– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பான வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் அதை சமாளித்து விடுவீர்கள். உடன்பிறந்தவர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
வேலையை பொருத்தவரை இதுவரை தடைபட்டிருந்த சம்பள உயர்வும், பதவி உயர்வும் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் உண்டாக்கும். தொழிலைப் பொருத்தவரை லாபம் சற்று குறைவாகவே இருக்கும். உடன் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலமும் முயற்சிகளில் கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலமும் வெற்றியைப் பெற முடியும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்.
– Advertisement –
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அக்கறையுடன் செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்து அளவிற்கு பணவரவு ஏற்படும். தேவையற்ற செலவுகள் எதுவும் ஏற்படாது. வாரா கடனாக இருந்தவை வந்து சேரும். உடல் நலத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். திருமணம் முயற்சிகள் வெற்றிகரமாக நடைபெறும். கணவன் மனைவிக்கு இடையே அனுசரித்து செல்வது நல்லது.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த சலுகைகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சிகள் வெற்றியைத் தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சாதகமான வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்து அளவிற்கு பணவரவு ஏற்படும். மதிப்பும் மரியாதையும் உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தடைப்பட்டிருந்த சுப நிகழ்ச்சிகள் அனைத்தும் நல்லபடியாக நடந்தேறும்.
வேலையை பொருத்தவரை வேலையில் கவனம் செலுத்த வேண்டும். உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகும் சூழ்நிலை இருப்பதால் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. கடுமையாக உழைப்பதன் மூலமே நஷ்டத்தை ஈடு செய்ய முடியும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.
– Advertisement –
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தன்னம்பிக்கையுடன் செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை ஓரளவிற்கு பணவரவு ஏற்படும். வீண் செலவுகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் இல்லை. விலகி சென்ற உறவுகள் விரும்பி வந்து சேருவார்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். கண்களில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது கவனம் தேவை.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். எதிர்பார்க்காத விரும்பாத இடமாற்றம் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உள்ளது. தொழிலை பொருத்தவரை எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்காது. அதே சமயம் நஷ்டமும் ஏற்படாது. தொழில் ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றிகரமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு இருந்தாலும் வீண் விரயங்கள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உள்ளது. ஒரு சிலருக்கு மருத்துவ செலவுகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் இருக்கிறது. கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். யார் என்ன பேசினாலும் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்ல வேண்டும். அதே சமயம் உங்கள் வேலையை யாரிடமும் ஒப்படைக்க கூடாது. தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். இருப்பினும் உடன் இருப்பவர்களிடம் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் சற்று எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அம்பிகையை வழிபட வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உணர்ச்சிவசப்படக் கூடிய வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஒரு சிலருக்கு கடன் வாங்கும் சூழ்நிலையும் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். கடன் ரீதியான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.
வேலையைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் உள்ளது. ஒரு சிலருக்கு புதிய பொறுப்புகளும் வந்து சேரும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பதற்கு கூடுதலாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாக்கும். அதன் மூலம் லாபத்தையும் அடைவீர்கள். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மங்களகரமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். திருமணம் முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். வாழ்க்கை துணை மூலம் ஆதாயம் உண்டாகும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். உங்கள் திறமையை வெளிப்படுத்தி விரும்பிய பதவி உயர்வு சம்பள உயர்வை பெறுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். இருப்பினும் உடன் பணிபுரிபவர்களிடம் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைக்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு பெருமாளை வழிபட வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுபிட்சமான வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்ததை விட அதிக அளவு பணவரவு ஏற்படும். அதே சமயம் தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். முடிந்த அளவு வீண் விரையங்களை குறைப்பதன் மூலம் கடன் வாங்குவதை தவிர்க்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
வேலையை பொருத்தவரை வேலை சுமை கூடுதலாகவே இருக்கும். வேலையில் அதிகளவு கவனம் செலுத்துவதன் மூலம் வீண் பிரச்சனைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பது சற்று கடினமாகவே இருக்கும். தொழிலை விரிவு படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் கூடுதல் முயற்சியும் உழைப்பையும் செய்ய வேண்டும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். திருமண வரன் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். நல்லவரன் அமையும். கணவன் மனைவிக்கிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை குறைவாகவே இருக்கும். மனதில் உற்சாகம் ஏற்படும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலை வேற இடத்திற்கு மாற்றுவதற்கான முயற்சிகள் வெற்றியைத் தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சூரிய பகவானை வழிபட வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பரபரப்பான வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். திடீர் பணவரவு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். அதை திறம்பட செய்து முடிப்பதன் மூலம் அதற்கேற்ற ஆதாயமும் கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. சற்று குறைவாகவே இருக்கும். தொழிலை விரிவுப்படுத்தும் சூழ்நிலை சாதகமாக இல்லை என்பதால் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகிழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உற்சாகம் நிறைந்த வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த நல்ல செய்தி வந்து சேரும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாக இருக்கும். உடன் பணிபுரிபவர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். எதிர்பார்த்த சலுகைகள் எதுவும் இந்த வாரம் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் குறைவாகவே இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பது சற்று சிரமமாகவே இருக்கும். பொறுமையை கடைப்பிடிப்பதன் மூலமும் தொழிலில் கவனம் செலுத்துவதன் மூலமும் பிற்காலத்தில் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகிழ்வதற்கு பெருமாளை வழிபட வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஏற்ற இறக்கம் மிகுந்த வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படாது என்றாலும் செலவுகளை கட்டுக்குள் வைத்துக் கொள்ளும் அளவிற்கு வரவு உண்டாகும். வீண் மனவருத்தம் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உள்ளது. குடும்பம் தொடர்பாக எந்தவித முடிவையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம்.
வேலையை பொருத்தவரை நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த சலுகைகள் கிடைப்பதற்கு உரிய வாய்ப்புகள் உள்ளது. தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைப்பதற்கு உரிய வாய்ப்புகள் உள்ளது. அதனால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அம்பிகையை வழிபட வேண்டும்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam