இன்றைய ராசிபலன் – 28 ஜூன் 2024

இன்றைய ராசிபலன் – 28 ஜூன் 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சௌகரியமான நாளாக இருக்கும். உங்கள் மனதில் நினைத்த விஷயங்களை சரியாக பிளான் செய்து முடித்து விடுவீர்கள். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தேவையில்லாத உறவுகள் நண்பர்கள் உங்களை விட்டு பிரிந்து விடுவார்கள். நல்லதை நினைப்பவர்கள், நல்லது செய்பவர்கள் மட்டுமே உங்களை சுற்றி இருப்பார்கள். எந்த குழப்பமும் வேண்டாம். சந்தோஷமாக இந்த நாளை கடந்து செல்லுங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று ராசியான நாளாக இருக்கும். நீங்கள் கையில் தொட்ட காரியங்கள் எல்லாம் வெற்றி அடையும். மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்ப விஷயங்களில் சின்ன சின்ன சண்டைகள் வாக்குவாதங்கள் வரலாம். இருந்தாலும் பெரிய அளவில் பிரச்சனைகள் இருக்காது. பிள்ளைகளின் மூலம் மன மகிழ்ச்சி அடைவீர்கள்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்கும். சந்தோஷமான நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் திறமையாக செயல்படுவீர்கள். தொழிலில் இருந்து வந்த சங்கடங்கள் விலகும். புதிய முதலீட்டை செய்வதற்கு தேவையான அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். மாணவர்கள் உங்களுடைய கல்வி சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று வேலை பளு அதிகமாக இருக்கும். உடல் சோர்வு இருக்கும். சரியான நேரத்தில் சொன்ன வேலையை முடித்து தர முடியாததால், கொஞ்சம் டென்ஷன் ஆகும். சோம்பேறித்தனத்தை ஒதுக்கி வைத்து விடுங்கள். இன்றைய நாளை ஒரு மணி நேரத்திற்கு முன்கூட்டியே தொடங்குங்கள். நிச்சயம் உங்களால் சரியான நேரத்தில் வேலை செய்ய முடியும் என்று நம்புங்கள் நல்லதே நடக்கும்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன சிக்கல்கள் வரும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். அன்றாட வேலையில் கூடுதல் கவனம் எடுத்துக் கொண்டால் போதும். தேவையற்ற நட்பிடமிருந்து விலகி இருங்கள். பெரியவர்கள் சொல் பேச்சு கேளுங்கள். அடம்பிடித்து எந்த விஷயத்தையும் சாதிக்காதீர்கள். குறிப்பாக இளைஞர்கள் இன்று எல்லா விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று பயனுள்ள வேலைகளை செய்வீர்கள். நேரத்தை அனாவசியமாக வீணடிக்க மாட்டீர்கள். உங்களிடம் மேலதிகாரிகளை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உங்களைப் பார்த்து நாலு பேர் நாலு நல்ல விஷயத்தை கற்றுக் கொள்ளும் அளவுக்கு நீங்கள் முன் உதாரணமாக திகழப் போகிறீர்கள். ஆசிரியர்கள் வக்கீல் தொழிலில் இருப்பவர்கள் கலைத்துறையினர்களுக்கு இன்று நல்ல நாளாக இருக்கும்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மனக்குழப்பம் இருக்கும். ஒரு வேலையை திரும்பத் திரும்பச் செய்யக்கூடிய சூழ்நிலை உண்டாகும். புதிய முயற்சிகளை நாளை தள்ளி வையுங்கள். மேல் அதிகாரிகள் சொல்வதை கவனமாக கேட்டுக் கொள்ளவும். தேவையில்லாத கேலி கிண்டல் செய்ய வேண்டாம். எதிர் பாலின நட்பு பிரச்சனைகளை உண்டு பண்ணும் ஜாக்கிரதை.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். உங்களுடைய வேலைகளை சொன்ன நேரத்தில் செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் புரிதல் இருக்கும். விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். பிள்ளைகளின் மூலம் மன மகிழ்ச்சியை அடைவீர்கள். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் நடக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சண்டை சச்சரவு நிறைந்த நாளாக இருக்கும். உறவுகளாக இருந்தாலும் நண்பர்களாக இருந்தாலும் உங்களை புரிந்து கொள்ளாமல் சண்டை போட வாய்ப்பு இருக்கிறது. ஜாக்கிரதையாக இருங்கள். நீங்கள் நல்ல விஷயங்களை சொன்னாலும் அது அடுத்தவர்களுக்கு கெட்டதாக தான் தெரியும். அதனால் அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடாதீங்க. பஞ்சாயத்துக்கு போகாதீங்க.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். வேலை சம்பந்தமாக சில பேர் வெளியூருக்கு செல்வீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள் தாய்நாடு திரும்பவும் வாய்ப்புகள் இருக்கிறது. குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வாய்ப்புகள் இருக்கிறது. வேலை தொழில் இவைகளை எல்லாம் கூடுதல் அக்கறையோடு கவனித்துக் கொண்டால் பிரச்சனைகள் இருக்காது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். பிரிந்த உறவுகளோடு ஒன்று சேர வாய்ப்புகள் இருக்கிறது. குலதெய்வ வழிபாடு செய்வது நன்மையை தரும். தீராத கடன் சுமை குறையும். முன்கோபத்தை மட்டும் குறைத்துக் கொள்ளுங்கள். தாய்வழி உறவோடு கவனமாக இருக்க வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். தேவையற்ற சிக்கலில் இருந்து விடுபடுவீர்கள். வாழ்க்கை துணை உதவியோடு நிதி நிலைமையை சீர் செய்து கொள்வீர்கள். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். மேனேஜர் தொல்லை இருக்காது. தொழிலில் பார்ட்னரின் மூலம் சின்ன சின்ன சிக்கல்கள் வரலாம். முதலீட்டில் கவனமாக இருக்கவும். செலவை குறைக்கவும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top