
– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. உங்களுடைய சேமிப்பை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். முதலீட்டின் போது கவனமாக இருக்க வேண்டும். மூன்றாவது நபர் பேச்சை கேட்டு, தெரியாத மனிதர்களின் பேச்சை கேட்டு, பணத்தை யாருக்கும் கொடுக்காதீங்க. பணத்தை யாரிடமிருந்தும் கை நீட்டி வாங்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். செலவையும் கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டும். மற்றபடி வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வெள்ளிக்கிழமை அன்று பெருமாள் கோவிலுக்கு சென்று நெய் தீபம் போட்டு வழிபாடு செய்யுங்கள். பண பிரச்சனைகள் குழப்பங்கள் தீரும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இந்த மாதம் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். நீங்கள் நீண்ட நாட்களாக முயற்சி செய்து தோல்வியடைந்த விஷயங்களை, இந்த பங்குனி மாதத்தில் கையில் எடுத்துப் பாருங்கள். எல்லாம் நல்லபடியாக நடந்து முடியும். வேலை சம்பந்தப்பட்ட விஷயம், வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயம், குடும்பத்தில் சுப காரிய பேச்சுக்கள் என்று எல்லாம் உங்களுக்கு இந்த மாதம் சுபம் தான். தேவையில்லாத குழப்பத்திலிருந்து உங்களுடைய மனம் விடுபடும். புதிய பொன் பொருள் சேர்க்கை இருக்கிறது. நீண்ட தூர பயணங்களும் நன்மையை கொடுக்கும். செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மன் வழிபாடு செய்யுங்கள் நல்லது.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் வருமானம் நிறைந்த மாதமாக இருக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக வராத பணத்தை கடவுள் உங்கள் கையில் கொண்டு வந்து சேர்ப்பான். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வேலையில் திறமை வெளிப்படும். நல்லது நடக்கக்கூடிய மாதமாக இந்த மாதம் அமையப்போகின்றது. வெளியில் எல்லாம் நல்லதாக நடந்தாலும், குடும்பத்தில் சில பிரச்சினைகள் வரலாம். மனைவியிடம் பொய் சொல்லக்கூடாது. மனைவிமார்கள் கணவரிடம் பொய் சொல்லக்கூடாது. எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக பேசுங்கள். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடந்தால் இந்த மாதம் வரும் சண்டைகள் குறையும். எதிரிகளோடு கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். சனிக்கிழமை பெருமாள் வழிபாடு உங்களுக்கு நன்மையை தரும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நன்மைகள் நடக்கக்கூடிய மாதமாக இருக்கும். எந்த பிரச்சினையும் இல்லை. இருந்தாலும் நீங்கள் எல்லா வேலையையும் ஒரு டைம் டேபிள் போட்டு செய்வது நல்லது. நேரத்தை அனாவசியமாக வீணடித்து விட்டால், பிறகு ஒரே நாளில் எல்லா வேலை பளுவும் தலை மேல் விழும்படி ஆகிவிடும். அடுத்தவர்கள் உங்களை மூளை சலவை செய்து உங்களுடைய வேலையை கெடுக்க பார்ப்பார்கள். அந்த நபரை அடையாளம் கொள்ளுங்கள். அந்த நபரிடம் இருந்து விலகி இருக்க வேண்டியது ரொம்ப ரொம்ப அவசியம். குடும்ப உறவுகளோடு அனுசரித்து நடக்க வேண்டும். இந்த மாதம் கொஞ்சம் பொறுமையாக இருங்கள். எதிலும் அவசரப்பட வேண்டாம். நீங்கள் தினமும் முருகர் வழிபாடு செய்தாலும் உங்களுக்கு அளவில்லா ஆனந்தம் பெருகும்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கொஞ்சம் துணிச்சல் வெளிப்படும். இவ்வளவு நாள் ரொம்பவும் அமைதியாக இருந்த இடத்தில் கூட பொங்கி எழுந்து விடுவீர்கள். குட்ட குட்ட எத்தனை நாள் தான் குனிய முடியும். எதிரிகளை சூறையாடுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் படு சுறுசுறுப்பு இருக்கும். உங்களைப் பார்த்தாலே அதிரடி தான். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்று சொல்லுவார்கள் அல்லவா. அது போல தான் இந்த மாதம் எல்லாம் தடபுடலாக அதிரடி நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நினைத்து பார்க்க முடியாத நல்லது நடக்கும். கவலை படாதீங்க. ஏமாற்றியவர்கள் முன்பு இந்த மாதம் தலை நிமிர்ந்து வாழ்வீர்கள். தினமும் குலதெய்வத்தை நினைத்து வழிபாடு செய்யுங்கள். நல்லதே நடக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மன தெளிவு இருக்கும். எந்த குழப்பமும் இருக்காது. எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும், சாதாரணமாக எதிர்கொள்வீர்கள். பெரிய பெரிய பிரச்சனைகள் எல்லாம் சுலபமாக முடிவை எடுப்பீர்கள். உங்களுடைய பிரச்சனைக்கு தீர்வு காண்பதோடு மட்டுமல்லாமல், உங்களுடைய நண்பர்கள் உறவுகளையும் வாழ்க்கையில் மேலே உயர்த்தி விட நிறைய ஆலோசனை கொடுப்பீர்கள். இந்த மாதம் உங்களுக்கு இறைவனின் அருள் பரிபூரணமாக கிடைக்கப் போகிறது. வேலை வியாபாரத்தில் எல்லாம் கவனத்தோடு இருக்கும் நீங்கள், வீட்டையும் கவனிக்க வேண்டும். எந்த அளவிற்கு வேலையில் ஆர்வம் காட்டுகிறீர்களோ, அதே அளவுக்கு குடும்பத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள். வியாழக்கிழமை குரு பகவான் வழிபாடு செய்யுங்கள் நன்மை நடக்கும்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு தேவையற்ற பிரச்சனைகள் இந்த மாதம் விலகிவிடும். நீண்ட நாட்களாக உங்களுக்கு தொல்லை கொடுத்து வந்த எதிரி பிரச்சனையும் நீங்கும். நிதிநிலைமை சீராகும். வாரா கடன் வசூலாகும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்து முன்னேறுவதற்கு உண்டான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நண்பர்களின் வருகை வாழ்க்கையில் நல்ல அனுபவங்களை கொடுக்கும். வீட்டில் புதிய வரவு இருக்கிறது. குழந்தை பாக்கியம் தேடி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. திருமணத்திற்கு நல்ல வரணும் அமையும். இந்த மாதம் நிறைய வெற்றி கிடைக்கும் மாதமாக தான் இருக்க போகிறது. சந்தோஷமாக அந்த ஈசனுக்கு நன்றி சொல்லுங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டம் நிறைந்த வாரமாக இருக்கப் போகிறது. எதிர்பாராத இடத்திலிருந்து பணம் வரும். எதிர்பாராத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். நீங்கள் இதைப் பற்றி யோசித்தே இருக்க மாட்டீர்கள். ஆனால் அப்படி ஒரு நன்மை உங்களை தேடி வர காத்துக்கொண்டிருக்கிறது. வாய்ப்புகளை நழுவ விடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். யாரையும் எதிர்த்து பேசாதீர்கள். அவமானப்படுத்தி பேசாதீர்கள். எந்த ஒரு பிரச்சனைக்கு பின்னாலும் உங்களுக்கு ஒரு நல்லது மறைந்திருக்கிறது. அதை அலசி ஆராய்ந்து எடுப்பதில் தான் உங்களுடைய திறமை இருக்கிறது. இந்த மாதம் திறமையை வெளிப்படுத்துங்கள். வேகமாக செயல்படுவதை விட விவேகத்தோடு செயல்படுவது இந்த மாதம் உங்களுக்கு கூடுதல் வெற்றியைத் தரும். தினமும் விநாயகரை வழிபாடு செய்யுங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கொஞ்சம் வேலை பளு அதிகமாக இருக்கும். வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். பிள்ளைகளுக்கு விடுமுறை நாட்கள் வரப்போகிறது. கொஞ்சம் அலைச்சல் கூடுதலாக தான் இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். கொஞ்சம் வயதானவர்கள் வெயிலில் வெளியே செல்ல வேண்டாம். நிறைய தண்ணீர் குடியிருக்க வேண்டும். உடல் சூடு உபாதைகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உண்டாகும். சிவன் கோவிலில் இருக்கும் பைரவரை வழிபாடு செய்யுங்கள் நல்லது நடக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த பங்குனி மாதம் நிறைய நல்ல வாய்ப்புகள் தேடி வரும். இவ்வளவு நாள் வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டு கொண்டு இருந்திருப்பீர்கள். இனி வரக்கூடிய நாட்களில், கையில் இருக்கும் வேலையை செய்ய முடியாமல், நேரமில்லாமல், அவதிப்பட போகிறீர்கள். நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். பொழுதுபோக்கில் அதிக கவனம் செலுத்தக்கூடாது. வீண்விரய செலவை குறைக்க வேண்டும். முன்பின் தெரியாத நபருடன் அதிகமாக பேசி பழக வேண்டாம். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். குடும்ப விஷயங்களை வெளி ஆட்களிடம் சொல்ல வேண்டாம். தெரியாத நபர்களை குடும்பத்திற்குள் ரொம்பவும் நெருக்கமாக அனுமதிக்காதீர்கள். உங்களுடைய பிள்ளைகளுடைய போக்கிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வாராகி, பிரத்தியங்கிரா, அங்காள பரமேஸ்வரி, இதுபோல அம்மன் வழிபாடு செய்வது இந்த மாதம் உங்களுக்கு சிறப்பான பலனை கொடுக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நல்லது நடக்கக்கூடிய மாதமாக தான் இருக்கும். வேலை வியாபாரம் எல்லாம் நீங்கள் நினைத்ததை விட நல்லபடியாக நடக்கும். எப்பாடு பட்டாவது உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். ஆனால் குடும்பம் வீடு சம்பந்தப்பட்ட விஷயத்தில் நிலையாக ஒரு முடிவை எடுக்க முடியாது. சுப காரிய தடைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. கவனமாக இருங்கள். மனைவி குழந்தை இவர்களோடு அனுசரணை தேவை. குடும்ப விஷயத்தில் இந்த மாதம் நீங்கள் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். குலதெய்வ வழிபாடு உங்களுக்கு நன்மையை தரும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நல்ல பெயர் கிடைக்கும். வாழ்க்கையில் சற்று முன்னேறுவதற்கு தேவையான அத்தனை பாதைகளும் திறக்கப்படும். ஆனால் உடன் இருப்பவர்களால் பிரச்சனை, கூட வேலை செய்பவர்களால் பிரச்சனை, உடன் இருப்பவர்களே பொறாமைப்படுவார்கள். உங்களுடைய முன்னேற்றத்தை கண்டு வயிற்று எரிச்சல் படுவார்கள். இதனால் சில பல பிரச்சனைகள் சிரமங்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கவனமாக இருக்கவும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். பேச்சில் நேர்மை இருக்க வேண்டும். கடினமான வார்த்தையை பயன்படுத்தாதீங்க. உங்களுக்கு எதிரியாகவே இருந்தாலும் அவர்களுக்கு விஷயத்தை சொல்லி புரிய வைப்பது நல்லது. அனுமன் வழிபாடு செய்யுங்கள் நல்லது நடக்கும்.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam