாம். மன பதட்டம் இல்லாமல் நிதானத்தோடு சிந்தித்து செயல்படுங்கள்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று தேவையற்ற பிரச்சனைகள் வர வாய்ப்புகள் இருக்கிறது. உறவுகள் நண்பர்கள் பகையாக மாறுவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. எதிரி தொல்லை இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சில பல கேள்விகள் எழும். பதில் சொல்ல முடியாத சூழ்நிலை உண்டாகும். முன்கோபம் வேண்டாம். பொறுமையாக எல்லா விஷயத்தையும் கையாளுவோம்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத வரவு மனதிருப்தியை கொடுக்கும். நல்ல ஓய்வு இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். உங்களுடைய கடமைகளை சரிவர செய்து முடிப்பீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை இருக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள் இன்று.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல பெயர் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். ப்ரமோஷன் சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புகள் இருக்கிறது. புதிய முதலீடுகளை செய்யலாம். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். பொன் பொருள் சேர்க்க இருக்கிறது. புதிய பொருள் வாங்குவதற்கு இந்த நாள் இனிய நாளாக அமையும்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். வெளியூர் பயணங்கள் நல்லபடியாக நடக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை பொருத்தவரை சின்ன சின்ன தடுமாற்றம் வரும். புதிய முதலீட்டின் போது கூடுதல் கவனம் இருக்கட்டும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று தேவையற்ற செலவுகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. நிதி நிலைமை கொஞ்சம் மோசமாகும். புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம். அதிக வட்டிக்கு கைநீட்டி கடன் வாங்க வேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் இன்று கவனமாக இருக்கவும். யாரை நம்பியும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். யாருக்காவது நீங்கள் பணம் கொடுக்க வேண்டும் என்றாலும் தைரியமாக பேசுங்கள். ஓடி ஒளிய கூடாது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நல்லதே நடக்கும். பிரச்சினையிலிருந்து விடுபடக்கூடிய நாள் இது. பிரச்சனைகளுக்கு நல்லதொரு தீர்வை கொடுக்கக்கூடிய நாள் இது. கோர்ட்டு கேஸ் வழக்குகள் ஒரு நல்ல முடிவுக்கு வரும். பஞ்சாயத்துகள் ஒரு நல்ல முடிவுக்கு வரும். உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சுகமான நாளாக இருக்கும். நல்ல ஓய்வு, நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம் என்று இந்த நாளை என்ஜாய் பண்ணுவீங்க. வீட்டில் விருந்தினர்களின் வருகை சுப செலவை உண்டு பண்ணும். குழந்தைகளுடைய போக்கில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். பயணங்களின் போதும் கவனம் தேவை.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். இறக்க குணத்துடன் நடந்து கொள்வீர்கள். நல்லது நடக்கக்கூடிய நாள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் விலகக்கூடிய நாள். நிறைய நல்ல முன்னேற்றங்கள் உங்களை தேடி வரக்கூடிய நாளாகவும் இந்த நாள் அமையும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அலைச்சல் இருக்கும். வேலை சம்பந்தப்பட்ட விஷயத்தில் அலைச்சல் இருக்கும். இருந்தாலும் உங்கள் மீது அன்பு காட்ட நாலு பேர் இருக்கிறார்கள் என்ற அந்த மனதிருப்தி உங்கள் களைப்பை போக்கிவிடும். உற்சாகத்தை கொண்டு வந்து சேர்க்கும். குடும்ப ஒற்றுமை இந்த நாளில் அதிகமாக இருக்கும். வாழ்க்கை துணையுடைய சப்போர்ட் நன்மையை செய்யும்.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam