– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று ரொம்பவும் பக்குவமான அனுபவ சாலிகளாக நடந்து கொள்வீர்கள். பிரச்சனைகள் உங்களைத் தேடி வந்தாலும் அதை நீங்கள் அணுகும் முறை ரொம்பவும் புத்திசாலித்தனமாக இருக்கும். உங்களோடு பழகுபவர்கள் உங்களிடம் இருந்து நிறைய நல்ல விஷயங்களை கற்றுக் கொள்வார்கள். அடுத்தவர்களுக்கு நிறைய உதவி செய்வீர்கள். நிறைய பக்குவங்கள் இன்று உங்களுக்கு கிடைக்கக்கூடிய நாளாக அமையும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத உதவியின் மூலம் பிரச்சனைகள் சரியாகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல் உபாதைகள் சரியாகும். வேலையில் மனநிறைவோடு உங்களுடைய பணியை தொடர்வீர்கள். தொழிலில் சின்ன சின்ன சிக்கல்கள் வரலாம். முதலீட்டில் கவனமாக இருக்கவும். பொறுப்புகள் அத்தனையையும் பார்ட்னரை நம்பி ஒப்படைக்க வேண்டாம்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சோர்வு கொஞ்சம் இருக்கும். கை கால் வலி ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. இதனால் வேலையில் சுறுசுறுப்பு இருக்காது. கொஞ்சம் பின்னடைவு உண்டாகும். தொழிலில் சின்ன சின்ன சிக்கல்கள் வரலாம். சின்ன சின்ன தோல்விகள் வரலாம். துவண்டு போகக்கூடாது. விடாமுயற்சி நிச்சயம் வெற்றியை கொடுக்கும். கணவன் மனைவிக்குள் சந்தோஷம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். பிரச்சனை என்று வந்தால் கூடுமானவரை யாரிடமும் வாக்குவாதம் செய்யாதீர்கள். செய்த தவறை கொஞ்சம் ஒப்புக் கொள்வது நல்லது. நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். எப்போதும் ஓய்வு எடுக்காமல் ஓடிக்கொண்டு இருக்க வேண்டாம்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக இருக்கும். மதியத்திற்கு மேல் உங்களுடைய நல்ல நேரம் ஆரம்பிக்கும். காலை நேரம் கொஞ்சம் மந்தமாகத்தான் இருக்கும். உங்களுடைய வேலைகளை எல்லாம் 1 மணி நேரத்திற்கு முன்பாகவே செய்ய தொடங்கி விடுங்கள். பெரியவர்கள் பேச்சை கேட்டு நடப்பது நல்லது. மாணவர்கள் தேவையில்லாத நட்பிடம் இருந்து விலகி இருக்கவும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். பிரிந்த உறவுகள் நண்பர்கள் மீண்டும் ஒன்று கூட வாய்ப்புகள் இருக்கிறது. சுப செலவுகள் ஏற்படும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியம் நிகழ்ச்சிகளை மீண்டும் பேச தொடங்கலாம். தொழிலில் புதிய முதலீடு செய்யலாம். வங்கி கடனுக்கும் முயற்சி செய்யலாம். கலைஞர்களுக்கு என்று இனிய நாளாக அமையும்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த பிரச்சனைகளுக்கு இன்று முற்றுப்புள்ளி வைப்பீர்கள். மாணவர்கள் கல்வியில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும். வீட்டில் இருக்கும் பெண்கள் வயதில் மூத்தவர்களை மரியாதையாக நடத்த வேண்டும். இல்லை என்றால் குடும்பத்தில் குழப்பம் நிலவும். பெண்கள் முன்கோபத்தை இன்று கட்டாயம் குறைத்துக் கொள்ளவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற செலவுகள் வரிசை கட்டி நிற்கக்கூடிய நாளாக இருக்கும். நிதி நிலைமை பற்றாக்குறையாக இருக்கும். இதனாலேயே பாதி டென்ஷன். வேலை ஓடாது, தொழிலில் கவனம் செலுத்த முடியாது. கேட்கவா வேண்டும். எரிச்சலை வீட்டில் காட்டினால் அங்கேயும் பிரச்சனை. என்ன செய்வது பொறுமையாக இருங்கள். கடவுளை நம்புங்கள் வேறு வழி இல்லை.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று திறமை வெளிப்படும் நாளாக இருக்கப் போகின்றது. உங்களை கைநீட்டி கெட்ட பெயர் சொன்னவர்கள் எல்லாம் இன்று உங்களை புகழ்ந்து பேசுவார்கள். சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். பெயர் புகழ் சில பேருக்கு பதவி உயர்வும் தேடி வரும் இடமாற்றம் நன்மையை தரும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மனக்குழப்பம் கவலை இருக்கும். குடும்பத்தில் நிம்மதி இருக்காது. பிள்ளைகள் கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் வாக்குவாதம் வர வாய்ப்புகள் உள்ளது. முன்கோபத்தை குறைக்கவும். பிரச்சனையை பெரிசாக்க வேண்டாம். யாராவது ஒருவர் விட்டுக் கொடுங்கள். உங்களுடைய குடும்ப விஷயத்திற்கு மூன்றாவது நபரை பஞ்சாயத்து செய்ய அழைத்து வராதீங்க.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக் கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு ரொம்ப ரொம்ப சப்போர்ட் ஆக இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். லாபம் அதிகரிக்கும். வாங்கிய கடனை எல்லாம் திருப்பி அடைப்பதற்கு உண்டான வழிவகை பிறக்கும். இரவு நல்ல தூக்கம் கிடைக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் நிறைந்த நாளாக தான் இருக்கும். வேலை பளு அதிகமாக இருக்கும். மேனேஜரிடம் பதில் சொல்லி சமாளிக்க முடியாது. சோம்பேறித்தனத்தை விட்டு விடுங்கள். கூடுதல் உழைப்போடு வேலை செய்யும்போது மட்டும்தான் உங்கள் வாழ்வில் விடிவு காலம் பிறக்கும். சுயநலமாக சிந்திக்கக்கூடாது. அடுத்தவன் நலனையும் கொஞ்சம் கருத்தில் கொள்ளவும்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam