இன்றைய ராசிபலன் – 29 செப்டம்பர் 2024

இன்றைய ராசிபலன் – 29 செப்டம்பர் 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நலம் தரும் நாளாக இருக்கப் போகின்றது. எல்லா விஷயங்களும் நல்லபடியாக நடக்கும். மன நிம்மதி இருக்கும். குடும்பத்தில் சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. சுப நிகழ்ச்சிகள் சம்பந்தப்பட்ட பேச்சுகள் வீட்டில் துவங்கும். சுப செலவுகள் ஏற்படும். உற்சாகத்தோடு இந்த நாளை உறவுகளோடு செலவு செய்வீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் தவறு செய்தால் அதை சுட்டிக் காட்ட நண்பர்களும் உறவுகளும் இருப்பார்கள். நீங்கள் செய்த நன்மை என்ன தீமை என்ன என்பதை புரிந்து கொள்ள இன்று நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். புரிந்து கொள்ளுங்கள் எந்த விஷயத்தை நினைத்தும் கவலைப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டாம். வேலையில் ஆர்வம் காட்டினால் போதும் எல்லாம் நல்லபடியாக தானாக நடக்கும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று ஏதாவது ஒரு நல்ல காரியத்தை செய்வீர்கள். அது குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் இருக்கலாம். வியாபாரத்தில் இருக்கலாம் அல்லது செய்யும் வேலையில் இருக்கலாம். ஏதோ ஒரு நல்லதை உங்கள் கையால் செய்து மன நிறைவை அடைவீர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தடங்கல்கள் இருக்கும். பெரிய அளவில் பிளான் இருக்கும். ஆனால் அதை எல்லாம் சரியாக செய்ய முடியாமல் கொஞ்சம் திணறுவீர்கள். ஏற்ற இறக்கங்கள் என்பது வாழ்க்கையில் சகஜமான ஒன்றுதான். ஆகவே மனம் உடைந்து போகாமல் தொடர்ந்து முயற்சியில் ஈடுபடுங்கள் நிச்சயம் உங்களுக்கு நல்லது நடக்கும்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் நிறைந்த நாளாக இருக்கும். எல்லா புது விஷயங்களையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைப்பீர்கள். குறிப்பாக மாணவர்களுக்கு இன்று நல்லது நடக்கும். படிப்பில் சிறப்பாக செயல்படுவீர்கள். வேலையில் ப்ரமோஷனுக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்லது நடக்கும். புதுசாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று ரொம்பவும் அமைதியாக இருப்பீர்கள். எந்த பிரச்சனை வந்தாலும் சரி அதையெல்லாம் சுலபமாக எதிர்கொள்வீர்கள். உங்கள் முகத்திலும் பதற்றம் தெரியாது. உங்கள் மனதிலும் பதற்றம் தெரியாது. பக்குவமாக இன்றைய நாளை நீங்கள் நகர்த்திச் செல்வீர்கள். குறிப்பாக உயர் அதிகாரிகள் மேல் பதவியில் இருப்பவர்களுக்கு எல்லாம் இன்று நல்லது நடக்கும்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் செலவுகள் அதிகமாக இருக்கும். வெளியிடங்களுக்கு செல்லக்கூடிய சூழ்நிலை உண்டாகும். வீட்டிற்காக தான் செலவு செய்வீர்கள். இருந்தாலும் இந்த நாள் இறுதியில் பார்க்கும் போது தேவையற்ற செலவுகளின் பட்டியல் அதிகமாக இருக்கும். கொஞ்சம் முன்கூட்டியே உஷாராக்கிக் கொள்ளுங்கள். கையில் இருக்கும் பணத்தை காப்பாற்றி விடலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று குழப்பம் நிறைந்த நாளாக இருக்கும். யார் நல்லவர் யார் கெட்டவர் என்று யூகிக்க முடியாது. நன்மையின் தீமைகளை அலசி ஆராய்ந்து பார்க்க முடியாது. கூடுமானவரை யாரை நம்பியும் பணம் கொடுக்காதீங்க. ஜாமீன் கையெழுத்து போடாதீங்க. ஒருவரை நம்பி புது விஷயத்தை துவங்க வேண்டாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சுடக்கூடிய நாளாக இருக்கப் போகிறது. புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய மனிதர்களின் சந்திப்பு உங்களுக்கு நன்மையை தரும். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். சின்ன சின்ன பெட்டிக்கடை வைத்திருப்பவர்கள் தள்ளுவண்டி கடை வைத்திருப்பவர்களுக்கு கூட இன்று யோகமான நாளாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற பிரச்சனைகள் வரும். மனசு சோகமாகவே இருக்கும். சின்ன சின்ன கஷ்டங்களை அனுபவிக்க வேண்டிய நாளாக இருக்கும். உடனே மனது சோர்ந்து விடக்கூடாது. இன்றைய நாளை சிறப்பாக நகர்த்தி செல்ல இறைவனிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொள்ளுங்கள். பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு செல்லுங்கள் நிச்சயம் உங்களுக்கும் நல்லது நடக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்று நேரத்தை செலவு செய்வீர்கள். கூடவே கையில் இருக்கும் பணமும் செலவாகும். மீண்டும் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை மாத இறுதியில் உண்டாகும். கொஞ்சம் பார்த்துக்கோங்க. சந்தோஷம் முக்கியம்தான் ஆடம்பர செலவை குறைப்பது அதைவிட ரொம்ப ரொம்ப முக்கியம்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தில் அதிகமாக நேரத்தை செலவு செய்வீர்கள். ஆனால் உடல் உபாதைகளால் உங்களுக்கு சின்ன சின்ன செலவுகள், சின்ன சின்ன பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியத்தின் மீது அக்கறை காட்டுங்கள். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். கொஞ்சம் பணிவாக பேசினால் நல்லது.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top