இன்றைய ராசிபலன் – 30 செப்டம்பர் 2024

இன்றைய ராசிபலன் – 30 செப்டம்பர் 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் எதிர்பார்க்காத பொருட்கள் உங்கள் கையை வந்து சேரும். நீண்ட நாட்களாக செய்ய வேண்டும் என்று நினைத்த காரியத்தை எல்லாம் இன்று செய்து முடிப்பீர்கள். இறை வழிபாடு மனதிற்கு நிறைவை கொடுக்கும். இன்று மாலை குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று நேரத்தை சந்தோஷமாக செல்ல வழிப்பீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் வரும். சேமிப்பும் செய்வீர்கள். வீட்டிற்கு தேவையான உபயோகமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சிறப்பாக செயல்பட்டு நல்ல பெயரும் கிடைக்கும். ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். மன நிறைவு உண்டாகும். கடன் பிரச்சனையிலிருந்து வெளி வருவீர்கள். அடமானம் வைத்த நகையை மீட்பதற்கு உண்டான வாய்ப்புகள் தேடி வரும். சொத்து சுக சேர்க்கை இருக்கிறது.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் செலவுகள் நிறைந்த நாளாக இருக்கும். கையில் இருக்கும் இருப்பு கரைவதால் லேசான மன வருத்தம் இருக்கும். கவலைப்படாதீங்க கடவுள் உங்களுக்கு நிச்சயம் நல்லதை செய்வான். வேலையில் கூடுதல் கவனம் இருக்கட்டும். தேவையான வேலையை கொஞ்சம் முன்கூட்டியே செய்து கொள்ளுங்கள். கடைசி நேரம் வரை வேலையை இழுத்து விட்டுக் கொள்ள வேண்டாம்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு நிறைந்த நாளாக இருக்கும். வார துவக்க நாளாக இருந்தாலும் உங்களுக்கான வேலை அளவோடு தான் இருக்கும். நிறைய நேரம் குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்வீர்கள். கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும். நீண்ட தூர பயணத்தின் மூலம் நன்மை உண்டாகும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் கோபம் நிறைந்த நாளாக இருக்கும். எல்லா விஷயத்திற்கும் வாக்குவாதம் செய்வீர்கள். நிறைய எதிரிகளை சம்பாதித்துக் கொள்வீர்கள். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று இடம் பொருள் ஏவல் அறிந்து பேசுவது நல்லது.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வேலையில் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன சண்டைகளை பெருசாக்க கூடாது. வாக்குவாதம் செய்யக்கூடாது. கணவன் மனைவி விட்டுக் கொடுத்து நடக்க வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று தேவையற்ற மறதி இருக்கும். முக்கியமான விஷயத்தை செய்ய மறந்து விடுவீர்கள். இதனால் திட்டு வாங்குவீங்க.ஸபடிக்கும் பிள்ளைகள் வேலை செய்பவர்கள் எல்லாருக்கும் இந்த பிரச்சனை இருக்கும். இன்று கொஞ்சம் கவனத்தோடு செயல்பட்டால் வரக்கூடிய பிரச்சனையிலிருந்து தப்பிக்கலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சிக்கல்கள் வரும். பிரச்சனைகள் வரும். ஆனால் அதை எல்லாம் துணிச்சலாக எதிர்கொள்ளும் தைரியமும் இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு உறவுகளால் சிக்கல்கள் வரும். வேலைக்கு செல்பவர்களுக்கு மேலதிகாரிகளால் பிரச்சனை வரும். தொழிலில் சின்ன சின்ன தடங்கல் வரும். இதையெல்லாம் சமாளிக்க ஆரோக்கியத்தை பெற நிறைய தண்ணீர் குடியுங்கள். நிறைய சாப்பிட்டு தெம்பாக இருந்து கொள்ளுங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். காலையிலேயே கோவிலுக்கு சென்று இந்த நாளை துவங்கினால் நிறைய நல்லது நடக்கும். ஈசனின் ஆசிர்வாதம் கிடைக்கும். வேலையிலும் தொழிலிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானம் பெருகும் வசதி வாய்ப்புகள் பெருகும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஒரு நிலையாக இருக்காது. சில விஷயங்களுக்கு பேராசைப்படும். கொஞ்சம் அகலக்கால் வைக்கப் பார்ப்பீர்கள். எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் பெரியோர்களின் ஆலோசனையை ஒன்றுக்கு பலமுறை கேளுங்கள். அடம்பிடித்து நீங்களே எந்த ஒரு விஷயத்திற்கும் முடிவு எடுக்க வேண்டாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று உயர்வு நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு செல்ல பிளான் செய்வீர்கள். அது சக்ஸஸ் ஆகும். தொழிலில் கூடுதல் கவனம் இருக்கட்டும். மூன்றாவது நபரை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top