– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். சுறுசுறுப்பாக உங்களுடைய வேலையை செய்வீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மன நிறைவான நாளாக இருக்கும். இறைவழிபாட்டில் ஆர்வம் உண்டாகும். நிதி நிலைமை சீராகும். வருமானத்திற்கு ஏற்ற செலவும் வரிசையாக நிற்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற எதிர்ப்புகள் இருக்கும். நீங்கள் செய்யக்கூடிய வேலைகளுக்கு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள். எல்லா விஷயத்திற்கும் குறை சொல்லும் போது நமக்கு கொஞ்சம் டென்ஷன் கூட தான் செய்யும். இருந்தாலும் பொறுமையாக இருக்க வேண்டும். யாரிடமும் முன்கோபத்தை காட்டக் கூடாது. உங்கள் தரப்பு நியாயத்தை பொறுமையாக எடுத்துச் செல்லுங்கள் நல்லது நடக்கும்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் வரக்கூடிய நாளாக இருக்கும். நிதிநிலைமை சீராகும். வாங்கிய கடனை வட்டியும் முதலுமாக திருப்பி தருவதற்கு வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் உற்சாகமாக செயல்படுவீர்கள். உங்களுடைய போக்கை பார்த்து நாலு பேருக்கு சுறுசுறுப்பாக உங்களை போல வேலை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள். அடுத்தவர்களுக்கு முன் உதாரணமாக நீங்கள் திகழ்வீர்கள்.
கடகம்
கடக ராசி காரர்கள் இன்று அதிக எதிர்பார்ப்பு வைக்கக் கூடாது. எந்த விஷயத்திலும் முன்கூட்டியே ஆசை படாதீங்க. சின்ன சின்ன ஏமாற்றங்கள் வர வாய்ப்புகள் இருக்கிறது. சின்ன ஏமாற்றமாக இருந்தாலும், பெரிய ஏமாற்றமாக இருந்தாலும் மனது கஷ்டப்படும் அல்லவா. ஆகவே மனதை எப்போதும் பக்குவமாக வைத்துக் கொண்டால் சங்கடங்கள் இல்லை. எதிர்பார்ப்பை குறைத்தால் இந்த நாள் இனிய நாள்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று புகழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்கள் வேலையை பார்த்து மேலதிகாரிகள் வியப்படைவார்கள். திறமை வெளிப்படக்கூடிய நாள். குடும்பத்தில் மட்டும் கொஞ்சம் சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவிக்குள் அனுசரணை தேவை. பிள்ளைகளின் போக்கில் கவனம் தேவை. பெரியோர்கள் பேச்சை கேட்டு நடந்தால் குடும்பம் சுபிட்சம் பெறும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். உங்களுடைய சின்ன சின்ன வேலைகள் கூட பெரிய அளவில் வெற்றியை கொடுக்கும். பெரிய அளவில் லாபத்தை கொடுக்கும். உங்கள் திறமையை நீங்களே உணரக்கூடிய நாள். நம்மாலும் வாழ்க்கையில் முன்னேற்ற முடியும் என்று உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக் கொள்வீர்கள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று உதவி செய்யக்கூடிய மனப்பக்குவம் இருக்கும். பொது காரியங்களில் அதிகமாக ஈடுபடுவீர்கள். கோவில் குளங்களுக்கு சென்று சேவை செய்வதற்கு சில பேருக்கு வாய்ப்புகள் கிடைக்கும். இந்த நாள் மனநிறைவை கொடுக்கும். மற்றபடி தொழில் வேலை எல்லாம் சிறப்பாக நடந்து முடியும். நீண்ட தூர பயணத்தை தவிர்ப்பது நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் என்று உஷாராக இருக்க வேண்டும். அடுத்தவர்களை நம்பி ஏமாறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. குறிப்பாக உங்களுடைய உடைமைகளையும் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். ஆன்லைனில் ஆர்டர் போடுவது தெரியாதவர்களை நம்பி பணத்தை செலவழிப்பது போன்ற வேலைகளை செய்யாதீங்க. டிஸ்கவுண்ட் மூலம் எந்த பொருளையும் வாங்காதீங்க பொருள் இழப்பு ஏற்படும்
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று பெருமையான நாளாக இருக்கும். வெற்றிவாகை சூடுவீர்கள். அடுத்தவர்களுக்கு முன்பு தலை நிமிர்ந்து நடப்பீர்கள். எதிரிகளை வீழ்த்துவீர்கள். உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். இன்று குலதெய்வத்திற்கு நன்றி சொல்லுங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். எதுவுமே என்னால் செய்ய முடியாது என்று வெறுமனே அமர்ந்திருப்பவர்களுக்கு கூட, இன்று நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் நிச்சயம் வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்கள், புதிய தொழில் தொடங்க வேண்டும் என்று முயற்சி செய்பவர்கள், நீண்ட நாட்களாக ஒரு காரியத்தை செய்ய முடியாமல் தவித்து வந்தவர்கள் எல்லாம், அந்த காரியத்தை இன்று கையில் எடுங்கள். நிச்சயம் சக்சஸ் ஆகும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று லேசான உடல் சோர்வு இருக்கும். உங்களால் சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியாது. வேலையில் பின்னடைவு உண்டாகும். அதற்காக வருத்தப்படக்கூடாது. ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததுதான் மனிதனின் வாழ்க்கை. இன்று கொஞ்சம் வாழ்க்கை இறங்கினால், நாளை மீண்டும் உயரக்கூடிய வாய்ப்புகள் வரும். சோகத்தை விட்டு தள்ளுங்கள். நல்லதை மட்டும் சிந்தனையில் வைத்துக் கொள்ளுங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய முன்னேற்றம் அடுத்தவர்களுக்கு பொறாமையை தூண்டும். நம்மால் மட்டும் வாழ்க்கையில் முன்னேற முடியவில்லை என்று தோன்றும். உங்களுக்கு நிறைய கண் திருஷ்டி விழும். உங்களுடைய வெற்றியை அனாவசியமாக அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம். உங்கள் பேச்சை குறைத்தாலே வாழ்க்கையில் நிறைய நல்லது நடக்கும். தற்பெருமையை குறைத்துக் கொள்ளுங்கள் போதும்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam