இன்றைய ராசிபலன் – 24 ஜூலை 2024

இன்றைய ராசிபலன் – 24 ஜூலை 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பலம் வாய்ந்த நாளாக இருக்கும். எல்லா விஷயத்திலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். ஏதாவது ஒரு வகையில் நண்பர்களோ உறவுகளோ உங்களுக்கு உறுதுணையாக நிற்பார்கள். மனம் நிறைவாக இருக்கும். முடிந்தால் இன்று கோவிலுக்கு சென்று பிள்ளையாருக்கு சிதறு தேங்காய் உடையுங்கள். நிச்சயம் வாழ்க்கையில் எதிர்பார்க்காத சங்கடங்கள் தீரும். நல்லது நடக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன கவலை இருக்கும். நீண்ட தூர பயணத்தின் போது பிரச்சனைகள் வர வாய்ப்புகள் இருக்கிறது. வேலையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். புதிய முயற்சிகளை நாளை தள்ளி வைக்கவும். நிதி நிலைமை கொஞ்சம் மோசமாக இருக்கும். உங்களுடைய சங்கடங்கள் தீர வேண்டும் என்றால் பிள்ளையாருக்கு கொழுக்கட்டை பிரசாதம் செய்து கொடுத்து வழிபாடு செய்யுங்கள். நல்லது நடக்கும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். குடும்பத்தோடு கோவிலுக்கு செல்லக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். சில பேருக்கு குலதெய்வ கோவிலுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உற்சாகத்தோடு புது விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். நிதி நிலைமை சீராகும். கடன் சுமை குறையும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் குடும்பத்தில் நீங்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நம்பர் 1 இடத்தை நீங்கள் பிடிப்பதற்கு நிறையவே வாய்ப்புகள் இருக்கிறது. உங்களுடைய உழைப்புக்கு ஏற்ற வெற்றியை கடவுள் நிச்சயம் உங்களுக்கு இன்னைக்கு காட்டிக் கொடுப்பான்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத நன்மைகள் நடக்கும். முதலீட்டில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலை விரிவுபடுத்தலாம். புதிய மனிதர்களின் சந்திப்பு உங்களுக்கு நிறைய அனுபவங்களை சொல்லித் தரும். நாமும் இதுபோல வாழ்க்கையில் மென்மேலும் உயர வேண்டும் என்று விடாமுயற்சிகளை மேற்கொள்ள தொடங்கி விடுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வீட்டில் இருப்பவர்களுடைய ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றிவாகை சூடக்கூடிய நாளாகத்தான் இருக்கும். புதிய வாய்ப்புகள் வாசல் கதவை தட்டும். நிதிநிலைமை மேலோங்கும். கடன் சுமையிலிருந்து வெளிவருவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் முன்பின் தெரியாத நபரோடு பழகக் கூடாது. வீட்டில் இருக்கும் உறவுகளை அனுசரித்து செல்லவும்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று அடுத்தவர்களுக்கு உதவி செய்யக்கூடிய மனப்பக்குவம் இருக்கும். பொது சேவையில் உங்களை நீங்களே ஈடுபடுத்திக் கொள்வீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் வரும். புதிய எதிரிகள் உருவாக வாய்ப்புகள் உள்ளது. மேலதிகாரிகள் உங்கள் சொல் பேச்சைக் கேட்க மாட்டார்கள். சில வாக்குவாதங்கள் வரலாம். இருப்பினும் அனுசரித்து செல்வது நல்லது. இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வதே புத்திசாலித்தனம்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்கும். மனக்குழப்பம் இருக்கும். முடிவுகளில் தெளிவு இருக்காது. இதனால் புதிய முயற்சிகளை நாளை தள்ளிப் போடுங்கள். பெரியவர்களது சொல் பேச்சு கேட்டு நடக்கவும். அடம் பிடித்து எந்த காரியத்தையும் சாதிக்க வேண்டாம். நிறைய பணத்தை செலவு செய்து எந்த பொருளையும் வாங்காதீங்க.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் சின்ன சின்ன குறைபாடுகள் இருக்கும். உடல் நலம் சுகம் இல்லாத காரணத்தால் மனது எந்த ஒரு வேலையிலும் சரியாக ஈடுபடாது. தேவைப்படுபவர்கள் வேலைக்கு லீவு போட்டுவிட்டு வீட்டிலேயே ஓய்வு எடுக்கலாம். குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வர வாய்ப்புகள் இருக்கிறது. மற்றபடி நிதிநிலைமை சீராகும். கடன் தொகை வசூல் ஆகும் பொன் பொருள் சேர்க்கை இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும்.  தொழிலை விரிவு படுத்தலாம். அதற்கு தேவையான முதலீடு குறைந்த வட்டியில் வங்கியில் கிடைக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மேலதிகாரிகளின் அனுசரணையை பெறுவீர்கள். உங்களை நம்பாமல் இருந்தவர்களுக்கு எல்லாம், உங்கள் மீது பெரிய அளவில் நம்பிக்கை வரும் நல்லதே நடக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று திறமைகள் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்கும். வீட்டில் இருப்பவர்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் கொஞ்சம் செலுத்த வேண்டும். தேவையற்ற பிரச்சனைகளில் மூக்கை நுழைக்க வேண்டாம். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் புதிய சாதனை படைப்பீர்கள். உங்களை நம்பி எல்லா பொறுப்புகளையும் மேலதிகாரிகள் ஒப்படைப்பார்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த சட்டை சச்சரவுகள் ஒரு முடிவுக்கு வரும். உங்களுடைய சங்கடங்கள் தீர வேண்டும் என்றால் இன்று விநாயகருக்கு விளக்கு போடுங்கள்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top