– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நலம் தரும் நாளாக இருக்கும். எந்த ஒரு அலைச்சலும் இருக்காது. அந்தந்த நேரத்தில் அந்தந்த வேலைகள் சரியாக நடக்கும். இன்றைய நாள் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். இறையருள் உங்களுக்கு இருக்கிறது. வீட்டில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் எல்லாம் விலகும். பண பிரச்சனை தீரும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கப் போகிறது. தொழிலில் முன்னேற்றம் இருக்கும். நீங்கள் கொடுத்த கடன் எல்லாம் திரும்பி வசூல் ஆகும். இப்படி ஏதாவது ஒரு வகையில் கையில் பணம் வந்து சேரும். வேலையில் இருந்த பிரச்சனைகள் விலகும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். சுப காரிய பேச்சுக்கள் தொடங்கும்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். மேலதிகாரிகளை எதிர்த்து பேசக்கூடாது. வீட்டில் இருக்கும் பிள்ளைகள், பெற்றவர்களை எதிர்த்து பேசக்கூடாது. மாணவர்கள் ஆசிரியர்களை எதிர்த்து பேசக்கூடாது. இதுபோல உங்களுடைய பணிவு உங்களுக்கு நல்ல பெயரை வாங்கித் தரும். எதிர்த்து பேசினால் பிரச்சனையில் சிக்கிக் கொள்வது நீங்கள் தான். பார்த்துக் கொள்ளுங்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி இருக்கும். எந்த வேலையை கையில் எடுத்தாலும் யாரிடம் ஆவதுபோட்டிப் போட்டுக் கொண்டு திரிய போகிறீர்கள். இதனால் இந்த நாள் ரொம்பவும் ஜாலியாக செல்லும். அதே போல நேரம் போனதே தெரியாது. உங்களுடைய வேலையை சரிவர செய்து முடித்து விடுவீர்கள். போனபோக்கில் அடுத்தவர்களுடைய பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பீர்கள். இந்த நாள் நிம்மதியும் சந்தோஷமும் சுறுசுறுப்பும் உற்சாகமும் சேர்ந்து உங்களுக்கு கிடைக்கும்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று பிரச்சனைகள் தீரக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக இருந்த சிக்கல்கள் நீங்கும் கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பை கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். நீண்ட தூர பயணத்தை மட்டும் கொஞ்சம் தவிர்த்துக் கொள்ளுங்கள். உடலுக்கு சூடு தரும் பொருட்களை சாப்பிட வேண்டாம். வாழ்க்கை துணையோடு வாக்குவாதம் செய்ய வேண்டாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்களைப் பற்றி புரிந்து கொள்வார்கள். எதிரிகள் கூட நண்பர்களாக மாறக்கூடிய நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன சஞ்சலம் இருக்கும். எதையோ சிந்தித்துக் கொண்டே இருக்கின்ற வேலையை சரியாக பார்க்க மாட்டீர்கள். இதனால் நிறைய வேலைகள் தேங்கி நிற்கும். உடல் சோர்வு ஏற்படும். இந்த நாள் இறுதியில் தேவையற்ற டென்ஷனை சந்திக்க வேண்டிய நிலை இருக்கும். இந்த நாள் துவங்கும் போதே மனதை ஒருநிலைப்படுத்தி வேலையில் கவனம் செலுத்துபவர்கள் தப்பித்துக் கொள்வீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று கவனமாக இருக்க வேண்டிய நாள். அலட்சியத்தோடு எந்த வேலையும் செய்யக்கூடாது. குறிப்பாக மாணவர்கள் உங்கள் கல்வியில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலதிகாரிகளாக இருந்தால் ஆவணங்களை படித்து விட்டு கையொப்பம் இடவும். பணப்பரிவுரதனையில் கவனமாக இருக்கவும். தெரியாத மூன்றாவது நபருக்கு எல்லாம் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். பிரச்சனைக்கு தக்க சமயத்தில் உதவி செய்ய நண்பர்களும் உறவுகளும் வருவார்கள். வாழ்க்கையில் நிறைய அனுபவங்களை கற்றுக் கொள்வீர்கள். அதையெல்லாம் பாடமாக எடுத்துக் கொள்ளுங்கள். தோல்வியை கண்டு துவண்டு போகக்கூடாது. வெற்றியை நோக்கி துணிந்து பயணம் செல்வது இன்றைய நாளை உங்களுக்கு இனிமையாகி தரும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று முயற்சிகள் வெற்றி அடையக்கூடிய நாளாக இருக்கும். வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நகர்த்திச் செல்ல நிறைய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். கலைஞர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பெயர் புகழ் கிடைக்கும். சம்பள உயர்வோடு சில பேருக்கு பிரமோஷன் வாய்ப்புகளும் தேடி வரும். ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் உங்களுக்கான அந்தஸ்து உயரும். சொத்து சுகம் சேரும். வாழ்க்கையில் உயர்ந்த மனிதர் என்ற பதவியை பெறுவீர்கள். உங்களை கௌரவ படுத்த பாராட்டுகளும் நடக்கும். பரிசுகளும் கொடுக்கப்படும். அந்த அளவுக்கு இன்று சுபிட்சமான நாளாக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். நீங்கள் அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். மனநிறைவை பெறுவீர்கள். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். சொன்ன வாக்கை சரியான நேரத்தில் காப்பாற்றி தருவீர்கள். நீண்ட தூர பயணத்தின் மூலம் சின்ன சின்ன அலைச்சல்கள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். உடலுக்கு ஆரோக்கியம் இல்லாத உணவுகளை சாப்பிட வேண்டாம்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam