இன்றைய ராசிபலன் – 26 செப்டம்பர் 2024

இன்றைய ராசிபலன் – 26 செப்டம்பர் 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். உற்சாகத்தோடு இந்த நாளை தொடங்குவீர்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். நீண்ட நாள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல வேலை உங்கள் கையை வந்து சேரும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருக்கவும். முன்பின் தெரியாத நபருக்கு ஜாமின் கொடுக்காதீங்க.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற செலவுகள் வரக்கூடிய நாளாக இருக்கும். சேமிப்பு கரையும். சின்ன சின்ன விஷயங்களில் ஏமாற்றங்கள் ஏற்படும். வேலையில் மனநிறைவு இருக்காது. கடமைக்காக தான் வேலை செய்வீர்கள். இதனாலேயே பல பிரச்சனைகள் வரும். விருப்பம் இல்லாமல் எந்த வேலையும் செய்யாதீங்க. முடிந்தால் வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு நிம்மதியாக தூங்கி எழுந்து மனதை ஒருநிலைப்படுத்தி பின்பு ஆர்வத்தோடு வேலை செய்தால் நல்லது.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். சின்ன சின்ன இழப்பீடுகளை எல்லாம் சரி கட்டி விடுவீர்கள். வாங்கிய சில்லறை கடனை எல்லாம் திருப்பிக் கொடுத்து விடுவீர்கள். தொழிலிலும் வேலையிலும் அதிக கவனம் இருக்கும். குடும்பம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்ய நிறைய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். எல்லா வேலையையும் சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள். தேவையற்ற சிந்தனைகள் விலகும். இறைவழிபாடு செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடு விலகும். நிதிநிலைமை சீராகும்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். எதிரிகள் முன்பு ஜெயித்து காட்டுவீர்கள். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பார்ட்னரை சரிகட்டி உங்கள் முன்னேற்றத்திற்கு தேவையான எல்லா விஷயத்தையும் சாதித்துக் கொள்வீர்கள். உங்கள் முன்பு இன்று யாராலும் பேசி ஜெயிக்க முடியாது. இன்றைய நாள் புதிய அனுபவங்கள் நிறைய பாடங்களை கற்றுக் கொடுக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தடங்கல்கள் வரும். முயற்சிகள் தோல்வியில் முடியும். உடல் சோர்வு மனசோர்வு ஏற்படும். இருந்தாலும் எதையும் பொருட்படுத்தக் கூடாது. வாழ்க்கையில் அடுத்த கட்ட நகர்வை நோக்கி சென்று கொண்டே இருங்கள். இறையருள் உங்களுக்கு இருக்கிறது. அனுபவ சாலிகளை பக்கத்திலேயே வைத்துக் கொள்ளுங்கள். முன் கோபத்தை குறைத்து நிதானத்தோடு சிந்தித்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நிம்மதியான நாளாக இருக்கும். வேலை தொழில் எல்லாம் சமூகமாக செல்லும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு நல்ல ஓய்வு கிடைக்கும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். வேலைக்கு செல்லும் ஆண்களுக்கு மேனேஜரால் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். அதையெல்லாம் சமாளிக்க கூடிய திறமை உங்களிடத்தில் இருக்கிறது. எதுவாக இருந்தாலும் நேர்மையாக இருந்து கொள்ளுங்கள்.‌ பொய் சொல்லி தப்பிக்காதீங்க.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமை தேவை. அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. முன் கோபப்படக்கூடாது. வீட்டில் இருக்கும் பெரியவர்களை நிராகரிக்க கூடாது. அனுபவ சாலைகளின் பேச்சைக் கேட்டு நடத்தால் நல்லதே நடக்கும். வீண் செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். தொழிலில் முதலீடு செய்வதற்கும் முன்பு பலமுறை யோசிக்கவும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று திறமைகள் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டு. குடும்பத்தில் உறவுகளோடு இருந்து வந்த பிரச்சனைகள் விலகி சுமூகமான சூழ்நிலை நிலவும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று மனமகிழ்ச்சி இருக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும். சுப செலவுகள் உண்டாகும். பெற்றவர்களுடைய மனது நிறைவாக இருக்கும். பிள்ளைகளுக்கு தேவையான விஷயங்களை பார்த்து பார்த்து செய்வீர்கள். குடும்பத்தோடு குலதெய்வ வழிபாடு செல்வது நன்மையை தரும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சுடக்கூடிய நாளாக இருக்கும். உங்களுடைய முயற்சிகள் நல்ல வரவேற்பை பெறும். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன ஐடியாக்களை கொடுத்து பெரிய அளவில் நல்ல பெயரை வாங்கி விடுவீர்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். வீட்டு பெரியவர்களை எதிர்த்து பேசக்கூடாது. அனுசரித்து சென்றால் குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று பொறுமையோடு உங்கள் நாளை துவங்க வேண்டும். எந்த விஷயத்திலும் அவசரப்படக்கூடாது. வேலையில் எக்கத்தப்பாக எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. இருக்கும் வேலையை தக்கவைத்துக் கொள்வதே புத்திசாலித்தனம். வாழ்க்கை துணை பேச்சை கேட்டு நடப்பது நல்லது. செலவை குறைத்துக் கொள்ளுங்கள் சேமிப்பை உயர்த்த பாருங்கள்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top