– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சிறப்பான பலன்களை தரும் மாதமாக திகழப் போகிறது. இருப்பினும் குடும்பம் சார்ந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தாய் வழி ஆதரவு கிடைக்கும். புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நீண்ட கால ஆசைகள் நிறைவேறுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும்.
குடும்பத்திலும் வேலை செய்யும் இடத்திலும் கவனமாகவும் நிதானமாகவும் பேச வேண்டும். எந்த வேலையை செய்தாலும் அதில் முழு கவனம் செலுத்தி செய்யும் பொழுது கண்டிப்பான முறையில் வெற்றி கிடைக்கும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. செலவுகளை குறைக்க முயற்சி செய்ய வேண்டும். பணி சுமை அதிகமாக இருக்கும். அதனால் வேலையை திட்டமிட்டு செய்வதன் மூலம் சிறப்பாக செய்து முடிக்க முடியும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.
– Advertisement –
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் உணர்ச்சிவசப்படக் கூடிய மாதமாக திகழப் போகிறது. எந்த முடிவெடுப்பதாக இருந்தாலும் சற்று கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை உண்டாகும். உரிய ஆலோசனை பெற்ற பிறகு முடிவெடுப்பது நல்லது. எண்ணங்களை வெளிப்படையாக வெளிப்படுத்தும் சூழ்நிலை உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் நேரத்தை செலவிட வாய்ப்புகள் கிடைக்கும்.
பணியிடத்தில் சக ஊழியர்களுடன் நல்ல உறவு மேம்படும். எந்த வேலையாக இருந்தாலும் நம்பிக்கையுடன் செய்தால் வெற்றிகள் கிடைக்கும். நீண்ட நாட்களுக்கு முன்பு செய்த முதலீட்டின் மூலம் அதிக லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு மகாலட்சுமியை வழிபட வேண்டும்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பிரகாசமான மாதமாக திகழப் போகிறது. தன்னம்பிக்கையும் உற்சாகமும் அதிகரிக்கும். நேர்மறையான கண்ணோட்டம் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். நோய்கள், மனக்கவலை நீங்கும்.
பணவரவு அதிகரிக்கும். அதே சமயம் வீண் விரையமும் ஏற்படும். தொழிலில் அதிக லாபம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் திறமையும் மதிப்பும் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்.
– Advertisement –
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முன்னேற்றம் மிகுந்த மாதமாக திகழப் போகிறது. நான் தான் பெரியவன் என்ற எண்ணம் மேலோங்கும். மனம் மற்றும் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பம் மற்றும் வேலை தொடர்பாக சாதகமான மாற்றங்களை எதிர்பார்க்கலாம். மன உறுதியுடன் செயல்பட்டு அனைத்து வேலையிலும் வெற்றியைப் பெற முடியும்.
கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய நகைகள் ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இந்த மாதம் சுறுசுறுப்புடன் செயலாற்ற வேண்டிய மாதமாக திகழப் போகிறது. செலவுகளில் கவனம் செலுத்தி புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டால் பணத்தை சேமிக்க முடியும். பணவரவு அதிகரித்தாலும் வீண் விரையத்தால் பண விரயம் உண்டாக வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய ஒப்பந்தம் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் உள்ளது.
வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் விரும்பிய வேலை கிடைப்பதற்கு உரிய வாய்ப்புகள் உள்ளது. சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் உண்டாகும். கிடைக்கும் வாய்ப்பை தாமதிக்காமல் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் நல்ல நிலைக்கு முன்னேற முடியும். வெளிநாடு செல்லும் யோகம் சாதகமாக உள்ளது. இந்த வாரம் இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு லட்சுமி நாராயணரை வழிபட வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் வெற்றிகரமான மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். பணவரவு அதிகரிக்கும். பல வழிகளிலும் வருமானம் உண்டாக்கும். உடல் நலனில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. கவனம் தேவை. நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த காரியங்கள் அனைத்தும் எதிர்பார்த்த படி நிறைவேறும். முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.
வேலையில் உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பயணங்களின் மூலம் நன்மைகள் உண்டாக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். பிறரிடம் பேசும் பொழுது தேவையற்ற வாக்குறுதிகள் தருவதை மட்டும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு பெருமாளை வழிபட வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மேன்மையான மாதமாக திகழப் போகிறது. குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகவே கருதப்படுகிறது. வேலைக்காக குடும்பத்தை விட்டுக் கொடுக்காமலோ அல்லது குடும்பத்திற்காக வேலையை விட்டுக் கொடுக்காமலோ சமநிலைப்படுத்தி செய்வதன் மூலமே நல்ல ஒரு உயர்வை பெற முடியும். நல்ல செய்தி வீடு தேடி வரும். வாழ்க்கையில் முன்னேறுவதற்கு தேவையான வாய்ப்புகள் பல வழிகளில் தேடி வரும்.
வேலை மற்றும் தொழில் ரீதியான நல்ல முன்னேற்றம் ஏற்படும். வருமானம் உயர்வதற்கு பல வாய்ப்புகள் கிடைக்கும். கடன் குறைய ஆரம்பிக்கும். உறவினர்களிடையே மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் சற்று கவனத்துடன் பழகுவது நல்லது. வேலை மற்றும் தொழிலை சிறப்பாக செய்து அதில் பாராட்டும் பெறுவீர்கள். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சாதகமான மாதமாக திகழப் போகிறது. லட்சியத்தை அடைவதற்கு உற்சாகமாக செயல்படுவீர்கள். எந்த செயலிலும் கவனமாக செயல்பட்டால் தான் வெற்றி கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். பணியிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். விரும்பிய சலுகை கிடைப்பதற்கு உரிய வாய்ப்புகளும் உண்டாக்கும்.
சுப காரியங்கள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகள் உள்ளது. கடந்த மாதங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். முன்னேற்றத்திற்குரிய வாய்ப்புகள் பல வரும். அதை முறையாக பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றியை பெற வேண்டும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த வாதமாக திகழ்வதற்கு நரசிம்மரை வழிபட வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சிறப்பான பலன்கள் நிறைந்த மாதமாக திகழப் போகிறது. மன அமைதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். வேலையில் இருந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். முயற்சிகளுக்கு பலன்கள் தாமதமாகவே கிடைக்கும். ஒரு சிலருக்கு திடீர் யோகம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். சவால்களை திறமையாக எதிர்கொண்டு சமாளித்து விடுவீர்கள். வேலையில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அதனால் எதிர்பார்த்த பலன்களும் உண்டாகும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மகிழ்ச்சிகரமான மாதமாக திகழப்போகிறது. இடம் வாங்கி வீடு கட்டும் யோகம் ஏற்படும். சொத்துக்கள் அதிக அளவில் சேர்வதற்குரிய வாய்ப்புகள் உள்ளது. கடன் சுமை குறைய ஆரம்பிக்கும். முயற்சிகள் வெற்றிகரமாக நடைபெறும். ராஜதந்திரமாக யோசித்து செயலாற்றுவீர்கள். வேலையில் நல்ல பெயரை எடுப்பீர்கள். உங்களுடைய மதிப்பு அதிகரிக்கும். புகழ் அதிகரிக்கும்.
தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்குரிய நிலை உண்டாகும். திறமைகள் வெளிப்படும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். வேலை சுமை அதிகமாக இருக்கும். அதனால் வேலையை திட்டமிட்டு செய்வது நல்லது. இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு பைரவரை வழிபட வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஏற்ற இறக்கம் நிறைந்த மாதமாக திகழப் போகிறது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். அரசாங்க வேலைகள் எளிதாக முடியும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகள் உள்ளது.
வெளிநாடு செல்லும் யோகம் உள்ளது. பயணங்களால் நல்ல அனுபவம் ஏற்படும். சவால்களை சிறப்பாக கையாளுவீர்கள். கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. மனதில் ஒருவித தெளிவு பிறக்கும். அதனால் மன வலிமை அதிகரிக்கும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு அம்மனை வழிபட வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அற்புதமான பலன்கள் தரும் மாதமாக திகழப் போகிறது. ஒரு சிலருக்கு சொந்தமாக வீடு வாங்குவது அல்லது வீட்டை புதுப்பிப்பது போன்ற காரியங்களில் ஈடுபடலாம். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் அவை அனைத்தையும் எளிதில் சமாளித்து விடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். செல்வாக்கும், பதவி உயர்வும் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதில் படிப்படியான முன்னேற்றத்தை உணர்வீர்கள். யாரையும் காயப்படுத்தி பேசாமல் இருப்பது நன்மையை தரும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு வாராகி அம்மனை வழிபட வேண்டும்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam