– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். உடல் சோர்வு இருக்கும். சொன்ன வேலையை சொன்ன நேரத்தில் முடித்து தர முடியாததால், கொஞ்சம் மனக்கவலையோடு இருப்பீர்கள். ஒன்றும் பிரச்சனை கிடையாது. மனிதர்களாக இருந்தால் சில நேரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். எப்போதும் எல்லோரும் சரியாக இருப்பதில்லை. நேரம் காலம் கூடி வரும் போது நிச்சயம் நல்லது நடக்கும். இன்று குலதெய்வ வழிபாட்டை செய்வது மனநிறைவை கொடுக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று எல்லா விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். எவ்வளவு கவனமாக இருந்தாலும் சில விஷயங்களை நீங்கள் மறந்து விடுவீர்கள். இதனால் உங்களை விட உயர்ந்த இடத்தில் இருப்பவர்களிடம் திட்டு வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். தவறு செய்யும் போது தான் நமக்கு அனுபவ பாடங்கள் நிறைய கிடைக்கும். ஆகவே இன்று நடக்கக்கூடிய நெகட்டிவ்வான விஷயங்களை அனுபவ பாடமாக எடுத்துக்கொண்டு, வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லுங்கள்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் பேராசை இருக்கும். அதனால் அகல கால் வைப்பீர்கள். நிறைய பணத்தை செலவு செய்வீர்கள். சில பேருக்கு இதில் ஏமாற்றமும் ஏற்படலாம். இன்றைய தினம் நீங்கள் ஏமாறாமல் இருக்க வேண்டும் என்றால் பேராசையை குறைத்துக் கொள்ள வேண்டும். அடுத்தவர்களை பார்த்து பொறாமை படக்கூடாது. உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறதோ அதற்கு உண்டான வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு மனது ஒருநிலை படாது. வேலையில் உங்களை நீங்கள் முழுமையாக ஈடுபடுத்த முடியாது. மனது அலைபாயும். தேவையில்லாத விஷயங்களை செய்து நேரத்தை செலவு செய்வீர்கள். இதனால் பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. மனதை ஒருநிலைப்படுத்த தியானம் செய்வது நல்லது. அதிகாலை வேலையிலேயே எழுந்து சிவபெருமானை நினைத்தோ அல்லது உங்கள் குலதெய்வத்தை நினைத்தோ தியானம் செய்யுங்கள் உங்களுக்கு நல்லது நடக்கும்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூட கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக முயற்சி செய்து வந்த வேலையில் இன்று வெற்றி கிடைக்கும். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். அதன் மூலம் ஒரு கணிசமான தொகையும் உங்கள் வங்கிக் கணக்கை வந்து சேரும். நல்லது நடந்து விட்டதே என்று அடுத்தவர்களை ஏளனமாக பார்க்க கூடாது. ஏளனமாக பேசக்கூடாது. நல்லதும் கெட்டதும் ஏற்றமும் இறக்கமும் மனிதர்களுக்கு இயல்பு என்பதை நீங்கள் என்று நினைவில் வைத்துக் கொள்ளவும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று முயற்சிகளில் முதல் முறையிலேயே வெற்றி கிடைக்காது. சின்ன சின்ன தோல்விகள் வரும், தோல்விகளில் மூலம் கொஞ்சம் அழுகை, கொஞ்சம் கஷ்டம், கொஞ்சம் துன்பமும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. என்ன இது பதார்த்தங்கள் போல சொல்கிறீர்களே என்று நினைக்காதீங்க. இன்று நீங்கள் எல்லாவற்றையும் எதார்த்தமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை இனிக்கும்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நிம்மதியான நாளாக இருக்கும். இறையருள் கிடைக்கும். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். தொழிலில் இருந்து வந்த இடர்பாடுகள் விலகும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே பரஸ்பர அன்பு அதிகரிக்கும். கொஞ்சம் சுப செலவுகளும் ஏற்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்கள் இன்று சந்தோஷமாக இந்த நாளை தொடங்குவீர்கள். நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் எல்லாம் வெற்றி அடையும். அக்கம் பக்கம் வீட்டில் இருப்பவர்களால் நல்லது நடக்கும். வீட்டிற்கு தேவையான மங்களப் பொருட்களை வாங்குவதற்கு உண்டான யோகம் இருக்கிறது. பூஜை பொருட்கள் அலங்கார பொருட்கள் மனைவிக்கு ஆடை ஆபரண பொருட்கள் வாங்கி தருவதாக இருந்தால் இன்று வாங்குங்கள் நல்லது.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று அடுத்தவர்கள் மீது ரொம்பவும் இரக்கத்தோடு நடந்து கொள்வீர்கள். பொதுப்பணிகளில் உங்களை நீங்களே ஈடுபடுத்திக் கொள்வீர்கள். இதனால் மனநிறைவும் அடைவீர்கள். உங்களைப் பார்த்து நாலு பேர் நல்ல விஷயங்களை செய்வார்கள். மன நிறைவான நாளாக இருக்கும். வேலையிலும் தொழிலிலும் கவனம் சிதறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எந்த அளவுக்கு பொதுப்பணி முக்கியமோ அதே அளவுக்கு உங்களுடைய வேலையும், உங்களுடைய வீடும் முக்கியம் என்பதை மறக்கக்கூடாது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியம் நிறைந்த நாளாக இருக்கும். இதுநாள் வரை இருந்து வந்த சோம்பேறித்தனம் விலகும். நோய்நொடி பிரச்சனை விலகும். வேலையில் சொன்ன நேரத்தில் சொன்ன வேலையை முடித்துக் கொடுத்து விடுவீர்கள். பிள்ளைகளுடைய எதிர்காலத்திற்கு தேவையான சேமிப்பை பற்றி சிந்திப்பீர்கள். புதுசாக வங்கி கணக்கு தொடங்குவது, எல்ஐசி போடுவது போன்ற நல்ல காரியங்களை இன்று தொடங்கலாம் லாபகரமாக அமையும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று நிறைய போராடுவீர்கள். ஒரு விஷயத்தில் ஜெயிக்க வேண்டும் என்று உயிரைக் கொடுத்து போராடுவீர்கள். ஆனால் இறுதியில் ஏமாற்றமே மிஞ்சும். பெரிய அளவில் நீங்கள் சோர்ந்து துவண்டு போகக்கூட வாய்ப்பு இருக்கிறது. அதனால் கூடுமானவரை புதிய முயற்சிகளை நாளை தள்ளி வையுங்கள். புது வேலைக்கு இன்டர்வியூக்கு போவது, புதுசாக பொருள் வாங்குவது போன்ற நல்ல காரியங்களை இன்று செய்யாதீங்க. அன்றாட வேளையில் கூடுதல் கவனத்தோடு இருந்தால் போதும். யாரை நம்பியும் கடன் கொடுக்க வேண்டாம் ஜாக்கிரதை.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய வேலையில் பெருசாக எந்த பிரச்சனையும் இருக்காது. சரியாக உங்களுக்கு கொடுத்த வேலையை செய்து முடித்து விடுவீர்கள். தொழிலிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆனால் பிரச்சனை எங்கிருந்து ஆரம்பிக்கும் தெரியுமா. உங்களுடைய வாயிலிருந்து, வாயிலிருந்து வரக்கூடிய வார்த்தையிலிருந்து, நீங்கள் அமைதியாக இருந்தாலே வாழ்க்கையில் சீக்கிரம் முன்னேறி விடலாம். தினமும் ஒரு மணி நேரம் மௌன விரதம் இருந்து பாருங்கள். நிறைய நல்லது உங்களுக்கு நடக்கும்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam