இன்றைய ராசிபலன் – 24 ஜூன் 2024

இன்றைய ராசிபலன் – 24 ஜூன் 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தொட்டதெல்லாம் வெற்றி அடையும். நீங்கள் சென்ற இடமெல்லாம் ஒரு பாசிட்டிவ் எனர்ஜி உருவாகும். மனதிற்கு பிடித்தமான வேலைகளை செய்யுங்கள். காதலை வெளிப்படுத்த இன்றைய நாள் உகந்த நாளாக அமையும். வாழ்க்கை சுவாரஸ்யமான நிறைய விஷயங்களை உங்களுக்கு கற்றுக் கொடுக்கப் போகின்றது. வேலை தொழில் எல்லாம் நீங்கள் நினைத்ததை விட நல்லபடியாக செல்லும் சந்தோஷமாக இருங்கள். ‌
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்ப ரொம்ப நல்ல நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். வேலையில் சுறுசுறுப்போடு இருப்பீர்கள். தொழிலில் இருந்து வந்த தடைகளை எல்லாம் தாண்டி முன்னேற்ற பாதைக்கு செல்லக்கூடிய வழியை நாடுவீர்கள். உங்களுக்கு உதவியாக நண்பர்களும் உறவுகளும் இருப்பார்கள். நிம்மதியான நாளாக இருக்கும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வாழ்க்கையில் தேவையற்ற பயம் இருக்கும். எந்த வேலையை செய்வது எந்த வேலையை செய்யக்கூடாது என்று குழப்பத்திலேயே இருப்பீர்கள். மனதிற்கு சரி என்று பட்ட வேலையை செய்யுங்கள். கடவுளின் மீது நம்பிக்கை வையுங்கள். அவன் மீது பாரத்தை போட்டு வேலைகளை தொடங்கலாம். காலையில் கோவிலுக்கு சென்று பிறகு அன்றாட வேலையை தொடங்கவும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று இறக்க குணம் இருக்கும். அடுத்தவர்கள் கேட்காமலேயே நீங்களே உதவி செய்வீர்கள். மனநிம்மதை அடைவீர்கள். வருமானத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில் கூடுதல் கவனம் செலுத்தவும். சோம்பேறித்தனம் இருக்கக் கூடாது. இன்றைக்கான வேலையை முக்கியமாக நாளைக்கு தள்ளிப் போடவே கூடாது பாத்துக்கோங்க. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று எல்லா விஷயத்திலும் கொஞ்சம் பேராசை இருக்கும். நிறைய சம்பாதிக்கணும். இன்றே பணக்காரராகனும். இன்றே இந்த நகையை வாங்கணும் என்று சில பேர் அடம்பிடிப்பீங்க. அடம்பிடித்து கையில் இருக்கும் பணத்தை செலவு செய்யாதீங்க. இன்று தேவை இல்லாத நஷ்டம் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. பேராசை பெருநஷ்டம் என்று சொல்லுவார்கள் அல்லவா அது உங்களுக்கு இன்று பொருந்தும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்வு இருக்கும். வாரத்தில் முதல் நாளே ஜாக்பாட் அடிக்க போகிறது. வேலை செய்யும் இடத்தில் நல்ல பாராட்டுகள் இருக்கும். யாரோ செய்த வேலைக்கு எல்லாம் உங்களை புகழ்ந்து தள்ளுவார்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலிலும் நல்ல லாபம் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த சண்டை சச்சரவுகள் சரியாகும்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு நீண்ட நாள் பிரச்சனை இன்று சரியாகிவிடும். தொழிலில் இருந்து வந்த சிக்கல்கள் விளங்கும். புதிய முதலீட்டை செய்யலாம். வங்கி கடன் முயற்சி செய்யலாம். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். சுப செலவுகள் உண்டாகும். சுப காரிய தடை விலகும். குழந்தைகள் கல்வியில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். இன்று பணம் வீண் விரயம் ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளது கொஞ்சம் கவனமாக இருக்கவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற செலவுகள் வரிசை கட்டி நிற்கும். ஆனால் செலவுகளையும் தவிர்க்க முடியாத சூழ்நிலை உண்டாகும். சில பேர் கடன் வாங்கி செலவு செய்யக்கூடிய நிலைமைக்கு தள்ளப்படுவீர்கள். கொஞ்சம் கவனமாக இருங்கள். அவசரப்பட்டு எந்த ஒரு வேலையும் செய்யாதீங்க. இன்று நிதானமாக இருக்க வேண்டும். யாராவது பேசி உங்களை குழப்பினால் கூட மனம் தடுமாறக்கூடாது. குறிப்பாக பண விஷயத்தில்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத வரவு மன நிம்மதியை கொடுக்கும். கடன் பிரச்சனையிலிருந்து உங்களை வெளிவர செய்யும். நகையை அடமானம் வைத்திருப்பது, சொத்து பத்திரத்தை அடமானம் வைத்து விட்டு சிக்கலில் இருப்பவர்கள் எல்லாம், இன்று அந்த சிக்கலில் இருந்து விடுபடுவீர்கள். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். குலதெய்வத்திற்கு நன்றி சொல்லுங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று எல்லா விஷயத்திலும் அதிகமாக ஆர்வம் செலுத்தி, புது விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். இதனால் பதிவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். தொழிலில் சின்ன சின்ன சிக்கல்கள் வரலாம். முதலீடு செய்யும் போது கவனம் செலுத்தவும். பார்ட்னரிடம் கவனமாக பேசவும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மனது ரொம்ப ரொம்ப தெளிவாக இருக்கும். எந்த விஷயத்தை செய்யணும் எந்த விஷயத்தை செய்யக்கூடாது என்று உறுதியோடு செயல்படுவீர்கள். இதனால் உங்களைப் பார்த்து நாலு பேர் நல்ல விஷயங்களை கற்றுக் கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. நிறைய பேருக்கு நீங்கள் முன் உதாரணமாக திகழப் போகிறீர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வாய் தகராறுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். வார்த்தைகளை பேசும்போது கவனமாக இருக்கவும். குறிப்பாக வேலையில் கவனம் இருக்கட்டும். எந்த விஷயத்திலும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவு எடுக்கக் கூடாது. பெரியவர்களின் ஆலோசனையை கேட்டு நடக்கவும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top