– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிதி நிலைமை உயரக்கூடிய வாரமாக இருக்கும். கேட்பதற்கே சந்தோஷமாகத்தான் இருக்கும். வருமானம் உயரும், செலவு குறையும். சேமிப்பு அதிகரிக்கும். நீண்ட தூர பயணம் நன்மையை கொடுக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவி யாராவது ஒருவர் அனுசரித்து சென்றால் அந்த பிரச்சனையை சரி செய்யலாம். வேலை செய்யும் இடத்தில் நிறைய மகிழ்ச்சி கொஞ்சம் கஷ்டம் இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சின்ன சின்ன லாபங்கள் கிடைக்கும். நிறைய நல்ல அனுபவங்களை கற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புகளும் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மன நிறைவான வாரமாக இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கி குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும். மன நிறைவாக இந்த வாரத்தை தொடங்குவீர்கள். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்களும் சின்ன சின்ன சண்டை சச்சரவுகளும் வந்து போக தான் செய்யும். அதற்காக வேலையை விட வேண்டும் என்று யோசிக்காதிங்க. தவறுகளை எப்படி திருத்திக் கொள்வது என்று யோசித்தால் நிச்சயம் உங்களுக்கான நல்லது நடக்கும். தொழிலில் லாபம் அதிகம் கிடைக்கும். ஆனால் முதலீட்டில் கவனமாக இருக்க வேண்டும். புது வியாபாரிகளை அணுகும் போது கூடுதல் கவனத்தோடு இருக்கவும்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எதிர்பார்த்தபடி பணவரவு இருக்கும். ஆனால் அதற்கேற்ற செலவுகள் காத்துக் கொண்டே இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டத்தின் மூலம் நிறைய நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நழுவ விடாதீர்கள். பதவி உயர்வு சம்பள உயர்வு உங்களுடைய தகுதிக்கு மீறி கிடைத்தாலும், அதை ஏற்றுக் கொள்ளுங்கள். தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் அலட்சியப் போக்கு இருக்கக் கூடாது. வியாபாரத்தில் ஒவ்வொரு ரூபாய் கணக்கு வழக்கையும் நீங்கள் தான் சரி பார்க்கணும்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இந்த வாரம் நிம்மதியான வாரமாக இருக்கும். வருமானத்திற்கு ஏற்ற செலவு இருக்கும். செலவுக்கு ஏற்ற வருமானத்தையும், அந்த கடவுள் உங்களுக்கு கொடுத்து விடுவான். வேலை காரணமாக கொஞ்சம் உடல் அசதி பெண்களுக்கு இருக்கும். வீட்டில் இருக்கும் பொருட்கள் பழுதாகும். அதை சரி செய்ய சில செலவுகள் ஏற்படும். இதையெல்லாம் இந்த வாரம் நீங்கள் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதுப்புது முயற்சிகளை அறிமுகப்படுத்தி உங்களுடைய திறமையை வெளிப்படுத்தி மார்க்கெட்டில் நல்ல இடத்தை பிடிப்பீர்கள்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முழுவதும் நிதிநிலைமை கொஞ்சம் மோசமாகத்தான் இருக்கும். கையில் பணம் இல்லை என்றால் மனம் தானாக சோகத்தில் ஆழ்ந்து விடும். இருந்தாலும் கவலைப்படக்கூடாது. உங்களுடைய பிரச்சனைகளை சரி செய்ய நீங்கள் தான் அயராது உழைக்க வேண்டும். சொந்தபந்தங்களோடு சண்டை சச்சரவுகள் வர வாய்ப்பு இருக்கிறது. ஜாக்கிரதையாக இருங்கள். வேலையில் உயர் பதவி, அதிகாரிகளின் பாராட்டும் ஆதரவும் கிடைக்கும். உங்களுடைய தேவைக்கு கடன் வசத்தைகளையும் அலுவலகம் செய்து தரும். வியாபாரத்தில் நல்ல லாபம் இருக்கும். இருந்தாலும் சின்ன சின்ன சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் உங்களுடைய மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள் குடும்பம் சந்தோஷமாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நீங்கள் எதிர்பார்த்ததை விட வருமானம் அதிகமாகவே உங்கள் கையை வந்து சேரும். எல்லா பிரச்சனைகளையும் சரி செய்து விடுவீர்கள். ஆனால் மனைவியை சரி கட்டுவதில் மட்டும் கொஞ்சம் சிக்கல் இருக்கும். வேறு வழி கிடையாது அவர்களை அனுசரித்து சென்றால்தான் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். சண்டை போடாதீங்க. வேலை செய்யும் இடத்தில் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். மேலதிகாரிகளிடம் பணிவோடு நடக்க வேண்டும். சக ஊழியர்களை எதிர்த்துக் கொள்ள வேண்டாம். குடும்பத்தில் இருப்பவர்களது ஆரோக்கிய பிரச்சனையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு எந்த ஒரு குறைவும் இருக்காது. சந்தோஷம் இரட்டிப்பாகும். விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். ஆரோக்கியம் சீர்படும். வேலை சம்பந்தப்பட்ட விஷயத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். சில பேருக்கு இடமாற்றம் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. வேலையில் எதிரியால் போட்டி பொறாமையால் பிரச்சனைகள் வரும். அதையெல்லாம் நீங்கள்தான் சமாளித்துக் கொள்ள வேண்டும் ஜாக்கிரதை. வியாபாரத்தில் குறைவான லாபம் மட்டுமே கிடைக்கும். எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் அதிக லாபத்தை இந்த வாரம் எடுக்க முடியாது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு தேவையற்ற சிந்தனையின் மூலம் இந்த வாரம் அதிகமான நேரம் வீணாக செலவாகும். அதனால் முன்கூட்டியே உஷாராக இருங்கள். தேவையற்ற விஷயங்களை சிந்திக்கக்கூடாது, தேவையற்ற விஷயங்களை பேசக்கூடாது, தேவையற்ற விஷயங்களை காதில் கேட்கவும் கூடாது. அப்போதுதான் இந்த வார உங்கள் வேலை சரியாக நடக்கும். பார்த்துக் கொள்ளுங்கள். வேலை செய்யும் இடத்தில் நாலு பேரோட வேலையை உங்கள் தலையில் கட்டுவார்கள். வேலை பளுவை சுமக்க முடியாத சூழ்நிலை இருக்கும். தலைவலி டென்ஷன் உண்டாகும் வேறு வழியே கிடையாது முட்டி மோதி இந்த வாரத்தை நடத்திச் செல்லுங்கள். கடவுள் மட்டும் உங்கள் பக்கம் துணையாக நிற்பான், பயப்படாதீங்க.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சோர்வான வாரமாக தான் தொடங்கும். வாரத்தின் முதலில் உங்களுடைய வேலைகள் சரியாக நடக்காது. முதலீட்டுக்கு தேவையான பணம் கிடைக்காது. குடும்பத்தில் சிக்கல்கள் வருவது போலத்தான் சூழ்நிலை குழப்பிக் கொண்டே இருக்கும். இருந்தாலும் வாரத்தின் முதல் மூன்று நாட்களைக் கடக்கும் போது உங்களுக்கு தேவையான நல்லது நடக்க தொடங்கிவிடும். உற்சாகத்தோடு உங்களுடைய வேலையை செய்ய தொடங்கி விடுவீர்கள். குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்க இருக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும். குடும்பத்தோடு குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது சிறப்பு.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முழுதும் கூடுதல் பொறுப்பு இருக்கும். குடும்பத்திலும் வேலைகள் அதிகமாக இருக்கும். வேலை செய்யும் இடத்திலும் வேலைகள் அதிகமாக இருக்கும். உங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள். காலையில் அதிக நேரம் தூங்காதிர்கள். எந்தெந்த வேலையை, எந்தெந்த நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என்று தினமும் ஒரு டைம் டேபிள் போட்டு வச்சுக்கோங்க. அப்போதுதான் இந்த வாரம் எந்த ஒரு நெருக்கடியும் இல்லாமல் தப்பிக்க முடியும். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் ஓய்வு நேரத்தை குறைத்துக் கொண்டு, வேலை செய்யும் நேரத்தை அதிகப்படுத்த வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சுமாரான வாரமாகத்தான் இருக்கும். எதிர்பார்த்த அனைத்து நல்லதும் நடக்காது. அதற்காக எல்லாம் கேட்டதாக நடக்கும் என்று சொல்ல வரவில்லை. சின்ன சின்ன ஏமாற்றங்கள் வரும்போது, மனது சோர்ந்து போகும். உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் முன்னேறும் போது நமக்கு மேலே இருப்பவர்களை பார்க்க வேண்டும். கஷ்டம் வரும்போது நமக்கு கீழே இருப்பவர்களை பார்க்க வேண்டும். எந்த ஒரு பிரச்சனையையும் ஆழ சிந்தித்து சிந்தித்து, குழப்பிக் கொள்ளக்கூடாது. பிரச்சனைகளை லேசாக எடுத்துக் கொள்ளுங்கள் பிரச்சனை தானாக சரியாகிவிடும். இந்த வாரம் நிதானம் மட்டும் தான் உங்களுக்கு கை கொடுக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிதி நிலைமை சரியாகும். தேவையற்ற பண பிரச்சனையிலிருந்து விடுபடுவீர்கள். கடன் சுமை குறையும். மனைவியின் ஆதரவால் உங்கள் குடும்பத்தில் நல்லது நடக்கும். வேலைக்கு செல்பவர்கள் உற்சாகத்தோடு இந்த வாரத்தை தொடங்கி இருப்பீர்கள். உங்களுடைய வேகத்திற்கு யாராலும் ஈடு கொடுக்க முடியாது. மேலதிகாரிகளிடம் பாராட்டு கிடைக்கும். சம்பள உயர்வு கிடைக்கும். தொழிலில் புதிய முடிவுகளை அவசரப்பட்டு எடுக்கக் கூடாது. அனுபவ சாலிகளின் கொஞ்சம் யோசனை கேட்கவும்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam