இன்றைய ராசிபலன் – 27 நவம்பர் 2024

இன்றைய ராசிபலன் – 27 நவம்பர் 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தனம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானத்திற்கு பிரச்சனை இருக்காது. நீண்ட நாள் கஷ்டப்பட்ட விஷயத்தில் இன்று சாதித்து காட்டுவீர்கள். சொத்து சுகம் வாங்க கூடிய யோகமும் இருக்கிறது. பெண் பிள்ளைகளுக்கு தங்கம் வாங்கும் யோகமும் இருக்கிறது. நல்லது நடக்கும் சுப செலவு ஏற்படும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். வீட்டில் இருந்து வந்த சட்டை சச்சரவுகள் சரியாகும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் இருந்து வந்து தடைகள் விலகும். லாபம் அதிகரிக்கும்‌. குடும்பத்தில் சந்தோஷம் நிறைவாக இருக்கும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று ஆர்வத்தோடு இருப்பீர்கள். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் இருந்து வந்த தடைகள் விலகும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். உங்களுடைய பொருட்களை அடுத்தவர்களுக்கு இரவலாக கொடுக்காதீங்க. தங்கம் பணம் எதுவாக இருந்தாலும் ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ளுங்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று புகழ்ச்சி இருக்கும். நல்ல பெயர் கிடைக்கும். மேல் அதிகாரிகளுடைய பாராட்டு மனதிற்கு நிம்மதியை கொடுக்கும். புது வாய்ப்புகள் உங்களைத் தேடித் வரும். வியாபாரத்தில் கவனத்தோடு நடந்து கொள்ள வேண்டும். கடனுக்கு வியாபாரம் செய்யக்கூடாது. உற்சாகத்தில் துளி கூட குறை இருக்காது. இன்றைய வேலை நல்லபடியாக நடக்கும்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். நீண்ட தூர பயணம் நன்மையை கொடுக்கும். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். எதிரிகளும், நண்பர்களாக மாறுவார்கள். டார்கெட்டை சரியாக முடிப்பீர்கள். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். ஆரோக்கியமான உணவை மட்டும் சாப்பிடுங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல பெயர் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். தலை குனிந்த இடத்தில் தலைநிமிர்ந்து நிற்பீர்கள். எதிரிகள் நண்பர்களாக மாறுவார்கள். சேமிப்பு உயரும். வசதி வாய்ப்புகள் பெருகும் நாளாக இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் சரியாகும். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று கவனத்தோடு இருக்க வேண்டும். கவனக்குறைவாக எந்த ஒரு வேலையும் செய்யக்கூடாது. அடுத்தவர்களை பார்த்து பொறாமை படக்கூடாது. வேலையிலும் தொழிலிலும் அகல கால் வைக்காதீர்கள். தெரிந்த வேலை, தெரிந்த தொழிலை மட்டும் செய்வது நல்லது. புதிய முயற்சிகளை நாளை தள்ளி வைக்கவும். நண்பர்கள் அனுபவசாலிகள் பேச்சைக் கேட்டு நடக்கவும். அடம் பிடிக்க வேண்டாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று மன மகிழ்ச்சி இருக்கும். தடைப்பட்டு வந்த சுப காரியம் வீட்டில் நடக்கும். பிள்ளைகளால் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். கடன் சுமை குறையும். மன நிம்மதி கிடைக்கும். இரவு நல்ல தூக்கத்தை தருவீர்கள். வேலை தொழில் எல்லாம் நல்லபடியாக செல்லும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று பம்பரம் போல சுற்றி சுற்றி வேலை செய்வீர்கள். ஒரு துளியும் சோம்பேறித்தனம் உங்களிடம் இருக்காது. உங்களிடம் கொடுத்த வேலையை சொன்ன நேரத்தில் முடித்து தருவீர்கள். நல்ல பெயர் வாங்குவீர்கள். பதவி உயர்வு சம்பள உயர்வு தானாக உங்களைத் தேடி வரும். வாழ்க்கை துணையிடம் பேசும்போது மட்டும் கவனம் தேவை.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மறதி இருக்கும். இதனால் முக்கியமான வேலை கெட்டுப் போகும். ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். கவலைக்குறைவாக செய்யும் வேலை பிரச்சனையை கொடுக்கும். மேலதிகாரிகளுடன் அனுசரணையோடு நடக்க வேண்டும். முன் கோபப்படக்கூடாது டென்ஷனால் நிறைய நல்ல விஷயங்கள் மறக்க வாய்ப்பு இருக்கிறது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத இன்ப அதிர்ச்சிகள் காத்துக் கொண்டிருக்கும். பிரச்சனை என்று நினைத்த ஒரு காரியம், நல்லபடியாக நடந்து முடியும். எதிரிகள் தானாக விலகுவார்கள். முதலீட்டில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று ரொம்பவும் இரக்க குணத்தோடு இருப்பீர்கள். அடுத்தவர்களுக்கு பாவம் பார்த்து உதவி செய்வீர்கள். இதனால் உங்களுக்கு புண்ணியம் வந்து சேரும். ஆனால் வேலையிலும் தொழிலிலும் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். மூன்றாவது நபரை முழு மனதோடு நம்பக் கூடாது. ஒரு சந்தேக கண் இருக்கட்டும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top