இன்றைய ராசிபலன் – 28 நவம்பர் 2024

இன்றைய ராசிபலன் – 28 நவம்பர் 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனமகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். நினைத்த வேலைகளை சரியான நேரத்தில் நடத்தி முடிப்பீர்கள். உற்சாகத்தோடு இருப்பீர்கள். பணம், கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். நிதி நிலைமை சீராகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். தொழிலில் புதிய முதலீடு செய்யலாம். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். இருக்கும் வேலை செய்யும் தொழில் எல்லாம் நல்லபடியாக செல்லும். இருந்தாலும் உங்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு தேவையான புது முயற்சிகளை இன்று மேற்கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். எதிரி தொல்லை நீங்கும். உறவுகளோடு இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். கணவன் மனைவி உறவு பலப்படும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வேலை தொழில் நல்லபடியாக செல்லும்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று வாழ்க்கையில் உயர்வு நிறைந்த நாளாக இருக்கும். நினைத்த வேலைகளை எல்லாம் சரியாக செய்து முடிப்பீர்கள். டென்ஷன் குறையும். கணவன் மனைவிக்குள் சின்ன சின்ன வாக்குவாதம் பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து நடக்கவும். ஈகோ தலைதூக்கக் கூடாது பாத்துக்கோங்க.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமை சீராகும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். சொத்து சுகம் வாங்குவதற்கு உண்டான யோகமும் இருக்கிறது. வீட்டில் மனைவியை சந்தோஷப்படுத்த, அவர்களுக்கு பிடித்த பரிசு பொருட்களை வாங்கி தந்து மகிழ்வீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும்‌. நீண்ட நாள் வராது என்று நினைத்த பணம் கையை வந்து சேரும். சேமிப்பு உயரும். பிள்ளைகளுடைய எதிர்காலத்திற்கு தேவையான முதலீட்டை செய்து வைப்பீர்கள். விவசாயத் தொழில் கொஞ்சம் பிரச்சினையாக இருக்கும். வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். மன உறுதியோடு நடந்து கொள்வீர்கள். எந்த விஷயத்தை  நினைத்தும் பயப்பட மாட்டீர்கள். எதிரிகள் தானாக விலகுவீர்கள். உங்களைப் பற்றி புறம் பேசியவர்கள் எல்லாம், நேராக வந்து மன்னிப்பு கேட்டால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை. எல்லோரையும் ஒரு விரட்டு விரட்டி புதிய சாதனையே படைக்கப் போறீங்க.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று சுக போக வாழ்க்கை இருக்கும். ராஜ மரியாதை இருக்கும். புகழ்ச்சி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் வரும். பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. சொந்த பந்தங்கள் இடத்தில் தலை நிமிர்ந்து வாழ்வீர்கள். வருமானம் இரட்டிப்பாகும். சேமிப்பு உயரும். பொன் பொருள் சேர்க்கையும் இருக்கும். இந்த நாள் இனிய நாளாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று காலை நேரம் கொஞ்சம் சோம்பேறித்தனத்தோடு துவங்கினாலும், போகப்போக உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். எல்லா வேலையையும் சுறுசுறுப்பாக நடத்தி முடிப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் விலகும். சின்ன சின்ன பெட்டிக்கடை வைத்திருப்பவர்கள் முதல் பெரிய வியாபாரிகள் வரை சூப்பராக கல்லா கட்டுவீங்க.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் துளி கூட குறையாது. பம்பரம் போல வேலையை செய்வீர்கள். நாளைக்கு செய்ய வேண்டிய வேலையையும் இன்றே முடிக்க கூடிய அளவுக்கு உங்களுக்கான தெம்பு பிறக்கும். இறை வழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கிறது. சுப காரிய பேச்சுக்கள் தடையில்லாமல் நல்லபடியாக நடக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று ஏதாவது ஒரு ரூபத்தில் நல்ல செய்தி வரும். மனமகிழ்ச்சி இருக்கும். வேலையிலும் தொழிலிலும் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வண்டி வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். வார்த்தையில் கவனம் தேவை. பேசுவதை இன்று குறைத்துக் கொண்டால் நல்லது.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டு நிறைந்த நாளாக இருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். வேலை தொழிலைப் பொறுத்தவரை பிரச்சினை இருக்காது. வீடு சம்பந்தப்பட்ட விஷயத்தில் குழப்பங்கள் இருக்கும். கணவன் மனைவிக்குள் சண்டை வாக்குவாதம் புரிதலின்மையும் காரணமாக நிம்மதி கெடும். விட்டுக் கொடுத்து நடந்தால் கெட்டுப் போக மாட்டீங்க பாத்துக்கோங்க.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top