– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். பிரிந்த உறவுகள் நட்புகள் ஒன்று சேர வாய்ப்புகள் இருக்கிறது. வேலை செய்யும் இடத்தில் டென்ஷன் குறையும். சில பேருக்கு முயற்சி செய்து கொண்டிருந்த புதிய வேலை கிடைப்பதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. இன்டர்வியூக்கு அழைப்பு வரும். நீங்கள் இருக்கும் நிலையிலிருந்து ஒரு படி வாழ்க்கையில் முன்னேற இந்த நாள் நிறைய நன்மைகளை உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான சந்தோஷமான நாளாக இருக்கும். உங்களுடைய பிள்ளைகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் பேசி முடிப்பீர்கள். சுப செலவுகள் உண்டாகும். குலதெய்வத்திற்கு நன்றி சொல்ல மறக்காதீங்க. வேலையில் சின்ன சின்ன பிரச்சனைகள் குழப்பங்கள் வரலாம். ஆனால் அதையெல்லாம் புத்திசாலித்தனத்தோடு சரி செய்து விடுவீர்கள். தொழிலிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமை நிறைந்த நாளாக இருக்கும். எவ்வளவு பெரிய சங்கடங்கள் வந்தாலும் உங்களுடைய நிலை தடுமாறாமல் நடந்து கொள்வீர்கள். குறிப்பாக குடும்பத்தில் இருக்கும் பெண்கள் இன்று நிறைய நல்ல விஷயங்களை சாதிப்பீர்கள். குடும்ப ஒற்றுமைக்காக படாத பாடு படுவீர்கள். கவலைப்படாதீங்க உங்க நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதாக நடக்கும். மாணவர்கள் கல்வியில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தினால் நல்லது.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று சாதனை படைக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கலைஞர்களுக்கு எதிர்ப்பாராத அவார்டு கிடைக்கக்கூட வாய்ப்புகள் இருக்கிறது. உங்களுடைய முயற்சிகள் வீண் போகவில்லை என்ற மன நிறைவு இன்று அடைவீர்கள். பயணத்தின் போது கொஞ்சம் கவனமாக இருக்கவும்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். நிதி நிலைமை சீராகும். வாங்கிய கடனை திருப்பிக் கொடுப்பீர்கள். இரவு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள். வேலையிலும் தொழிலிலும் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். உங்களுடைய பொறுப்புகளை அடுத்தவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். எதிர்பாராத வரவு, வங்கி இருப்பை கொஞ்சம் அதிகரிக்கும். சேமிப்பை உயர்த்துவீர்கள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த சண்டை சச்சரவுகள் ஒரு முடிவுக்கு வரும். நீண்ட தூர பயணம் நன்மையை தரும். வேலையில் இடமாற்றம் வந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வரவை விட கொஞ்சம் செலவு அதிகமாக இருக்கும். சேமிப்பு கரைவதற்கு வாய்ப்புகள் இருக்கு. வீட்டில் விருந்தாளிகளின் வருகை கொஞ்சம் சுப செலவை ஏற்படுத்தும். கொஞ்சம் டென்ஷன் அதிகரிக்கும். கவலை படாதீங்க. அடுத்த மாதம் பிறந்த உடன் எல்லா நிதி நிலைமையும் சரி செய்து கொள்ளலாம். சந்தோஷமான சூழ்நிலையில் வெறும் பணத்தை மட்டும் நினைத்து சந்தோஷத்தை இழக்க வேண்டாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் மேற்கொள்ள நல்ல நாளாக இருக்கிறது. புதிய வேலை தேடுவது, புதுசாக ஏதாவது தொழில் தொடங்குவது, புது பொருட்கள் வாங்குவது போன்ற நல்ல காரியங்களை இன்று செய்யுங்கள். உங்களுக்கு லாபகரமாக அமையும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று ரிலாக்ஸ் ஆக உங்களுடைய நாளை தொடங்குவீர்கள். நல்ல ஓய்வு, நல்ல சாப்பாடு கிடைக்கும். நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழில் வேலை எல்லாம் சுமூகமாக செல்லும். தேவையில்லாத டென்ஷனில் இருந்து விடுபடுவீர்கள். நிதிநிலைமை சீராக இருக்கும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி அடைவீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு தேவையற்ற சிந்தனை இருக்கும். தொழிலில் முதலீடு செய்யும் போது கூடுதல் கவனம் இருக்க வேண்டும். முன்பின் தெரியாத நபரை நம்பாதீங்க. முன்பின் தெரியாத வேலையில் காலை வைக்க வேண்டாம். உங்கள் வீட்டு பெரியவர்களின் பேச்சைக் கேட்டு நடக்கவும். வாழ்க்கை துணை பேச்சை உதாசீனப்படுத்துபவர்களுக்கு இன்று பிரச்சனை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அடம் பிடித்து எந்த ஒரு முடிவையும் எடுக்கவே கூடாது ஜாக்கிரதை.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று பிரச்சனையில் இருந்து விடுபடக் கூடிய நாள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த எல்லா பிரச்சனைக்கும் முற்றுப்புள்ளி வைப்பீர்கள். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். பஞ்சாயத்து பிரச்சனை தீர இன்று ஒரு நல்லது நடக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை சில பேருக்கு உண்டாகும். வேலையில் மேலதிகாரிகளை கொஞ்சம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். மன நிறைவாக இந்த நாளை தொடங்குவீர்கள். டென்ஷன் ஆன வேலை எல்லாம் ஒரு முடிவுக்கு வரும். வேலையில் டார்கெட்டை சரியாக முடிப்பீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பிள்ளைகளாலும் மனைவியாலும் மனமகிழ்ச்சி ஏற்படும்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam