இன்றைய ராசிபலன் – 30 ஆகஸ்ட் 2024

இன்றைய ராசிபலன் – 30 ஆகஸ்ட் 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று அளவில்லாத ஆனந்தம் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். எதிர்பாராத பிரமோஷன், எதிர்பாராத பெரிய நல்ல வேலை கிடைக்கவும், நீண்ட நாட்களாக நீங்கள் முயற்சி செய்து கொண்டிருந்த காரியம் வெற்றி அடையவோ வாய்ப்புகள் இருக்கிறது. சாதனை படைக்க வேண்டும் என்று மனதிற்குள் துடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இன்றைய நாள் நிச்சயம் ஒரு நல்லது நடக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்பவும் பெருமையான நாளாக இருக்கும். தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். கையில் எடுத்த முயற்சிகளில் ஜெயித்து காட்டுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் இருக்கும். குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்கு மனம் நிறைவான நாளாக இருக்கும். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். கணவன் அன்பை வெளிப்படுத்த மனைவிக்கு பரிசு பொருட்களை வாங்கி கொடுக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று ரொம்பவும் கடமை உணர்வோடு இருப்பீர்கள். நேர்மை தவறாமல் நடந்து கொள்வீர்கள். நீங்கள் ஒரு அரசு அதிகாரியாகவோ அல்லது ஏதாவது அலுவலகத்தில் உயர் பதவி வகித்துக் கொண்டிருந்தாலோ உங்களுக்கு சில பிரச்சனைகள் வரலாம். நேர்மையாக இருப்பவர்களை கண்டால் சில பேருக்கு பிடிக்காது அல்லவா. அது போல தான் இன்றும் நேர்மையானவர்களுக்கு கடவுள் சோதனையை கொடுக்கக்கூடிய காலகட்டம். ஜாக்கிரதையாக இருந்துக்கோங்க.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவும் ஓய்வும் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள். உங்களுடைய டென்ஷனை குறைத்தாலே பாதி பிரச்சனை சரியாக விடும். அன்றாட வேலையை அன்றாடம் செய்யக்கூடிய வழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். மனதை ஆன்மீகத்தில் ஈடுபடுத்தவும். தேவையற்ற சிந்தனைகள் அவ்வளவு நல்லது அல்ல.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். நிறைய நல்ல விஷயங்களை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பீர்கள். அந்த நல்ல விஷயங்கள் எல்லாம் நடக்குமா நடக்காதா என்ற சலனும் மனதிற்குள் இருக்கும். இதனாலேயே பதட்டம் நிறைந்த நாளாக இருக்கும். கடவுளின் ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கிறது. பொறுமையாக இருங்கள். நிச்சயம் நல்லது நடக்கும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். பதட்டத்தோடு எந்த ஒரு வேலையையும் செய்ய வேண்டாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கோபமான நாளாக இருக்கும். எல்லா வேலையிலும் டென்ஷன் கூடும். உங்களை உசுப்பேத்திவிட மனைவியும் உங்களோடு சேர்ந்து கொள்வார்கள். இதனால் குடும்பத்திலும் சிக்கல். நீங்கள் வேலைக்கு செல்லும் இடத்திலும் சிக்கல்கள் வரும். வீட்டு டென்ஷனோட வேலைக்கு போனால் அங்கு நிம்மதி கிடைக்குமா. எப்படியாவது உங்களை நீங்கள் சாந்தப்படுத்திக் கொள்ளவும். மனதிற்கு பிடித்த பாடல் அல்லது பிடித்த இறைவனின் நாமத்தைச் சொல்லிக் கொண்டே இருங்கள்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். கையில் இருக்கும் 100 ரூபாய் பணத்திற்கு கூட ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகளை செய்யலாம். எதிர்காலத்திற்கு தேவையான சொத்து சுகம் சம்பந்தப்பட்ட முடிவுகளை இன்று எடுக்கலாம். எல்லாம் உங்களுக்கு தன விருத்தியை கொடுக்கக்கூடிய அமைப்பை கொடுக்கும். வீட்டில் சுப செய்திகள் பேசலாம். பெண் பிள்ளைகளுக்கு தங்க நகை வாங்கலாம் இன்று அனுகூலம் நிறைந்த நாள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அசதி இருக்கும். வேலை பளு அதிகமாக இருக்கும். கூடுமானவரை வெளியில் செல்லக்கூடிய பயணத்தை நாளை தள்ளிப் போடுங்கள். தேவையற்ற அலைச்சல் தான் மிஞ்சும். வேலை ஒன்றும் சரியாக நடந்தபடி இருக்காது. அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். தேவைக்கு அதிகமாக பேச வேண்டாம். தேவைக்கு அதிகமாக சிந்திக்க வேண்டாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று எல்லா வேலையிலும் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். அலட்சியப்போக்கோடு திரியக்கூடாது. நீங்கள் எப்போதாவது தவறு செய்கிறீர்களா என்று உங்களை இரண்டு கண்கள் உற்றுப் பார்த்துக் கொண்டே இருக்கிறது. தவறு செய்தால் உங்கள் மீது பழி போட்டு உங்களை வேலையில் இருந்து தூக்கி விடுவார்கள். அந்த அளவுக்கு எதிரிகளின் பார்வை உங்கள் மேல் ஜாக்கிரதை.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தோல்விகள் இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். உங்களுடைய வேலையில் கவனத்தோடு நடந்து கொள்ளுங்கள். மேலதிகாரிகளோடு அனுசரணையாக பேசுங்கள். முன்கோபம் வேண்டாம். தொழிலில் அகல கால் வைக்க வேண்டாம். தெரியாத நபரை நம்பி புது தொழிலை ஆரம்பிக்க வேண்டாம். உஷாராக இருந்தால் பிழைத்துக் கொள்ளலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவான மகிழ்ச்சி நாளாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். பிள்ளைகளின் மூலம் மனநிறைவை அடைவீர்கள். நீண்ட நாள் பிரிந்து இருந்த குடும்பத்தோடு ஒன்று சேர வாய்ப்புகள் இருக்கிறது. வெளிநாட்டில் இருப்பவர்கள் தாயகம் திரும்பலாம். வாகனம் ஓட்டும் போது மட்டும் கொஞ்சம் கவனத்தோடு இருந்து கொள்ளுங்கள். கூர்மையான ஆயுதங்களை பயன்படுத்தும் பெண்களும் ஜாக்கிரதையாக இருக்கணும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு கிடைக்கும். நல்ல வாழ்வு கிடைக்கும். நல்ல சாப்பாடு கிடைக்கும். சந்தோஷமாக இருக்கப் போகிறீர்கள். தொழிலில் பெருசாக பிரச்சனை இருக்காது. முதலீடு செய்ததற்கு உண்டான லாபத்தை அடைவீர்கள். உங்களுக்கு கீழே பணிபுரிபவர்களும் நீங்கள் சொல்வதை கேட்டு நடந்து கொள்வார்கள். கலைஞர்களுக்கு என்று இனிய நாளாக அமையும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top