– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதியான நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக செய்ய தவற விட்ட காரியங்களை இன்று செய்யலாம். குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று இறை வழிபாடு செய்வீர்கள். வேலையில் திறமையாக செயல்படுவீர்கள். தொழிலில் விட்ட இடத்தை மீண்டும் பிடிப்பதற்கு அயராது உழைப்பீர்கள். முன்னேற்றத்திற்கு இந்த நாள் எந்த குறையும் இருக்காது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய வேலையை பாராட்டி அதற்கு உண்டான பரிசுப் பொருட்களும் வழங்கப்படும். கலைஞர்களுக்கு விருது கிடைக்கும். பெயர் புகழ் அந்தஸ்து மேலோங்கி நிற்கக் கூடிய நாளாக இருக்கும். வேலையில் நன்மை நடக்கும். தொழிலில் சின்ன சின்ன இடர்பாடுகள் வரலாம். முதலீட்டின் போது மட்டும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று பயத்தோடு பதட்டத்தோடு எந்த வேலையையும் தொடங்கக்கூடாது. முழு மனதோடு உங்களுக்கு சரி என்று பட்டால் அதை செய்யுங்கள். தவறு என்று உணர்ந்தால் அந்த வேலையை செய்யாதீர்கள். சீக்கிரம் முன்னேற குறுக்குப் பாதையை தேர்ந்தெடுக்க வேண்டாம். அரசாங்கத்திற்கு புறம்பான காரியங்களில் செயல்பட வேண்டாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற சண்டை சச்சரவுகள் வரக்கூடிய நாளாக இருக்கும். வாக்குவாதம் செய்ய வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருங்கள். பெரிய மனிதர்களை பகைத்துக் கொள்ளக் கூடாது. எந்த இடத்தில் பேச வேண்டும் எந்த இடத்தில் பேசக்கூடாது என்ற வரையறையோடு நடந்து கொள்ளுங்கள்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று தெளிவான நாளாக இருக்கும். எந்த ஒரு வேலையிலும் குழப்பம் ஏற்படாது. அடுத்தவர்கள் உங்களுக்கு பிரச்சனை கொடுத்தாலும் அதை சமாளிக்க கூடிய திறமை உங்களிடத்தில் இருக்கிறது. வீட்டில் மாமியாரை, மருமகள் சுலபமாக கைக்குள் போட்டுக் கொள்வீர்கள். குடும்ப பிரச்சனைகள் தீரும். சந்தோஷம் இரட்டிப்பாகும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் பாராட்டு கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். நீங்கள் செய்யக்கூடிய சின்ன சின்ன வேலைகள் கூட அடுத்தவர்களுக்கு பெரிய உதவியாக இருக்கும். மன நிறைவு ஏற்படும். வீட்டில் இருக்கும் பெண்கள் கொஞ்சம் உடல் சோர்வு அடைவீர்கள். வீட்டை சுத்தம் செய்யும் வேலையில் ஆர்வம் காட்டுவீர்கள். நிதி நிலைமை சீராக இருக்கும் வருமானம் பெருகும்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வேலைகள் எல்லாம் சுறுசுறுப்பாக நடக்கும். ஓய்வு என்பது ஒரு நிமிடம் கூட இருக்காது. காலில் பம்பரத்தை கட்டிக்கொண்டு சுற்ற வேண்டிய சூழ்நிலை உண்டாகும். இந்த நாள் இறுதியில் உடல் சோர்வு ஏற்படும். நிறைய தண்ணீர் குடியுங்கள். ஆரோக்கியமான உணவை சாப்பிட்டுக் கொள்ளவும். உடல் அசதியான சமயத்தில் கொஞ்சம் ஓய்வு எடுப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக இருக்கும். காலை நேரம் கொஞ்சம் சோம்பலோடு ஆரம்பித்தாலும், இன்று மாலை சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வார இறுதி நாளை என்ஜாய் செய்ய வேண்டும் என்று உங்களுக்கு சுறுசுறுப்பு வந்துவிடும். கொஞ்சம் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் வாக்குவாதம் வர வாய்ப்புகள் இருக்கிறது. ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். பெரியவர்களை மரியாதை இல்லாமல் பேச வேண்டாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். தொழிலில் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணம் கையை வந்து சேரும். வாரா கடன் வசூல் ஆகும். சேமிப்பு உயரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளால் மன நிறைவு ஏற்படும். தாய்மாமன் உறவு உங்களுக்கு ஆதரவாக இருக்கும். உங்கள் பிரச்சினையை தீர்த்து வைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தடைகள் தடங்கல்கள் வரும். அதை கண்டு துவண்டு போகக்கூடாது. விடாமுயற்சியோடு உங்களுடைய வேலையை செய்யுங்கள். அவர்கள் சொல்கிறார்கள், இவர்கள் சொல்கிறார்கள் என்று உங்களுடைய முடிவை மாற்றிக் கொள்ளக் கூடாது. நிலையான மனதோடு செயல்பட்டால் இன்று உங்களுக்கு வெற்றி நிச்சயம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றிக்கான கூடிய நாளாக இருக்கும். வேலையில் சுறுசுறுப்போடு செயல்பட்டு நல்ல பெயரை வாங்குவீர்கள். சொந்த தொழில் செய்பவர்கள் உங்கள் முதலீட்டில் கவனம் செலுத்த வேண்டும். கணக்கு வழக்குகளை சரியாக பார்த்துக் கொள்ள வேண்டும். அனாவசியமாக யாரை நம்பியும் தொழில் பற்றிய ரகசியங்களை வெளிவிடக் கூடாது. வார்த்தைகளில் அதிக கவனம் தேவை.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று பேச்சுத்திறமை அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் அதை பேசிய தீர்த்து விடுவீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். செலவை குறைத்துக் கொள்ளுங்கள். செலவுக்கு ஏற்ப வருமானம் வந்து கொண்டே இருக்கும். சேமிப்பை உயர்த்துவது புத்திசாலித்தனம்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam