இன்றைய ராசிபலன் – 24 செப்டம்பர் 2024

இன்றைய ராசிபலன் – 24 செப்டம்பர் 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வாழ்க்கையில் உயர்வு நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வீடு நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். வேலை செய்யும் இடம் தொழில் எல்லா இடத்திலும் உங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். திறமைகள் வெளிப்படக்கூடிய நாள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று முன்கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். உங்களுக்கு வரக்கூடிய நல்லது எல்லாம் உங்களுடைய முன்கோபத்தால், உங்கள் கையை விட்டு நழுவி செல்ல வாய்ப்புகள் இருக்கிறது. பொறுமை இன்று அவசியம் தேவை. குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இன்று கோபம் வரக்கூடாது பெரியவர்களை அனுசரித்து செல்ல வேண்டும். பழிவாங்கும் உணர்ச்சியை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மனது தெளிவு அடையக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக குழப்பமாக இருந்த ஒரு பிரச்சனைக்கு இன்று முடிவு எடுக்கலாம். வீட்டில் கணவன் மனைவி பிரச்சனை சரியாகும். நீண்ட நாள் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. இருக்கும் வேலையில் இடம் மாற்றம் ஏற்படும். பதிவு உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கவும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். எந்த ஒரு விஷயத்திலும் தனித்து நின்று ஜெயிகங முடியாது. உங்களை தோற்கடிக்க சுற்றி நாலு பேர் இருப்பார்கள். அவர்களை சரிகட்டி போராடவே இன்றைய நாள் சரியாகிவிடும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மன நிறைவான நாளாக இருக்கும். உற்சாகத்தோடு இன்று வீட்டு வேலையை செய்வீர்கள்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக்கூடிய நாளாக இருக்கும் நீண்ட நாள் பிரச்சனைகள் விலகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வேலையில் இருந்து வந்த தடைகள் நீங்கும். சுதந்திரமாக உங்கள் வேலையை செய்வதற்கு உண்டான வாய்ப்புகள் கிடைக்கும். சுதந்திரமாக உங்கள் மனதில் பட்டதை பேசுவீர்கள். தொழிலிலும் எதிர்பார்த்த அளவு லாபம் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். எதிர்பார்த்த பணம் கையை வந்து சேரும். கடன் பிரச்சனை நீங்கும்.‌ தொழிலில் இருந்து வந்த தடைகள் விலகும். தொழிலை விரிவுபடுத்தலாம். பாட்னர்ஷிப் போட்டுக் கொள்ளலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் இருக்கக் கூடாது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தால் தான் குடும்பத்தில் நிம்மதி பிறக்கும்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற பகைகள் உண்டாக வாய்ப்புகள் இருக்கிறது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். தேவையற்ற பிரச்சனைகளில் மூக்கை நுழைக்கக் கூடாது. குறிப்பாக குடும்பத்தில் உறவுகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். அனுசரணை தேவை. புதிய முயற்சிகளை நாளை தள்ளி வைக்கவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை இருக்கும். நீங்கள் நினைத்த காரியத்தை சாதிப்பீர்கள். கொஞ்சம் அடம் பிடிப்பீர்கள். குறிப்பாக உங்கள் வீட்டில் இருக்கும் பிள்ளைகளை சமாளிப்பதில் சிரமம் இருக்கும். தேவையற்ற செலவுகளை இழுத்து விட்டு விடுவார்கள். கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். வீண் விரைய செலவு இன்று உங்களுக்கு கொஞ்சம் சங்கடத்தை கொடுக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று முடிவுகளை தீர்க்கமாக எடுப்பீர்கள். வேண்டுமென்றால் வேண்டும், வேண்டாம் என்றால் வேண்டாம். குழப்பத்திற்கான இடமே இருக்காது. இதனால் நிறைய நல்ல விஷயங்கள் உங்களுக்கு நடக்கும். எதிரிகள் உங்களை விட்டு விலகுவார்கள். தேவையற்ற பிரச்சனைகள் தலைவலியில் இருந்து விடுபடுவீர்கள். இந்த நாள் உங்களுக்கு நிறைவான நாளாக இருக்கும். இரவு நல்ல தூக்கம் கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் பொறுமை தேவை. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஒரு முடிவை எடுக்கக் கூடாது. பெரியவர்களின் ஆலோசனைப்படி நடக்க வேண்டும். ஏற்ற இறக்கங்களை பற்றி யோசிக்க வேண்டும். லாப நஷ்டத்தை பற்றி யோசிக்க வேண்டும். தொழிலில் அதிரடி முடிவை எடுக்காதீங்க. கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நிதானம் உங்களுக்கு இன்று நன்மை செய்யும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மனமகிழ்ச்சி இருக்கும். குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்று நேரத்தை செலவு செய்வீர்கள். சுப செலவு ஏற்படும். அலுவலகத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் உண்டாகும். வேலை பளு அதிகரிக்கும். சொன்ன நேரத்தில் வேலையை செய்து தருவதற்கு உண்டான முயற்சிகளை எடுக்க வேண்டும். நேரத்தை வீணடிக்க கூடாது தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். முதலீட்டில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற எதிர்ப்புகள் இருக்கும். மேனேஜரை சமாளிப்பதில் சிரமங்கள் இருக்கும். நீண்ட தூர பயணத்தின் மூலம் அலைச்சல் ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். உணவு பழக்க வழக்கங்களை சீர்படுத்துவதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top