– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உயர்வு நிறைந்த நாளாக இருக்க போகின்றது. புதிய முயற்சிகள் மேற்கொள்ளலாம். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு தேவையான அத்தனை முயற்சிகளையும் செய்யலாம். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மன நிம்மதி அடைவீர்கள். தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்தவும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கும். வேலையை எல்லாம் சுலபமாக செய்து முடித்து விடுவீர்கள். திறமையாக செயல்படுவீர்கள். தொழிலில் இருக்கும் சிக்கல்களில் இருந்து விடுபட சமயோகித புத்தியோடு செயல்படுவீர்கள். நல்லது நடக்கவில்லையே என்று காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு கூட இன்று நல்லது நடக்கும்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று பிரச்சனைகள் தீரும். எதிரிகள் முன்பு தலை நிமிர்ந்து வாழக்கூடிய அளவுக்கு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கோர்ட் கேஸ் வழக்குகளில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். வேலை செய்யும் இடத்திலும், தொழிலிலும் கொஞ்சம் கவனத்தோடு இருந்து கொள்ளுங்கள். கவனம் இல்லாமல் செய்யக்கூடிய வேலையில் சிக்கல்கள் வரலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் சோர்வாக காணப்படுவீர்கள். உடல் அசதி இருக்கும். வேலையை சுறுசுறுப்பாக செய்ய முடியாது. முடிந்தவரை ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். மற்றபடி பெருசாக எந்த பிரச்சனையும் இல்லை. குடும்பத்தில் நிம்மதி இருக்கும். சுப செலவுகள் உண்டாகும். நெருங்கிய நண்பர்கள் உறவுகளை விட்டு பிரிவதற்கு இன்று வாய்ப்புகள் இருக்கிறது. சில பேருக்கு நீண்ட தூர பயணம் வரும்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். வேலையில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட, நண்பர்களாக மாறுவார்கள். தொழிலில் பாட்னரோடு கவனமாக பேசி பழகுங்கள். கடனுக்கு யாரிடமும் வியாபாரம் செய்யாதீர்கள். முதலீட்டுக்கு தேவையான நிதி கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தலாம். ஆரோக்கியத்தில் சின்ன சின்ன பின்னடைவுகள் உண்டாகும். ஆரோக்கிய பிரச்சனை என்றால் உடனே மருத்துவரை பார்க்கவும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று ஏற்ற இறக்கங்கள் வரக்கூடிய நாளாக இருக்கும். காலை நேரத்தில் சின்ன சின்ன சங்கடங்கள் பிரச்சனைகள் வந்தாலும், அதெல்லாம் மாலை சரியாகிவிடும். மாலை நேரம் குடும்பத்தோடு சந்தோஷமாக நேரத்தை செலவு செய்வீர்கள். வீட்டில் சுப காரியம் நிகழ்ச்சிகளை தொடங்க உண்டான நேரம் காலம் வந்துவிட்டது. சுப செலவுகள் வரும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். பெரியவர்களை ஆசீர்வாதமும், கடவுளின் ஆசிர்வாதமும் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் புது எதிரிகள் உருவாகுவார்கள். இருக்கும் வேலையை விடக்கூடாது, தக்க வைத்துக் கொள்வது தான் புத்திசாலித்தனம். தொழிலில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். புதிய முதலீடு செய்ய வேண்டாம். தெரியாத தொழிலை துவங்க வேண்டாம். அகல கால் வைக்காதீங்க.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று திறமைகள் வெளிப்படும் நாளாக இருக்கும். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். கடினமான வேலைகளை கூட சுலபமாக முடிப்பீர்கள். சுற்றி இருப்பவர்களிடம் பாராட்டு கிடைக்கும். சந்தோஷம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும். வரா கடன் வசூல் ஆகும். சிலருக்கு சொத்து சுகம் வாங்கக்கூடிய யோகமும் இருக்கிறது. நல்ல வேலைகளை தள்ளிப் போடாதீங்க. முயற்சிகளை இன்றைக்கே துவங்குங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற பயம் இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். குடும்ப விஷயங்களை அடுத்தவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன சண்டைகள் வரலாம். பொய் சொல்லி தப்பிக்க நினைக்க வேண்டாம். உண்மையை சொல்லி பிரச்சனை வந்தாலும் பரவாயில்லை, பொய் சொல்லும் போது பிரச்சனைகள் பெருசாக வாய்ப்பு உள்ளது ஜாக்கிரதை.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சண்டை சச்சரவுகள் வரக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. நண்பர்களோடு உறவுகளோடும், அக்கம் பக்கம் இருப்பவர்களுடன் ஜாக்கிரதியாக பேசி பழகவும். மேலதிகாரிகளை அனுசரித்து செல்லவும். முன் கோபத்தை குறைக்கவும். தேவையில்லாத விஷயத்தில் மூக்கை நுழைக்காதீர்கள். ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் வரும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர வாய்ப்புகள் இருக்கிறது. வீட்டில் பிள்ளைகளால் மனம் மகிழ்ச்சி ஏற்படும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். சீக்கிரம் ஜீரணமாகாத பொருட்களை சாப்பிடாமல் இருப்பது நல்லது.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல ஓய்வு நிறைந்த நாளாக இருக்கும். எந்த ஒரு பதட்டமும் இருக்காது. வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். தொழிலில் சுமூகமான போக்கே நிலவும். மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். உறவுகளிடத்தில் கவனமாக பேசவும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளவும். பொறுமையாக இருந்தால் நிறைய நல்ல விஷயங்களை சாதிக்கலாம்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam