– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எதிர்பாராத நிறைய நல்ல மாற்றங்கள் ஏற்படும். சில பேருக்கு இருக்கும் இடத்தை விட்டு, மாறக்கூடிய சூழ்நிலையும் உண்டாகும். அது அவரவருடைய தனிப்பட்ட வாழ்க்கையின் போக்கை பொறுத்தது. மற்றபடி நீங்கள் செய்து வைத்திருக்கும் முதலீட்டில் இருந்து, பெரிய அளவில் பண வரவு இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கான தனித்துவம் வெளிப்படும். கூடுமானவரை ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வீட்டு சாப்பாடு மட்டும் சாப்பிட்டால் ஆரோக்கியத்தில் பிரச்சனை இருக்காது. ஜங்க் ஃபுட் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. தினம் தோறும் ஆஞ்சநேயர் வழிபாடு உங்களுக்கு நன்மையை தரும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நினைத்த காரியம் எல்லாம் நினைத்தபடி நடக்கும். மகிழ்ச்சி இரட்டிப்பாகும். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். கடன் சுமை குறையும். வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். வருமானம் அதிகரிக்கும். கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் இருக்கும். வேலையில் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போகும். மேலதிகாரிகளோடு எதிர்ப்பு வேண்டாம். அனுசரித்து செல்லுங்கள். இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வதே புத்திசாலித்தனம். ஆரோக்கியம் சீராகும். பிள்ளைகளுடைய படிப்பில் கூடுதல் கவனம் தேவை. தினம்தோறும் முருகர் வழிபாடு செய்வது உங்களுக்கு நன்மையை கொடுக்கும்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி தரக்கூடிய வாரமாக இருக்கும். இதுநாள் வரை சந்தித்து வந்த சரிவுகளை இந்த வாரம் ஈடுகட்டு விடுவீர்கள். வேலையிலும் சரி, தொழிலிலும் சரி, நீங்கள் இழந்ததை எல்லாம் மீட்டெடுப்பீர்கள். குடும்பத்திலும் சந்தோஷம் நிம்மதி இருக்கும். தடைப்பட்டு வந்த சுப காரிய பேச்சுக்கள் நடங்கும். சுப செலவுகளும் ஏற்படும். கால் சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஜாக்கிரதையாக இருங்கள். காலில் அடிபட்டாலோ அல்லது காலில் வலி இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகவும். தினம் தோறும் சிவன் வழிபாடு உங்களுக்கு நன்மையை தரும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சின்ன சின்ன ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வாரமாக இருக்கும். வியாபாரம் தொழில் எல்லாம் சிறப்பாக சென்றாலும், குடும்பத்தில் பிரச்சனைகள் வரும். ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் வரும். வயதானவர்களை கூடுதல் கவனத்தோடு பார்த்துக் கொள்ள வேண்டும். கூடுமானவரை நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள். கலை துறையினருக்கு இந்த வாரம் வெற்றியடைய கூடிய வாரமாக இருக்கும். பாராட்டு புகழ் கிடைக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. தினமும் கால பைரவரை வழிபாடு செய்தால் நல்லது நடக்கும்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் போராட்டம் நிறைந்த வாரமாக தான் இருக்கும். எந்த ஒரு வேலையையும் முதல் முறை செய்யும்போது வெற்றி கிடைக்காது. சின்ன சின்ன தோல்விகள், சின்ன சின்ன பிரச்சனைகள் இவைகளை எல்லாம் கடக்கும்போது தான் உங்களுக்கான அனுபவ அறிவு அதிகரிக்கும். அதன் பிறகு தான் ஒரு வேலையை சிறப்பாக செய்து வெற்றியும் காண்பீர்கள். இதனால் எந்த ஒரு பதட்டமும் உங்களுக்கு தேவை இல்லை. வாரத்தின் முதலில் உங்களுக்கு வந்த தோல்விகளை, வாரத்தின் இறுதி கட்டத்தில் வெற்றி படிகளாக மாறும். எல்லா விஷயத்திலும் கூடுதல் கவனம் இருக்கட்டும். குறிப்பாக பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவன குறைவு வேண்டாம். தினமும் மகாலட்சுமியை நினைத்து வழிபாடு செய்தால் நல்லது நடக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிம்மதி தரக்கூடிய வாரமாக இருக்கும். பல நாள் பிரச்சனைகள் சரியாகும். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். எதிர்பார்த்த பணம் கையை வந்து சேரும். பொருளாதார நிதி நிலைமை சீராகும். சொத்து பத்தில் இருந்து வந்த பிரச்சனைகளும் சிக்கல்களும் தீரும். கோர்ட்டு கேஸ் வழக்கு உங்களுக்கு சாதகமாக அமையும். வேலையிலும் தொழிலிலும் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். தெரியாத மூன்றாவது நபரை நம்பி எந்த ஒரு பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தினம்தோறும் பிள்ளையாரை வழிபாடு செய்வது நல்லது.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ரொம்பவும் ஆனந்தமான சௌகரியமான வாரமாக இருக்கும். உங்கள் வாழ்க்கைக்கு தேவையான அத்தனை நல்லதும் கஷ்டப்படாமலேயே உங்கள் கையை வந்து சேரும். வியாபாரத்தில் கொடி கட்டி பறக்கலாம். சின்ன சின்ன கடை வைத்திருப்பவர்கள் கூட இந்த வாரம் நிறைய சம்பாதித்து தீபாவளி பண்டிகையை சந்தோஷமாக கொண்டாட தயாராகி விடுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன சண்டைகள் பிரச்சனைகள் வரும். நண்பர்கள் கூட எதிரிகளாக மாற வாய்ப்பு உள்ளது. ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். தினம்தோறும் துர்க்கை அம்மன் வழிபாடு செய்வது நன்மையை தரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கும். உடல் உபாதைகள் இருக்கும். ஒரு வேலையை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடித்து தரக்கூடிய சூழ்நிலை அமையாது. எல்லா இடத்திலும் வாக்குதவரக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. ஜாக்கிரதியாக இருக்க வேண்டும். எந்த விஷயத்தையும் பிளான் பண்ணாம பண்ணாதீங்க. வெளியிடங்களுக்கு ஷாப்பிங் போகும்போது பணத்தை ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ளவும். விலை உயர்ந்த உடமைகளையும் ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ளவும். வண்டியை பார்க் செய்வதிலும் கவனம் தேவை. தினம்தோறும் வாராஹி அம்பாள் வழிபாடு உங்களுக்கு பாதுகாப்பை கொடுக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இந்த வாரம் அனுசரித்து சென்றால் வாழ்க்கையில் இன்பத்தை காணலாம். எல்லா விஷயத்திற்கும் போட்டி பொறாமை சண்டை என்று போடுபவர்களுக்கு வாழ்க்கை கசக்கத்தான் செய்யும். வழக்கத்தை விட இந்த வாரம் உங்களுக்கு அனுசரணை அதிகம் தேவை. உங்களுக்கு மேலே வேலை செய்பவர்களாக இருந்தாலும் சரி, உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு மரியாதை கொடுத்து நடத்தணும். வியாபாரத்திலும் அப்படித்தான் யாரையும் மரியாதை குறைவாக பேசக்கூடாது. வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்கணும். அவரவருக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை கொடுத்து தான் ஆக வேண்டும். தினம் தோறும் மனதை அமைதி படுத்த ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்லுங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் டென்ஷனான வாரமாக இருக்கும். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள். பல கிலோ மீட்டர் தூரத்திலிருந்து பிரச்சனை உங்களை வேகமாக நெருங்கும். இதனால் வேலை சரியாக ஓடாது. வேலையில் இருக்கும் டென்ஷனை அப்படியே கொண்டு போய் வீட்டில் காட்டுவீர்கள். இதனால், பிள்ளைகளாலும் மனைவியாலும் சண்டைதான் வரும். பண்டிகை தினம் என்பதால் உங்களுடைய மனதை கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி, இந்த வாரம் மன அழுத்தத்தை குறைக்க உங்களுக்கு பிடித்த பாடலை கேட்கலாம் பிடித்த இறைவனை வழிபாடு செய்யலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எதிர்பார்த்த விஷயங்கள் நல்லபடியாக நடக்கும். வீடு மாற்றம் வேலை மாற்றம் இவைகள் எல்லாம் சில பேருக்கு ஏற்படும். அது தற்போது இருக்கும் நிலையை விட கொஞ்சம் உயர்ந்த நிலையில் அமையும். இதனால் மனதிற்கு இதமான சந்தோஷமும் இருக்கும். தொழிலில் முதலீடு செய்யும் போது இந்த வாரம் கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒரு வேலையிலும் அகல கால் வைக்காதீங்க. தெரிந்த விஷயத்தை மட்டும் செய்தால் போதும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். குழந்தைகளால் மன நிம்மதி கிடைக்கும். உங்களுக்கு கிடைத்த நல்ல விஷயங்களை, வெள்ளை மனதோடு பல பேரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். கண் திருஷ்டி விழ வாய்ப்புகள் இருக்கிறது. தினம் தோறும் அங்காளம்மன் வழிபாடு நன்மையை செய்யும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் நிதி நிலைமை மோசமாக இருக்கும். சில பேருக்கு தீபாவளி பண்டிகைக்கு பணத்தை எடுத்து வைக்க முடியாத சூழ்நிலை இருக்கும். இதனால் கொஞ்சம் டென்ஷன் அதிகரிக்கும். இருந்தாலும் இறைவனின் ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கும். உங்களிடம் உள்ளதை வைத்து வரக்கூடிய பண்டிகைக்கு தயாராகி விடுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்த அளவு லாபம் இருக்கும். வேலை செய்யும் இடத்திலும், மேனேஜரின் அனுசரணை கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களை புரிந்து கொள்வார்கள். டார்கெட்டை முடிப்பதில் பெருசாக எந்த பிரச்சனையும் வராது. ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். உறவினர்களோடு அனுசரித்து சென்றால் நல்லது. முன் கோபத்தை குறைத்துக் கொள்ளவும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். தினம்தோறும் குலதெய்வ வழிபாடு செய்வது சிறப்பு.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam