– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னெச்சரிக்கையுடன் செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். செலவுகள் சற்று குறைந்து சேமிப்புகள் உயர ஆரம்பிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகள் உள்ளது. திருமண முயற்சிகள் வெற்றியைத் தரும். கணவன் மனைவிக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும் வாய்ப்புகள் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது.
வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாக இருக்கும். புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சலுகைகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பது சற்று சிரமமாக இருக்கும். வியாபாரத்தில் இருக்கக்கூடிய போட்டிகளை சமாளித்து வெற்றி காண முயற்சி செய்வீர்கள். புதிய முயற்சிகள் எதையும் இந்த வாரத்தில் செய்யாமல் இருப்பது நல்லது. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு விநாயகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும்.
– Advertisement –
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றிகள் கிடைக்கும் வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படாது என்றாலும் செலவுகளை சமாளிக்கும் அளவிற்கு பண வரவு உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிறு உபாதையாக இருந்தாலும் உடனே சரி செய்து கொள்ள வேண்டும். தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவது நல்லது. பெற்றோர்களின் மனதை புண்படுத்தாமல் நடந்து கொள்வதன் மூலம் நன்மைகள் உண்டாகும்.
வேலையை பொருத்தவரை வேறு வேலைக்கு முயற்சி செய்யாமல் இருப்பது நல்லது. இருக்கும் வேலையில் தங்களின் திறமையை வெளிப்படுத்த முயற்சி செய்ய வேண்டும். உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்ல வேண்டும். அதிகாரிகளிடம் பேசும் பொழுது சற்று பொறுமையுடன் பேச வேண்டும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும் என்றாலும் புதிய முதலீடுகள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. யாருடைய பேச்சைக் கேட்டும் எதிலும் முதலீடு செய்ய வேண்டாம். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சி நிறைந்த வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை வழியாகவும், பிள்ளைகள் வழியாகவும், உடன் பிறந்தவர்களின் வழியாகவும் நல்ல சந்தோஷமான நிகழ்வுகள் உண்டாகும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். எந்த ஒரு கடினமான சூழலாக இருந்தாலும் அதை பொறுமையாக கையாளுவது நன்மையை தரும்.
வேலையை பொருத்தவரை புதிதாக வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்த நினைப்பவர்கள் இந்த வாரத்தில் முயற்சி செய்யலாம். வெற்றிகள் உண்டாக்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.
– Advertisement –
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கவனமாக செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பண வரவும், பொருள் சேர்க்கையும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இந்த வாரம் நிதானத்துடன் செயல்பட வேண்டும். விலகிச் சென்ற உறவுகள் விரும்பி வந்து சேர வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. தடைப்பட்ட சுபகாரியங்கள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். அதை திறம்பட செய்து முடிப்பதன் மூலம் அதற்குரிய சலுகைகளை பெறுவீர்கள். அதிகாரிகளிடம் மன வருத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தவோ அல்லது சொந்த இடத்திற்கு மாறவோ வாய்ப்புகள் உண்டாகும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சாதகமான வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சிகள் உண்டாகும். ஒரு சிலருக்கு எதிர்பாராத செலவுகளும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அந்த செலவுகளால் மகிழ்ச்சிகளே அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். அதனால் சோர்வுடனும் கலைப்புடனும் காணப்படுவீர்கள். புதிதாக வேறு வேலைக்கு முயற்சி செய்வதை தவிர்ப்பது நல்லது. உடன் பணிபுரிபவர்களுடன் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் இருக்காது என்றாலும் நஷ்டம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும். தொழிலை விரிவு படுத்துவதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டால் வெற்றிகள் உண்டாகும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அம்பிகையை வழிபட வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷம் நிறைந்த வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும் என்றாலும் எதிர்பாராத செலவுகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். அதனால் ஒரு சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை கூட ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். கடன் வாங்கும் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.
வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. வேலையை சிறப்பாக செய்வதன் மூலம் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். முக்கிய முடிவுகள் எதையும் எடுப்பதை இந்த வாரம் தவிர்ப்பது நல்லது. தேவையற்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டம் நிறைந்த வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த காரியமும் இந்த வாரத்தில் முடிவதற்கு வாய்ப்புகள் உள்ளது. திருமண தொடர்பான சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். இருப்பினும் தேவையற்ற செயல்களில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் அதை சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் வெற்றியைத் தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு ஸ்ரீரங்கநாதரை வழிபட வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் சிந்தித்து செயல்பட வேண்டும். உடன் பிறந்தவர்களால் ஏற்பட்ட கஷ்டங்கள் நீங்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. பிள்ளைகள் மூலம் சுப நிகழ்வுகள் நடைபெறும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
வேலையை பொருத்தவரை நீண்ட நாட்களாக வேறு வேலைக்கு முயற்சி செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தவர்கள் இந்த வாரத்தில் முயற்சி செய்யலாம். நல்ல வேலை கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். அதனால் ஒரு சிலர் தொழிலை முன்னேற்றுவதற்காக முயற்சிகளை மேற்கொள்வார்கள். அதில் வெற்றியும் அடைவார்கள். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஆதாயம் நிறைந்த வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்பட்டாலும் சேமிக்க முடியாத அளவிற்கு செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிறரிடம் பேசும் பொழுது பொறுமையை கடைப்பிடிப்பது அவசியம். சமூகத்தில் மரியாதையையும் கவுரவத்தையும் பெறுவீர்கள்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதோடு மட்டுமல்லாமல் வேலையிலும் கவனம் செலுத்த வேண்டும். இருப்பினும் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் குறைவாகவே இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை எந்த அளவிற்கு கடினமாக உழைக்கிறீர்களோ அந்த அளவிற்கு லாபத்தை பெற முடியும். உடன் வேலை செய்பவர்களிடமும், கூட்டாளியிடமும் அனுசரித்து செல்வது நன்மையை தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சூரிய பகவானை வழிபட வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு பணவரவு ஏற்படும். வராத கடனும் வந்து சேரும். வாழ்க்கைத் துணையால் ஆதாயம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். உடன் பிறந்தவர்களால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். உற்றார் உறவினரிடம் அனுசரித்து செல்வது நல்லது. நல்ல செய்திகள் வந்து சேரும்.
வேலையை பொருத்தவரை உற்சாகமாக செயல்படுவீர்கள். அனுபவ அறிவால் பிரச்சனையை சிறப்பாக சமாளித்து அதற்குரிய பாராட்டியும் பெறுவீர்கள். எதிர்பாராத சலுகைகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகளும் உள்ளது. தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைக்கும். அதனால் தன்னிடம் பணிபுரிபவர்களுக்கு நல்ல சலுகைகளை தருவீர்கள். போட்டியாளராக இருந்தவர்களின் தொல்லைகள் விலகும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டம் நிறைந்த வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த நல்ல செய்திகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். குடும்ப விஷயத்தில் மூன்றாவது நபரின் தலையிட்டால் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அதனால் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும். உடன் பிறந்தவர்களால் சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது கவனம் தேவை.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். அதை கவனத்துடன் செய்ய வேண்டும். உடன் பணிபுரிபவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிகாரிகளிடம் பேசும் பொழுது நிதானத்துடன் பேசுவது நல்லது. தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவைவிட அதிக அளவில் லாபம் கிடைக்கும். போட்டியாக இருந்தவர்களும் சுமூகமாக நடந்து கொள்வார்கள். இருப்பினும் கடன் வாங்கி முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு பெருமாளை வழிபட வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மைகள் நிறைந்த வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பண வரவும், ஆடை, ஆபரண சேர்க்கையும் உண்டாக வாய்ப்புகள் உள்ளது. உறவினர்களிடம் வீண் மனவருத்தம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் கவனம் தேவை. குடும்பம் தொடர்பான எந்த முடிவையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து எடுப்பது நன்மையை தரும். செலவுகளை திட்டமிட்டு செலவு செய்தால் சேமிப்பு உயர வாய்ப்புகள் உள்ளது. குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். நீண்ட நாட்களாக மனதில் போட்டு குழப்பிக் கொண்டிருந்த விஷயத்திற்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருந்தாலும் அதை திறமையுடன் செய்து முடிக்க உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைக்க அதற்கேற்றார் போல் உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். தொழிலை விரிவு படுத்துவதற்கு முயற்சி செய்பவர்களுக்கு தேவையான கடனுதவி கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அம்பிகையை வழிபட வேண்டும்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam