– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் புதிய வாய்ப்புகள் தேடி வரும் வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தைப் பொருத்தவரை எதிர் பார்த்து அளவிற்கு பணவரவு ஏற்படும். நிம்மதியான சூழ்நிலை உண்டாகும். தேவையற்ற செலவுகள் எதுவும் ஏற்படாது என்பதால் சேமிப்புகள் உயர்வதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். கடன்கள் சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
வேலையை பொருத்தவரை வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக நீங்கி வேலையை சிறப்பாக செய்வீர்கள். அதனால் உங்களுக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உள்ளது. தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. இதுவரை இருந்து வந்த வியாபாரத்தில் சற்று சருக்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். எப்பேர்ப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டாலும் கடன் வாங்காமல் இருப்பது நன்மையை பயக்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்.
– Advertisement –
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் புத்திசாலித்தனத்துடன் செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு பணவரவு ஏற்படும். அதனால் புதிதாக வீடு மனை வாங்கும் வாய்ப்புகளும் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். உற்றார் உறவினரின் வகையில் உதவிகள் உண்டாக்கும். வீட்டில் திருமணம் முயற்சிகள் செய்து கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல இடத்திலிருந்து வரன் அமையும்.
வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. வேலை சுமை அதிகமாக இருந்தாலும் அதை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைக்கும். உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். அதனால் தொழிலை அடுத்த கட்ட முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வீர்கள். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு துர்க்கை அம்மனை வழிபட வேண்டும்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உற்சாகமாக செயலாற்றும் வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். இருப்பினும் குடும்பத்தில் இருப்பவர்களின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும். திருமண முயற்சிகளை இந்த வாரம் மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. உற்றார் உறவினரிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்பதால் பொறுமையை கடைப்பிடிப்பது அவசியம்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். அதை திறம்பட செய்து முடிப்பதன் மூலம் உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் சற்று காலதாமதம் ஏற்படும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது என்றாலும் நஷ்டம் ஏற்படாமல் இருக்கும். தொழிலை வேறு இடத்திற்கு மாற்றுவதற்குரிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அந்த முயற்சிகள் வெற்றியும் அடையும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.
– Advertisement –
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஏற்ற இறக்கம் நிறைந்த வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை செலவுக்கேற்ற வரவே ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுப காரியங்கள் செய்வதில் இருந்து வந்த தடைகள் நீங்கும். ஒரு சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது கவனம் தேவை.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பால் அதை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். பிறரிடம் கொடுத்த பணத்தை திரும்ப வாங்குவீர்கள். அதனால் நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு தக்ஷிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நற்பலன்கள் நிறைந்த வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அனுசரித்து செல்வது நல்லது. குடும்ப விஷயத்தை பிறரிடம் கூறுவதன் மூலம் பிரச்சினைகள் அதிகமாகும் என்பதால் யாரிடமும் கூறாமல் பொறுமையை கடைப்பிடிப்பது மிகவும் நல்லது.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். அதை சிறப்பாக செய்து முடித்து தடைப்பட்டிருந்த சலுகைகளை பெற்று மகிழ்வீர்கள். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததைவிட அதிக அளவு லாபம் கிடைக்கும். அதனால் தொழிலை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் வாய்ப்பும் வரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அம்பிகையை வழிபட வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கவனக்குறைவை தவிர்க்க வேண்டிய வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படாது என்றாலும் செலவுகளை சமாளிக்கும் அளவிற்கு வரவு உண்டாகும். ஒரு சிலருக்கு இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு கவனச் சிதறல் உண்டாக வாய்ப்புகள் உள்ளது. செலவுகளை கட்டுப்படுத்துவதன் மூலம் கடன் வாங்காமல் தவித்துக் கொள்ள முடியும். திருமண முயற்சிகள் வெற்றியைத் தரும். எந்த விஷயத்திலும் மூன்றாவது நபர் சொல்லை கேட்டு நடக்காமல் சுய புத்தியுடன் செயல்படுவது நன்மையை தரும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். யாரையும் நம்பி எந்த வேலையும் ஒப்படைக்காமல் தாமே செய்வது நன்மையை தரும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்க சற்று கூடுதலாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். தொழில் ரீதியாக சில பிரச்சினைகளை சமாளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருப்பீர்கள். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு பெருமாளை வழிபட வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டம் நிறைந்த வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்த கணவன் மனைவி ஒன்று சேர்ந்து ஒற்றுமையுடன் வாழ்வார்கள். மனவருத்தம் நீங்கும் வாரமாக இந்த வாரம் திகழும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பால் சிறப்பாக செய்து முடித்து நற்பெயரை வாங்குவீர்கள். தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைக்கும். தொழில் ரீதியான முடிவுகளை எடுப்பதற்கு முன்பாக ஒரு முறைக்கு பலமுறை யோசித்து எடுப்பது நன்மையை தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திட்டமிட்டு செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படாது. ஒரு சிலருக்கு கடன் வாங்கும் சூழ்நிலையும் உண்டாகும். வரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும். மூன்றாவது நபரால் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. ஒரு சிலருக்கு ஆரோக்கிய பாதிப்பு உண்டாகும். அதேசமயம் வாரா கடன் வசூலாகும் சூழ்நிலையும் ஏற்படும்.
வேலையை பொருத்தவரை எவ்வளவு வேலை சுமை இருந்தாலும் அதை கூடுதல் கவனத்துடன் செய்து முடிப்பது மிகவும் முக்கியம். சிறு தவறுகளும் பெரிய பிரச்சினையில் கொண்டு சென்று விடும் என்பதால் கவனத்துடன் செயலாற்ற வேண்டும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது என்றாலும் நஷ்டம் ஏற்படாது. எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஆகும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு மகாவிஷ்ணுவை வழிபட வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சாதகமான வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். கூடுதல் பொறுப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது, உடல் ரீதியாக சோர்வு உண்டாகும். திருமணம் முயற்சிகள் வெற்றியைத் தரும். உடன் இருப்பவர்களின் உதவியால் சிறப்பாக செயல்படுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். புதிதாக எந்த வேலைக்கும் முயற்சி செய்யாமல் இருப்பது நல்லது. தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த லாபத்தை பெறுவதற்கு கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். மறைமுக எதிரிகளால் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் சற்று எச்சரிக்கையுடன் செயலாற்றுவது நல்லது. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமையுடன் செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு இருக்காது. அதனால் கடன் வாங்கும் சூழ்நிலையும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருந்தாலும் அதை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். ஒரு சிலருக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவில் லாபம் கிடைக்கும். அதனால் தொழிலை சிறப்பாக நடத்துவதற்கும் புதிய தொழிலில் ஈடுபடுவதற்கும் முதலீடு செய்ய முயற்சி செய்வீர்கள். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு பைரவரை வழிபட வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு பணவரவு ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. உறவினர்களிடமும் நண்பர்களிடமும் எதிர்பார்த்து இருந்த உதவிகள் கிடைக்கும்.
வேலையை பொருத்தவரை புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புகளும் உண்டாகும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியைத் தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகல்வதற்கு பெருமாளை வழிபட வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திருப்திகரமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்த வரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். வீண் செலவுகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் எதுவும் இல்லை. இருப்பினும் கடன் வாங்காமல் தவிப்பது மிகவும் நல்லது. ஒரு சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது. எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தாமதம் உண்டாக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்க கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் வராமல் பார்த்துக் கொள்ள முடியும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam