
மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முழுவதும் நல்ல முன்னேற்றம் நிறைந்த மாதமாக இருக்கும். நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். புதுசாக தொழில் தொடங்கலாம். புது வேலை தேடலாம். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். எல்லாம் நல்லபடியாக தான் நடக்கும். ஆனால் குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் பொறுமையாக இருக்க வேண்டும். அதிரடியாக எந்த வேலையும் செய்யக்கூடாது. மனைவிக்கு ஆதரவாக நடந்து கொள்ளுங்கள். கணவனுக்கு ஆதரவாக நடந்து கொள்ளுங்கள். செலவை குறைத்துக் கொள்ளுங்கள். சேமிப்பை இரட்டிப்பாக்குங்கள். நல்லதே நடக்கும். இந்த மாதம் பைரவர் வழிபாடு உங்களுக்கு நன்மையை செய்யும்.ரிஷபம்ரிஷப ராசிக்காரர்கள் இந்த மாதம் முழுவதும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அலட்சியம் இருக்க வேண்டாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் இருக்கட்டும். ஜாமின் கையெழுத்து போடும்போது கவனம் இருக்கட்டும். மற்றபடி இல்லற வாழ்க்கை இனிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். குழந்தை பாக்கியம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி இருக்கிறது. தடைபட்ட சுப காரியங்கள் வீட்டில் நடக்கும். வீட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு சில பல பிரச்சனைகள் வர வாய்ப்பு இருக்கு. பெற்றவர்கள் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். தினமும் குலதெய்வத்தை கும்பிடுங்கள் நல்லது நடக்கும். – Advertisement -மிதுனம்மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முழுவதும் புது புது அனுபவங்கள் கிடைக்கும். நிறைய புது மனிதர்களை சந்திப்பீர்கள். புதுசாக நிறைய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். இந்த மாதம் வேலை வியாபாரம் எல்லாம் நல்ல முன்னேற்றத்தோடு இருக்கும். குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் கவனம் இருக்க வேண்டும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து நடக்க வேண்டும். வாக்குவாதம் செய்யக்கூடாது. வீட்டில் இருக்கும் சிறியவர்கள், பெரியவர்களை அனுசரித்து செல்ல வேண்டும். தினமும் சிவனை கும்பிட்டால் நன்மை நடக்கும்.கடகம்கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பொறுமை தேவை. அவசரப்பட்டு உணர்ச்சிவசப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்கக் கூடாது. பழைய விஷயங்களை பேசி பிரச்சனைகளை கிளப்பக்கூடாது. வேலையிலும் சரி, வியாபாரத்திலும் சரி, நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். மனதை அமைதியாக வைத்துக்கொள்ள ஏதாவது வழி இருந்தால் தேடுங்கள். சேமிப்பை உயர்த்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளலாம். நல்லதே நடக்கும். தினமும் அம்மன் வழிபாடு செய்வது உங்களுக்கு நன்மையை தரும். துர்க்கை, அங்காளம்மன், மாரியம்மன், வாராகி இப்படி ஏதாவது ஒரு அம்மனை வழிபாடு செய்யலாம். – Advertisement – சிம்மம்சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முழுவதும் சுறுசுறுப்பு இருக்கும். தைரியம் இருக்கும். தன்னம்பிக்கை இருக்கும். எத்தனை பேர் இருந்தாலும் யார் இருந்தாலும் உங்களுடைய பேச்சில் இருக்கும் தெளிவு அத்தனை சுத்தமாக இருக்கும். எந்த ஒரு குழப்பமும் உங்கள் மனதில் இருக்காது, பேச்சிலும் இருக்காது. உங்களுடைய இந்த திறமை இந்த மாதம் முழுவதும் வெற்றிகளை கொண்டு வந்து குவிக்கும். செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். சேமிப்பை உயர்த்துவதில் கவனம் காட்டுங்கள். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். தினமும் அனுமனை கும்பிடுங்கள் நல்லது நடக்கும்.கன்னிகன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கொஞ்சம் வேலை பளு அதிகமாக தான் இருக்கும். கொஞ்ச நேரம் கூட ஓய்வு எடுக்க முடியாத சூழ்நிலை இருக்கும். வெளியூர் பயணங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. சுப செலவுகள் ஏற்படும். உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. உணவு சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் கட்டுக்கோப்பாக இருங்கள். உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவை சாப்பிடுங்கள். எளிதில் ஜீரணம் ஆகாத உணவை சாப்பிட வேண்டாம். பெரியவர்களுக்கு மரியாதை கொடுத்து நடக்கவும். செவ்வாய் கிழமை துர்க்கை வழிபாடு செய்வது சிறப்பு. – Advertisement -துலாம்துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முழுவதும் சந்தோஷம் இருக்கும். கடன் சுமை குறையும். வருமானம் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை இருக்கிறது. கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும். வாழ்க்கைத் துணைக்கு பிடித்த பொருட்களை பரிசாக வாங்கி கொடுத்து மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் மட்டும் நீங்கள் இந்த மாதம் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். மூன்றாவது நபரை முழுசாக நம்ப கூடாது. வியாபாரத்தை முழுசாக அடுத்தவர்களை நம்பி ஒப்படைக்க கூடாது. முதலீடு போட்டவரே கணக்கு வழக்கை பார்க்க வேண்டும். வாய்த் தகராறு வரும்போது கவனம் தேவை. அடுத்தவர்கள் பஞ்சாயத்தில் தலையிட வேண்டாம். சனிக்கிழமை நவகிரகங்களை வழிபடுங்கள் நன்மை நடக்கும்.விருச்சிகம்விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கொஞ்சம் சோர்வான மாதமாகத் தான் இருக்கும். வேலைகளை எல்லாம் சுறுசுறுப்பாக செய்ய முடியாது. தேவையற்ற சண்டை சச்சரவுகள் குடும்பத்தில் வரலாம். மனது அமைதியை இழக்க கூடிய சூழ்நிலை உண்டாகலாம். உடனடியாக பயந்து விடக்கூடாது. எதையும் எதிர்த்துப் போராடும் துணிச்சல் தேவை. பிரச்சனைகள் வரும் என்று சொல்லுவது எதற்காக. பிரச்சனைகளை எதிர்கொள்ள முன்கூட்டியே தயாராக வேண்டும். இறைவனின் ஆசி உங்களுக்கு இருக்கு. இது சோதனை காலகட்டம். அவ்வளவுதான். நிதிநிலைமை இந்த மாதம் உங்களுக்கு சீராக தான் இருக்கும். வருமானம் பெருகும். மற்ற பிரச்சனைகளை மட்டும் சமாளிக்க தெம்பேற்றிக் கொள்ளுங்கள். மன தைரியத்தை கொடுக்கும் முருகனை வழிபடுங்கள்.தனுசுதனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும். புதுப்புது மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். வாழ்க்கையில் நிறைய புது விஷயங்களை கற்றுக் கொள்ளப் போகிறீர்கள். மாணவர்களுக்கு இந்த காலகட்டம் நல்ல முன்னேற்றம் தரக்கூடிய வகையில் அமையும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்களுடைய பொறுப்புகளை நீங்கள் தான் பார்த்து செய்ய வேண்டும். அடுத்தவர்களுடைய கையில் பொறுப்புகளை ஒப்படைக்கும் போது, பிரச்சனைகள் வரலாம். யார் என்ன சொன்னாலும் அதை காதில் வாங்கிக் கொள்ளக் கூடாது. கெட்ட விஷயங்களை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளக் கூடாது. துனிச்சல் இருந்தால் இந்த மாதம் நிச்சயம் ஜெயித்து விடுவீர்கள். தினமும் விநாயகரை கும்பிடுங்கள்.மகரம்மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் மாதமாக இருக்கப் போகிறது. நீண்ட நாள் இந்த வேலையை என்னால் செய்யவே முடியவில்லை அப்படி என்று ஏதாவது கிடப்பில் போட்டு வைத்திருந்தால், அந்த வேலையை இந்த மாதம் கையில் எடுங்கள். நிச்சயம் வெற்றி காண்பீர்கள். கோர் கேஸ் வழக்குகள், பஞ்சாயத்து இதுபோல இழுப்பறியாக இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம், ஒரு முடிவுக்கு வரும். கணவன் மனைவிக்குள் இருந்த சண்டை குடும்ப உறவுகளுக்குள் இருந்த சண்டை எல்லாம் ஒரு முடிவுக்கு வரும். தடைகளை எல்லாம் தகர்த்து வெற்றி காணக்கூடிய மாதம் இந்த மாதம். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிறைய லாபங்களை சம்பாதிப்பீர்கள். இளவயதில் உள்ளவர்கள், மாணவர்கள் எல்லாம் இந்த மாதம் கொஞ்சம் கவனத்தோடு இருக்க வேண்டும். குறுக்கு பாதையில் செல்வதற்கு மனம் தடுமாறும். அதற்கு முட்டுக்கட்டை போடுங்கள். மனதை நேர்வழியில் கொண்டு செல்ல தினமும் சிவனை கும்பிடுங்கள்.கும்பம்கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சந்தோஷம் நிறைந்த மாதமாக இருக்கும். வேலையில் சிறப்பாக உங்களுடைய திறமைகளை வெளிக்காட்டுவீர்கள். மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். நிதி நிலைமை உயரும். வருமானம் உயரும். நிதி நிலைமையை உயர்த்த முயற்சி செய்யலாம். ஷேர் மார்க்கெட் தங்கம் இதுபோல விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு நல்ல லாபத்தை கொடுக்கும். ஆரோக்கிய பிரச்சனையில் மட்டும் முழு கவனம் இருக்கட்டும். உடலுக்கு ஆரோக்கியம் இல்லாத உணவுகளை சாப்பிடாதீங்க. நேரத்திற்கு சத்தான உணவுகளை சாப்பிடுங்கள். சனிக்கிழமை தோறும் பெருமாளை கும்பிடுங்கள் நல்லது நடக்கும்.மீனம்மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பிரச்சினைகள் குறைய கூடிய மாதமாக இருக்கும். ஆரோக்கியத்தில் நீங்கள் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் இருக்கும். மருத்துவ செலவுகள் குறையும். இறைவழிபாட்டில் மனது ஈடுபடும். பிள்ளைகளுடைய நலனில் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள். கைபேசியை அதிக நேரம் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. செலவை குறைத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கை துணை பேச்சை கேட்டு நடப்பது நல்லது. வாழ்க்கை துணையிடம் எந்த ஒரு ரகசியத்தையும் வைக்காதீங்க. வாழ்க்கைத் துணையிடம் வெளிப்படையாக பேசுவது, உண்மையை பேசுவது நன்மையை தரும். இந்த மாதம் நரசிம்மர் வழிபாடு உங்களுக்கு நன்மையை செய்யும்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam