இன்றைய ராசிபலன் – 26 ஜூன் 2024

இன்றைய ராசிபலன் – 26 ஜூன் 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சிந்தனை நிறைந்த நாளாக இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் ஆழ்ந்து யோசிக்காமல் செயல்படுத்த மாட்டீர்கள். அது மட்டுமல்லாமல் யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் என்பதை புரிந்து கொள்ளக்கூடிய பக்குவமும் உங்களுக்கு கிடைக்கும். ஆதாயம் நிறைந்த நாளாகவும் இருக்கும். வேலையிலும் தொழிலிலும் இருந்து வந்த இடர்பாடுகளை சரி செய்வீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். தேவையற்ற நட்பு உங்களை விட்டு தானாக பிரிந்து  போகும். கவலைப்படாதீங்க. கணவன் மனைவிக்கிடையே சின்ன சின்ன வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்தால் பிரச்சனை பெருசாகாது. வேலை செய்யும் இடத்தில் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். மேல் அதிகாரிகளை எதிர்த்து பேசாதீர்கள். சில நெலிவு சுளிவுகளோடு நடந்து கொள்ளும் பட்சத்தில் எதிரிகளால் தொல்லை இருக்காது.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்பவும் தெளிவான நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். எது நல்லது எது கெட்டது என்பதை ஆராய்ச்சி செய்து ஒரு நடுநிலைமையான முடிவை எடுப்பீர்கள். தொழிலில் சின்ன சின்ன சிக்கல்கள் வரும். முதலீட்டில் கவனம் செலுத்தவும். அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். மூன்றாவது நபரை நம்பி எந்த பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று உறுதியோடு இருப்பீர்கள். மனதில் நினைத்த வேலைகளை குறித்த நேரத்திற்குள் முடித்து விடுவீர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மேலதிகாரிகளிடம் பாராட்டும் கிடைக்கும். சில பேருக்கு ப்ரோமோஷன் கிடைக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. வீட்டில் இருக்கும் பெண்கள் வீட்டு வேலையில் அக்கறை காட்டுவீர்கள். வீட்டை சுத்தம் செய்வது வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை தூக்கி எறிவது போன்ற வேலைகள் எல்லாம் இன்று நடக்கும்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். எதிரிகளை வீழ்த்தி வெற்றிவாகை சூடுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பிரச்சனையை மேலதிகாரிகளுக்கு புரிய வைத்து மன நிம்மதி அடைவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத பண வரவு மன நிறைவை கொடுக்கும். சேமிப்பை உயர்த்தவும். யாரையும் நம்பி கடனுக்கு வட்டிக்கு பணம் கொடுக்காதிங்க.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் உஷாராக இருக்கும். தொழிலில் புதிய முதலீடு செய்ய வேண்டாம். ஏதாவது ஒரு வகையில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மலிவு விலையில் பொருட்கள் கிடைக்கிறதே என்று அவசரப்பட்டு போய் வாங்காதீங்க. ஜாக்கிரதையா இருந்துக்கோங்க. வேலை தொழில் எல்லாம் சுமூகமாகத்தான் செல்லும். குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் நடக்கும்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று இறக்க குணம் இருக்கும். அடுத்தவர்களுக்கு தேடி போய் உதவி செய்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள். அடுத்தவர்களுடைய வேலையையும் சேர்த்து நீங்கள் செய்ய வேண்டிய சூழ்நிலை உண்டாகும். இதனால் லேசாக உடல் சோர்வு ஏற்படும். கொஞ்சம் நிறைய தண்ணீர் குடியுங்கள். ஆரோக்கியமான உணவுப் பொருட்களை சாப்பிடுங்கள். நல்லது நடக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். சேமிப்பை ஜாக்கிரதியாக வைக்கணும். அடுத்தவர்களின் பேச்சை அனாவசியமாக கேட்கக் கூடாது. முன்பின் தெரியாத தொழிலிலோ வேலையிலோ காலை வைக்கக்கூடாது. பெரியவர்களின் ஆலோசனை இல்லாமல் பெரியவர்களுக்கு தெரியாமல் எந்த வேலையும் செய்யாதீங்க.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நீண்ட நாள் ஆசை நிறைவேற கூடிய நாளாக இருக்கும். காதலை வெளிப்படுத்தலாம். காதல் விவகாரம் திருமணம் வரை செல்லவும் வாய்ப்புகள் இருக்கிறது. சுப செலவுகள் உண்டாகும். வீட்டில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வேலை செய்யும் இடத்தில் கூடுதல் கவனம் இருக்கட்டும். பொறுப்புகளை மறந்து நேரத்தை வீணடிக்க கூடாது. தொழிலில் முன்பின் தெரியாத நட்பை பக்கத்தில் சேர்க்க வேண்டாம்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று எல்லா விஷயத்திலும் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். புது விஷயங்களை கற்றுக் கொள்வது, புதிய விஷயங்களை தொடங்குவது இப்படி நிறைய நல்ல விஷயங்களில் மனது ஈடுபடும். வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நோக்கி முன்னேற்றுவதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சேமிப்பு அதிகரிக்கும். தொழிலில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். போர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மனது இளகிய மனதாக இருக்கும். யாராவது வந்து உதவி என்று கேட்டால் உடனடியாக கையில் இருக்கும் பணத்தை கூட தூக்கிக் கொடுத்து விடுவீர்கள். உங்களை ஏமாற்ற நாலு பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். வெறும் வார்த்தைகளை நம்பி அடுத்தவர்களுக்கு உதவி செய்யாதீங்க. உங்களுடைய பலவீனத்தை புரிந்து கொண்டு நிறைய பேர் உங்களை ஏமாற்ற வாய்ப்பு உள்ளது. உஷாரா இருக்கணும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற பயம் இருக்கும். நீங்களே உங்களுடைய நிலைமையை யோசித்து யோசித்து சோர்வு அடைய கூடாது. நிலையை மாற்றுவதற்கு உண்டான வழியை தேடவும். விடாமுயற்சி செய்யுங்கள். நிதி நிலைமை கொஞ்சம் கீழ்நோக்கிச் செல்லும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை சில பேருக்கு உண்டாகும். செலவை குறைப்பது மட்டுமே இந்த பிரச்சனைக்கு வழிகாட்டும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top