– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனம் மகிழ்ச்சியோடு இருக்கும். உங்களுக்கு பிடித்த நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். மனதிற்குப் பிடித்த ஜோடியை தேர்ந்தெடுப்பதற்கு உண்டான வாய்ப்புகள் கிடைக்கும். காதல் கைகூடும். இதை விட சந்தோஷம் வேறு என்ன இருக்க போகிறது. வீட்டில் சுப செலவுகள் ஏற்படும். கெட்டிமேல சத்தம் கேட்கும். வேலை தொழில் எல்லாம் எந்த பிரச்சனையும் இல்லாமல் சுமூகமாக செல்லும். இன்றைய நாள் உங்களுக்கு இனிய நாளாக அமைந்ததற்கு வாழ்த்துக்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வரவு கொஞ்சம் கூடுதலாக இருக்கும். சேமிப்பில் உங்களுடைய ஆர்வத்தை காட்டுங்கள். வீண் செலவை குறைத்துக் கொள்ளுங்கள். கையில் பணம் இருக்கிறது என்பதற்காக தேவையில்லாத பொருட்களை வாங்கி குவிக்க வேண்டாம். வேலையில் கொஞ்சம் கூடுதல் கவனம் இருக்கட்டும். மேலதிகாரிகளிடம் பணிவோடு நடந்து கொள்வது நல்லது. தொழிலில் முன்பின் தெரியாத நபருக்கு கடன் கொடுக்க வேண்டாம்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று எல்லா விஷயத்திலும் ஆர்வம் அதிகமாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புது விஷயங்களை கற்றுக் கொள்ள புதிய வகுப்பில் சேர்வது, புது தொழில் தொடங்குவதற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்வது, இது போன்ற வேலைகள் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். கலைஞர்களுக்கு இன்று நல்லது நடக்கக் கூடிய நாளாக அமையும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று ரொம்ப ரொம்ப சாந்தமா இருக்க போறீங்க. உங்களை கோபப்படுத்த வேண்டும் என்று எதிராளிகள் சீண்டினாலும் அதற்கெல்லாம் செவிசாய்க்க மாட்டீர்கள். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். இதனால் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கப் போகிறது. எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். உங்களை வேண்டாம் என்று ஒதுக்கி வைத்த நண்பர்கள், உறவுகள் உங்களைத் தேடி வருவார்கள்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும். கையில் இருந்த சேமிப்பு கரையும். இதனால் கொஞ்சம் டென்ஷன் உண்டாக வாய்ப்புகள் இருக்கிறது. வேலையில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். வியாபாரத்தில் இருந்து வந்த சின்ன சின்ன பிரச்சனைகள் எல்லாம் சரியாகும். உங்களுக்கு கீழே வேலை செய்பவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். நினைத்த லாபத்தை தொழிலில் எடுப்பீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று பிரிவு ஏற்படக்கூடிய நாளாக இருக்கப் போகிறது. உங்கள் வீட்டில் யாராவது ஒருவர் வெளிநாட்டிற்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கலாம். கணவன் மனைவி இருவரில் யாராவது ஒருவர் வெளியூருக்கு வேலை செல்லலாம். மனதிற்குப் பிடித்தவர்களை கொஞ்ச நாள் பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். கவலைப்படாதீங்க எல்லாம் சரியாகிவிடும். சில பேருக்கு பிள்ளைகளை ஹாஸ்டலில் விடக்கூடிய சூழ்நிலை கூட வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மனம்தெளிவான நாளாக இருக்கும். எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அதில் தெளிவான முடிவை எடுப்பீர்கள். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்களுக்கு கொடுத்த வேலையை சொன்ன நேரத்தில் செய்து முடிப்பீர்கள். வாக்கு தவற மாட்டீர்கள். வேலைபளு காரணமாக சில பேருக்கு ஆரோக்கிய குறைபாடுகள் வரலாம். ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள் நேரத்திற்கு தூங்குங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று உடல் அசதி நிறைந்த நாளாக இருக்கும். உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. உங்கள் வீட்டில் இருக்கும் முதியவர்களை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். வேலையில் கொஞ்சம் டென்ஷன் இருக்கும். உடன் வேலை செய்பவர்களே உங்களை புரிந்து கொள்ள மாட்டார்கள். மேலதிகாரிகள் மேனேஜரோடு வாக்குவாதம் வர வாய்ப்புகள் இருக்கிறது. கவனமாக இருக்க வேண்டும் முன்கோபத்தை குறைக்கவும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூட கொடிய நாளாக இருக்கும். எல்லா இடத்திலும் நீங்கள் தான் முன்னணியாக இருப்பீர்கள். அடுத்தவர்களுடைய பிரச்சனையை தீர்த்து வைப்பதில் நீங்கள் இன்று முந்தி கொண்டு செல்வீர்கள். நிறைய பஞ்சாயத்துகளையும் செய்வீர்கள். இதனால் பிரச்சனைகள் பெருசாக வராது. அடுத்தவர்களுக்கு உதவி செய்யக்கூடிய மனோ பக்குவம் உங்களிடத்தில் இருக்கும். நாலு பேர் மத்தியில் உங்களுக்கு தலைவர் பொறுப்பு தானாக உங்களைத் தேடி வரும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு தேவையற்ற மன சஞ்சலம் இருக்கும். மனக்குழப்பத்தின் காரணமாக வேலையில் கவனம் செலுத்த முடியாது. குடும்பத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் வர வாய்ப்பு உள்ளது. உறவினர்களோடு கவனமாக பேசி பழக வேண்டும். தொழிலில் முதலீட்டில் கவனம் செலுத்த வேண்டும். அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். கடன் வாங்கி எந்த பொருளையும் வாங்காதீங்க. கையில் இருக்கும் பணத்திற்கு ஏற்ப வியாபாரம் செய்தால் போதும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் இரட்டிப்பாக கிடைக்கும். உங்களிடம் வேலை செய்பவர்களுக்கு மனதார போனஸ் கூட கொடுப்பீங்க. அந்த அளவுக்கு இன்று வருமானமும் மனநிறைவும் சேர்ந்து கிடைக்கக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. நீண்ட தூர பயணம் நன்மையை கொடுக்கும். ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று கவனமாக இருக்க வேண்டும். மேலதிகாரிகளை எதிர்த்து பேசக்கூடாது. குறிப்பாக மீட்டிங்கில் பேசும் போது எல்லாம் வார்த்தைகள் கவனமாக இருக்க வேண்டும். யாருக்கும் எந்த ஒரு வேலையிலும், வாக்கு கொடுக்காதீங்க. சொன்ன நேரத்தில் வேலையை செய்து தராவிட்டால் பிரச்சனைகள் வந்துவிடும். எல்லாரும் சரி என்று தலையாட்டினால் உங்களுக்கும் சரி, எல்லோரும் இல்லை என்றால் உங்களுக்கும் சரி இல்லை அவ்வளவுதான்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam