– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டம் நிறைந்த வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். இருப்பினும் மனதின் தேவையற்ற குழப்பங்கள் வந்து கொண்டே இருக்கும். குடும்பத்தில் சரிவர கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை உண்டாகும். உடன் பிறந்தவர்களால் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் அந்த பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
வேலையை பொருத்தவரை விரும்பிய பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவதற்குரிய வாரமாகவும் திகழும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைக்கும். வேலை செய்பவர்கள் நல்ல முறையில் வேலை செய்து லாபத்தை உயர்த்துவார்கள். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.
– Advertisement –
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சாதகமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தைப் பொருத்தவரை எதிர்பார்த்ததை விட அதிக அளவு பண வரவு ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அவை அனைத்தும் சரியாகிவிடும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். விருப்பங்கள் நிறைவேறும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். அதில் கூடுதல் கவனம் செலுத்தி உடன் பணிபுரிபவர்களிடம் எச்சரிக்கையுடன் இருந்து கொண்டால் எந்த வித பிரச்சனைகளும் ஏற்படாது. தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைப்பதற்காக கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். தொழிலை விரிவுபடுத்த மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியைத் தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அபிராமி அம்பிகையை வழிபட வேண்டும்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் புதிய வாய்ப்புகள் ஏற்படும் வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவுக்கு பணவரவு இருக்காது. இருப்பினும் குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் காணப்படும். புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நன்மையை தரும்.
வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சலுகைகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. தொழிலில் இருக்கக்கூடிய போட்டிகளை சமாளிக்க கடுமையாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். புதிய முயற்சிகளை இந்த வாரம் மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.
– Advertisement –
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும் வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். செலவுகளை சமாளிக்கும் அளவிற்கு வருமானம் வந்து கொண்டே இருக்கும். உடன் இருப்பவர்களிடம் பக்குவமாக நடந்து கொள்வதன் மூலம் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். திருமண பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல முறையில் திருமணம் நிச்சயமாகும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். புதிதாக வேலைக்கு முயற்சி செய்வதை தவிர்ப்பது நல்லது. உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வேலை தொடர்பான பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் ஏற்படாது. புதிய முதலீடுகள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. யார் பேச்சையும் கேட்டு எந்தவித முயற்சிகளும் ஈடுபடாமல் இருக்க வேண்டும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கோபத்தை தவிர்க்க வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். அதற்கு இணையான செலவுகளும் உண்டாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த நல்ல செய்தி வரும். பேசும்பொழுது கவனமாக இருக்க வேண்டும். பிறரிடம் வீண் மனஸ்தாபம் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உள்ளது. திருமணம் முயற்சிகள் சாதகமான பேச்சுவார்த்தைக்கு வரும்.
வேலையை பொருத்தவரை புதிய வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த தடைபட்டிருந்த சலுகைகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்து அளவிற்கு லாபம் கிடைக்கும். புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் அதற்குரிய முயற்சிகளை இந்த வாரத்தில் தொடங்குவது வெற்றிகரமாக முடிவதற்குரிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திட்டமிட்ட காரியங்களை நடத்தி முடிக்கும் வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்க்கு பணவரவு ஏற்படாது என்றாலும் செலவுகளை சமாளிக்கும் அளவிற்கு வரவு உண்டாகும். எதை செய்வதாக இருந்தாலும் பொறுமையுடன் அவசரப்படாமல் நிதானமாக செய்வதன் மூலம் வெற்றிகள் உண்டாகும். யாருக்கும் வாக்குறுதிகள் தராமல் இருப்பது நல்லது. வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது சற்று எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். உடன் இருப்பவர்களை அனுசரித்து சென்றால் நன்மைகள் உண்டாகும். ஒரு சிலருக்கு திடீர் பணவரவு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உள்ளது.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். அதை திறம்பட செய்து முடித்து அதற்கேற்ற சலுகைகளை பெறுவதற்குரிய வாய்ப்புகளும் இருக்கிறது. தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். அந்த லாபத்தை பயன்படுத்தி தொழிலை விரிவுபடுத்தவும் சொந்த இடத்திற்கு மாற்றவும் வாய்ப்புகள் உள்ளது. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு வெங்கடாசலபதி பெருமாளை வழிபட வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டிய வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை ஓரளவுக்கு செலவுகளை சமாளித்து விடலாம். செலவுகள் செய்த பிறகே வருமானம் வருவதற்குரிய வாய்ப்புகள் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உள்ளது. முக்கியமான முடிவுகள் ஏதாவது எடுப்பதாக இருந்தால் நான்கு பேரிடம் நன்றாக கலந்த ஆலோசித்து எடுப்பது என்பது மிகவும் சிறப்பு. வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது.
வேலையை பொருத்தவரை சாதகமற்ற சூழ்நிலையே நிலவுகிறது. வேலையில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. மேலும் புதிதாக எந்த வேலைக்கும் முயற்சி செய்யாமல் இருப்பது நல்லது. தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவுக்கு லாபம் இருக்காது என்றாலும் செலவுகளை சமாளிக்கும் அளவிற்கு லாபம் உண்டாகும். தொழிலை புதிய இடத்திற்கு மாற்றுவதற்கான முயற்சிகளை செய்தால் சிறப்பாக இருக்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அம்பாளை வழிபட வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஏற்ற இறக்கம் நிறைந்த வாரமாகவே திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு அவை சரியாகிவிடும். நீண்ட நாட்களாக வீடு மனை வாங்க வேண்டும் என்று நினைத்தவர்கள் அதற்குரிய முயற்சிகளை இந்த வாரம் மேற்கொள்ளலாம். ஒரு சிலருக்கு பழைய கடன்கள் அடைப்பதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும்.
வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. சம்பள உயர்வு கிடைப்பதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். இருப்பினும் வேலையில் கவனம் செலுத்தி செயல்பட வேண்டும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பது சற்று சிரமமாக இருக்கும். தொழிலில் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்காமல் இருப்பது நல்லது. அவசரப்பட்டு எந்தவித வாக்குறுதிகளையும் தராமல் இருக்க வேண்டும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கடமைகளை நிறைவேற்றும் வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததைவிட பணவரவு அதிகமாகவே இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. கணவன் மனைவிக்கிடையே சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதால் சிறு உடல் உபாதைகள் உண்டாகும். புரிந்து கொள்ளாமல் பிரிந்து சென்ற உறவுகள் விரும்பி வந்து சேருவார்கள்.
வேலையை பொருத்தவரை வேலை சூழ்நிலை சாதகமாகவே இருக்கிறது. உடன் பணிபுரிபவர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். ஒரு சிலருக்கு அவர்கள் விரும்பிய சலுகைகள் கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளது. தொழிலை பொருத்தவரை எதிர்ப்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணங்களை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நற்பலன்கள் நிறைந்த வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.
வேலையை பொருத்தவரை எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் உள்ளது. ஒரு சிலருக்கு அவர்கள் விரும்பிய வேலை கிடைப்பதற்குரிய வாய்ப்புகளும் ஏற்படும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். இதனால் சொந்த இடத்திற்கு தொழிலை மாற்றி தொழிலை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு தக்ஷிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிம்மதி நிறைந்த வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்ததை விட அதிக அளவு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பண வரவு கிடைப்பதற்குரிய வாய்ப்புகளும் உள்ளது. நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல் உபாதை படிப்படியாக குணமாகும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் பேசும்பொழுது கவனத்துடன் பேசுவது நல்லது.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். உடன் பணி புரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். அதே சமயம் தங்களுடைய வேலையில் கண்ணும் கருத்துமாகவும் இருக்க வேண்டும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்க வாய்ப்புகள் இல்லை. தொழிலைப் பொருத்தவரை கடினமான உழைப்பிற்கு ஏற்ற லாபமே கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதால் பிரச்சனைகளை சமாளித்துக் கொள்ள முடியும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கூடுதல் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டிய வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். தேவையற்ற செலவுகள் எதுவும் ஏற்படாது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். புதிய வாகனங்கள் வாங்குவதற்குரிய யோகம் இருக்கிறது. உணவு விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். வேலையில் கூடுதல் கவனம் செலுத்தி செய்வது மிகவும் முக்கியம். உடன் பணி புரிபவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது மிகவும் நல்லது. தொழிலை பொருத்தவரை எப்பொழுதும் போல் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் பொறுமையை கடைப்பிடிப்பது மிகவும் நல்லது. கடன் வாங்கி முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு பழனி ஆண்டவரை வழிபட வேண்டும்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam