இன்றைய ராசிபலன் – 25 டிசம்பர் 2024

இன்றைய ராசிபலன் – 25 டிசம்பர் 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வளர்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ளலாம். நீண்ட நாட்களாக ஒரே பதவியில், ஒரே வீட்டில், ஒரே வேலையை செய்து கொண்டிருப்பவர்களுக்கு இன்று ஒரு நல்ல புதிய மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல உயர்வு இருக்கும். சந்தோஷம் பெருகும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று அன்பு வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். வீட்டில் இருந்த சண்டை சச்சரவுகள் தீரும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். காதல் கைகூடும்‌. திருமணம் வரை செல்லும். வேலையில் நல்லது நடக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த போட்டி பொறாமைகள் தானாக விளக்கும். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சுபமான நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புகள் இருக்கிறது. உங்களுடைய பிள்ளைகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். சுப செலவு கூடும். சுப வேலைகள் துவங்கும் நாளாக இருக்கும். வேலையில் சின்ன சின்ன டென்ஷன் இருக்கும். மேலதிகாரிகளுடைய ஆதரவு கிடைக்காமல் பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. ஜாக்கிரதையாக இருங்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் சுறுசுறுப்போடு இருப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். வேலைகளை எல்லாம் சரிவர செய்து முடிப்பீர்கள். மனதில் ஒரு திருப்தி இருக்கும். நிதி நிலைமை சீராக இருக்கும். கணவரின் ஆதரவு கிடைக்கும். சந்தோஷம் பெருகும்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நட்பு ரீதியாக நல்லது நடக்கும். புது நட்பு வந்தாலும் சரி, அல்லது இருக்கின்ற நட்பே உங்களுக்கு நல்லது செய்தாலும் சரி, ஏதோ ஒரு ஃபிரண்ட்ஷிப் உங்களை காக்க போகிறது. சந்தோஷப்படுத்த போகிறது. வேலையில் நல்லது நடக்கும். வியாபாரத்தில் நல்ல லாபத்தை எடுப்பீர்கள். திறமையாக பணிபுரிவீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நாள் ரொம்பவும் அமைதியான நாளாக செல்லும். எந்த ஆர்ப்பாட்டமும் இருக்காது. எந்த பிரச்சனையும் இருக்காது. அந்தந்த வேலைகள் அந்தந்த நேரத்தில் நடக்கும். சந்தோஷம் அதிகரிக்கும். சுப செலவுகள் ஏற்படும். மனதிற்கு பிடித்த நபரின் வாயால் ஒரு நல்ல செய்தியும் கிடைக்கும்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று புகழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பாராட்டும் கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடப் போகிறார்கள். அந்த அளவிற்கு உங்களுடைய உழைப்பும் இருக்கும். விடாமுயற்சியானது விஸ்வரூப வெற்றியைத் தரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று ஆதரவு நிறைந்த நாளாக இருக்கும். பிரச்சனைகள் வந்தாலும் உங்களை சுற்றி இருப்பவர்கள் கைவிட மாட்டார்கள். நண்பர்கள் உறவுகளை பற்றிய அருமைகளை நன்றாக தெரிந்து கொள்வீர்கள். நல்ல அனுபவங்கள் கிடைக்க கூடிய நாளாக இருக்கும். தலைகனம் குறையும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று ரொம்பவும் மேன்மையாக நடந்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நடத்தை உங்களுக்குள் இருக்கும். சில்லறைத்தனமாக எப்போதும் சண்டை போட்டுக் கொண்டிருப்பவர்கள் கூட, இன்று விட்டுக் கொடுத்து செல்வீர்கள். ஏதோ ஒரு நல்ல சக்தி உங்களுக்குள் புகுந்து ஆட்டிப்படைக்க போகிறது. நிறைய நல்ல மாற்றங்கள் உங்களுக்குள் நிகழும். சந்தோஷத்தில் இந்த நாளை நகர்த்தி செல்லலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கும். நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம், நல்ல வேலை, நல்ல வியாபாரம் என்று எல்லாம் நல்லபடியாக நடந்து முடியும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். வாழ்க்கை துணைக்கு நன்றி சொல்லுங்கள். குடும்பத்தில் ஒருவரை ஒருவர் பாராட்டி நன்றிகளை பரிமாறிக் கொள்ளும் போது சந்தோஷம் இன்னும் இரட்டிப்பாகும். முயற்சி செய்து பாருங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். சின்ன சின்ன பொருள் இழப்பீடு பண இழப்பீடு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கவனமாக இருந்தால் அந்த இழப்புகளை சரி கட்டிவிடலாம். மூன்றாவது நபரின் பேச்சை முழுமையாக நம்ப கூடாது. அதிக வட்டிக்கு கடன் வாங்க கூடாது. தெரியாத விஷயத்தில் அகல கால் வைக்க கூடாது. அன்றாட வேலை மட்டும் கவனம் செலுத்துங்கள் போதும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் போட்டி பொறாமை இருக்கும். உடல் அசதி இருக்கும். செய்யும் வேலையில் டென்ஷன் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தொலைபேசியின் மூலம் பிரச்சனைகள் வரலாம். எதுவாக இருந்தாலும் பொறுமையாக நிதானமாக எதிர்கொள்ளுங்கள். இறைவனை நம்புங்கள் நல்லதே நடக்கும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top