
– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த, லாபம் நிறைந்த நாளாக இருக்கும். புதுசாக தொழில் துவங்க முயற்சிகளை மேற்கொள்ளலாம். புது வேலைக்கு முயற்சி செய்யலாம். புதிய வங்கி கணக்குகள் துவங்கலாம். இப்படி நீங்கள் இன்று செய்யக்கூடிய நிதி சம்பந்தப்பட்ட வேலைகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று ஆக்கபூர்வமான நிறைய நல்ல விஷயங்களில் ஈடுபடுவீர்கள். அடுத்தவர்களுக்கு துரோகம் நினைக்க மாட்டீர்கள். எதிரிகளாகவே இருந்தாலும், அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று, நீங்கள் எடுக்கும் முயற்சிகள் உங்கள் மனதிற்கு அமைதியை கொடுக்கும். நீண்ட நாள் பகை விலகும். குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். நீண்ட நாள் பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். வேலையில் டென்ஷன் குறையும். வியாபாரத்திலிருந்து, வந்த தடைகள் உடையும். சின்ன சின்ன வியாபாரிகளும் இன்று கைநிறைய லாபத்தை பார்ப்பீர்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவி சகோதரர்கள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து, ஒற்றுமை நிலவும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் இருக்கும். வேலையில் ஆர்வம் இருக்காது. சின்னதாக டென்ஷன், தலைவலியை கொடுக்கும். எதற்கும் கவலைப்படாதீர்கள். இறைவனின் மீது பாரத்தை போடுங்கள். கடவுளை நம்புங்கள். ஒரு நிமிஷத்தைக் கூட வீணாக்காமல், உங்களுடைய கடமைகளை சரிவர செய்து முடித்தால் இந்த நாள் இறுதியில் நிச்சயம் நிம்மதி கிடைக்கும். நேரத்தை வீணடிப்பவர்களுக்கு சோகம் கிடைக்கும் அதில் மாற்று கருத்து கிடையாது.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுடைய பேச்சு இன்று இனிமையாக இருக்கும். பேசிப்பேசியே பல காரியத்தை சாதிப்பீர்கள். பேசக்கூடிய தொழிலில் இருப்பவர்களுக்கு இன்று இன்னும் கூடுதல் நற்பலன்கள் கிடைக்கப் போகிறது. வியாபாரத்தில் சாதிப்பதற்கும் பேச்சுத்திறமையை காரணமாக இருக்கும் நல்லதே நடக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். மனதை அலைபாய விட மாட்டீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல ஆர்வம் இருக்கும். நண்பர்களோடு இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். எதிரிகளை நண்பர்களாக மாற்றிக் கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று காலை பொழுது ஓரளவுக்கு சுமாராகவே இருந்தாலும், மாலை நேரமும், இரவு நேரமும் நல்லபடியாக இருக்கும். காலையில் வேலையில் சுறுசுறுப்பை காட்டவும். சோம்பேறித்தனத்தை தள்ளி வைக்கவும். நேரத்திற்கு கண்விழித்து நேரத்திற்கு சாப்பிட்டு நேரத்தை சரிவர கடைபிடித்தால் நிச்சயம் நல்லதே நடக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு முன்கோபத்தால் இன்று சில பல பிரச்சனைகள் வரலாம். மேலதிகாரிகளுடன் பணிவோடு நடக்க வேண்டும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை எதிர்த்துக் கொள்ளக்கூடாது. உங்கள் மீது தவறு இருந்தால் அமைதி காக்கவும். குறுக்குப் பாதையை தேர்ந்தெடுக்காதீர்கள். புது மனிதர்களுடைய பேச்சை முழுமையாக நம்ப வேண்டாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று உழைப்பு மட்டுமே முதலீடாக இருக்கும். யார் சொல்வதையும் செவி கொடுத்து கேட்க மாட்டீர்கள். உங்களுடைய மனசாட்சி படி நடந்து கொள்வீர்கள். விடா முயற்சி விஸ்வரூப வெற்றியை கொடுக்கும். பெரியவர்களின் ஆசி கிடைக்கும். கமிஷன் தொழில் நல்ல லாபத்தை கொடுக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். காய்கறி வியாபாரிகள் விவசாய தொழிலில் இருப்பவர்களுக்கெல்லாம், இன்று நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட தூர பயணங்கள் நன்மையில் முடியும். அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டும். வாகனங்களில் செல்லும்போது கொஞ்சம் கவனம் இருக்கட்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். நீண்ட நாள் முயற்சிகள் இன்று நல்ல பலன்களை கொடுக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். பிள்ளைகளுடைய மனது நோகும்படி நடந்து கொள்ள மாட்டீர்கள். அவர்களுக்கு தேவையான விஷயங்களை பெற்றவர்கள் பார்த்து பார்த்து செய்வீர்கள். சுப செலவுகள் உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று காலை முதல் மாலை வரை வேறு எந்த சிந்தனையும் இருக்காது. வேலை வேலை என்று முழுமூச்சோடு இருப்பீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் தலைக்கு மேல் பொறுப்புகள் காத்துக் கொண்டிருக்கிறது. ஆண்கள் பெண்கள் பெரியவர்கள் சிறியவர்கள் என்று எல்லோருடைய கடமையும் என்று சரி வர நடக்கும். புது அனுபவங்கள் கிடைக்கும்.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam