இந்த வார ராசிபலன் 09/09/2024 முதல் 15/09/2024 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

இந்த வார ராசிபலன் 09/09/2024 முதல் 15/09/2024 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ரொம்பவும் சுறுசுறுப்பான வாரமாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் படிப்படியாக குறைய தொடங்கும். எல்லா வேலையும் இழுத்துக்கட்டி ஒரு முடிவுக்கு கொண்டு வந்து விடுவீர்கள். பெயர் புகழ் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். கூடுமானவரை மூன்றாவது நபருடைய பிரச்சினையில் தலையிட வேண்டாம். வம்பு வழக்குகளில் முன் நின்று பஞ்சாயத்து பேச வேண்டும். இந்த வாரம் பைரவரை வழிபட நல்லது நடக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் புத்துணர்ச்சியான வாரமாக இருக்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேலையில் சாதித்து காட்டுவீர்கள். உங்களை தோற்கடிக்க முயற்சி செய்யும் எதிரிகளை வீழ்த்தி வெற்றிவாகை சூடுவீர்கள். உங்களுடைய முன்னேற்றத்திற்கு, உங்கள் குடும்பம் உறுதுணையாக இருக்கும். நிதி நிலைமையில் மட்டும் கொஞ்சம் சறுக்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. முன்பின் தெரியாத நபருக்கு கடன் கொடுக்காதீங்க. கடன் வாங்காதீர்கள். ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். இந்த வாரம் தினமும் காலையில் எழுந்து பிள்ளையாரை வழிபாடு செய்வது உங்களுக்கு நன்மையை தரும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முழுவதும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை நிலவும். எந்த ஒரு வேலையிலும் அலட்சியம் இருக்கக் கூடாது. சிந்தித்து செயல்பட வேண்டும். அதேபோல சோம்பேறித்தனத்தோடு இன்றைய வேலையை, நாளைக்கு தள்ளி போடாதீர்கள். எவ்வளவு நேரம் ஆனாலும் அன்றைக்கான வேலையை அன்றே முடிப்பது நன்மையை கொடுக்கும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனத்தோடு நடந்து கொள்ள வேண்டும். வீட்டில் இருக்கும் பெண்கள் பெரியவர்களை அனுசரித்து நடக்க வேண்டும். முன்கோபத்தை குறைக்க வேண்டும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. இந்த வாரம் சிவன் வழிபாடு உங்களுக்கு நன்மை செய்யும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சீரான வருமானம் இருக்கும். தடைப்பட்டு இருந்த நல்ல காரியங்கள் வீட்டில் மீண்டும் நடக்கத் தொடங்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் நீங்கி நிறைய லாபத்தை ஈட்ட தொடங்கி விடுவீர்கள். வீட்டில் இருக்கும் பெரியவர்களின் ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள். உணவு பழக்க வழக்கங்களை சீர்படுத்திக் கொள்ளுங்கள். அஜீரண கோளாறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த வாரம் முருகன் வழிபாடு உங்களுக்கு நன்மை செய்யும்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிம்மதி கிடைக்கக்கூடிய வாரமாக இருக்கும். கடந்த வாரத்தில் நீங்கள் சந்தித்த பிரச்சனைகளுக்கு எல்லாம் சுலபமாக முற்றுப்புள்ளி வைக்கலாம். நண்பர்களின் உதவியால் நிறைய நல்ல விஷயங்களை துவங்குவார்கள். புதிய முயற்சிகள் உங்களுக்கு வெற்றியையும் தரும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வர வாய்ப்புகள் இருக்கிறது. குடும்ப விஷயத்தில் கவனத்தோடு நடந்து கொள்ளுங்கள். குடும்ப விஷயங்களை மூன்றாவது நபரிடம் சொல்லாதீர்கள். இந்த வாரம் பெருமாள் வழிபாடு உங்கள் பிரச்சனையை நீக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி தரக்கூடிய வாரமாக அமையும். தொழில் வேலை எல்லாம் நல்ல முன்னேற்றத்தில் இருக்கும். வீட்டிற்கு தேவையான ஆடை ஆபரண பொருட்கள், வண்டி வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். இதனால் சொந்த பந்தங்கள் இடையே அக்கம் பக்கம் வீட்டார் இடையே கண் திருஷ்டி விழுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். ரொம்ப முக்கியமான விஷயத்தையும், உங்கள் வெற்றிக்கு சொந்தமான விஷயங்களையும், யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். இந்த வாரம் துர்க்கை அம்மன் வழிபாடு உங்கள் பிரச்சனைகளை நீக்கும்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் லாபம் நிறைந்த வாரமாக இருக்கும். இதுநாள் வரை நஷ்டப்பட்டு இருந்த உங்களுடைய தொழில் நல்ல முன்னேற்றத்தை அடையும். சின்ன சின்ன பெட்டிக்கடை வைத்திருப்பவர்கள் கூட இந்த வாரம் கை நிறைய சம்பாதிப்பீர்கள். ஆனால் வருமானம் வீண்விரயம் ஆவதற்கும் நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. உங்களுடைய ஆடம்பர செலவை கட்டுப்படுத்திக் கொண்டு சேமிப்பை உயர்த்துவது எதிர்காலத்திற்கு நல்லது. உங்களுடைய பிள்ளைகளின் போக்கில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளுடையநட்பு நடவடிக்கை இவைகளில் வித்தியாசம் தெரிகிறதா என்று பாருங்கள். பிரச்சனையாக இருந்தால் அவர்களை கூப்பிட்டு நேரில் பேசி பிரச்சினையை தீர்த்து வைப்பது நல்லது. பிரத்தியங்கிரா தேவி வழிபாடு குடும்பத்திற்கு நன்மையை தரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பெயர் புகழ் அந்தஸ்து, அங்கீகாரம் உயரக்கூடிய வாரமாக இருக்கும். நாலு பேர் மத்தியில் நீங்கள் தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய அளவுக்கு நிறைய சாதிப்பீர்கள். சில பேருக்கு பதவி உயர்வு சில பேருக்கு தொழிலில் பெரிய லாபம் கிடைக்கும். சொத்து சுகம் வாங்க கூடிய யோகம் கூட வரும். இதோடு சேர்த்து வீட்டில் சுப செலவுகள் உண்டாகும். சுபகாரியங்கள் நடக்கும். விருந்தாளிகளின் வருகை மன நிறைவை கொடுக்கும். கலைஞர்களுக்கும் இந்த வாரம் நல்ல முன்னேற்றம் இருக்கும். சந்தோஷத்தில் குலதெய்வத்திற்கு நன்றி சொல்லி விடுங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் வேலை பளு அதிகமாக இருக்கும். சிரமங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். இருந்தாலும் நீங்கள் சோர்வடைய மாட்டீர்கள். எப்படியாவது வாழ்க்கையில் போராடி முன்னேறி விட வேண்டும் என்று நிறைய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின் போது கவனம் தேவை. அவசர அவசரமாக எந்த ஒரு வேலையையும் செய்யாதீர்கள். இந்த வாரம் முழுவதும் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே, உங்கள் நாளை துவங்குவது நல்லது. இந்த வாரம் நரசிம்மர் வழிபாடு உங்களுக்கு நன்மையை செய்யும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நினைத்தது நினைத்தபடி நடக்கும். சொன்ன வேலையை சொன்ன நேரத்திற்கு முடித்துக் கொடுத்து நல்ல பெயர் வாங்குவீர்கள். வெளியூர் பயணங்கள் உங்களுக்கு நன்மையை செய்யும். குடும்பத்தோடு ஆன்மீக சுற்றுலா அல்லது பொழுதுபோக்கு சுற்றுலா செல்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. சுப செலவுகள் உண்டாகும். தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் நடக்கும். குழந்தை பாக்கியம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். இந்த வாரம் வாராகி வழிபாடு உங்களுக்கு நன்மையை தரும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிக்கல்கள் முடிவுக்கு வரக்கூடிய வாரமாக இருக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த கோர்ட் கேஸ் வழக்குகள், கையெழுத்து ஆகாத ஒப்பந்தங்கள் எல்லாம் இந்த வாரம் நல்லபடியாக நடந்து முடியும். உங்களுக்கு சாதகமான முடிவுகள் வரும். புதிய தொழில் தொடங்கலாம். புது வேலைக்கு அப்ளை செய்யலாம். புதுசாக சொத்து சுகம் வாங்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளலாம். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும். வாகனங்களில் செல்லும் போது மட்டும் கூடுதல் கவனம் தேவை.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டிய வாரம். யார் என்ன சொன்னாலும் நம்பி விடக்கூடாது. உங்களை மற்றவர்கள், அவர்களுடைய சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புகள் இருக்கிறது. உங்களுடைய முன்னேற்றத்தை தடுப்பதற்கு உண்டான வேலைகளையும் எதிரிகள் தொடர்ந்து செய்வார்கள். அவர்களிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் நீங்கள் தான் கவனத்தோடு நடந்து கொள்ள வேண்டும். எல்லோரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். வெகுலியாக இருக்காதீர்கள். இந்த வாரம் சில தந்திரமும், சில சூழ்ச்சியும் தான் உங்களை காப்பாற்றும். தினமும் பைரவர் வழிபாடு உங்களை பாதுகாக்கும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top