– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முழுவதும் சுறுசுறுப்பான வாரமாக இருக்கும். உங்களுக்கு ஓய்வு எடுக்கவே நேரம் இருக்காது. வேலை வேலை என்று ஓடிக்கொண்டே இருக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். கவலைப்படாதீங்க அதற்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். சில பேர் காதல் வயப்படவும் வாய்ப்புகள் உள்ளது. ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகள் இந்த வாரம் பிரச்சனைகள் இல்லாமல் முடியும். இந்த வாரம் முருகன் வழிபாடு உங்களுக்கு நன்மை செய்யும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் துவக்கத்தில் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். தேவையற்ற பிரச்சனைகள் வந்து போகும். எந்த ஒரு வேலைகளையும் சரியாக முடிக்க முடியாத சூழல் இருக்கும். ஆனால் வார இறுதியில் உங்களுக்கு இருந்த பிரச்சனைகள் எல்லாம் சரியாகி உங்களுடைய முயற்சிகளுக்கு எல்லாம் படிப்படியாக வெற்றி கிடைக்க துவங்கிவிடும். புதிய முயற்சிகளை வாரத்தின் கடைசி மூன்று நாட்கள் மேற்கொள்ளுங்கள் நல்லது. குலதெய்வ வழிபாட்டை தவிர விடாதீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து ஒரு முடிவை எடுப்பது நல்லது.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ரொம்பவும் துணிச்சல் நிறைந்த வாரமாக இருக்கும். எல்லா முடிவுகளையும் சர்வ சாதாரணமாக எடுத்து விடுவீர்கள். நல்லது கெட்டதை பற்றி சிந்திக்கவே மாட்டீர்கள். உங்களுடைய நல்ல நேரம் எல்லாம் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். பிரச்சினை கிடையாது. ஆனால் எல்லா நேரத்திலும் கண்மூடித்தனமான முடிவு நல்லதாகுமா? என்பது யோசிக்க வேண்டிய விஷயம். எதுவாக இருந்தாலும் வாழ்க்கை துணையிடம் ஒரு வார்த்தை கேட்பது கணவன் மனைவி ஒற்றுமையை அதிகரிக்கச் செய்யும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் எடுப்பீர்கள். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். தினமும் சிவன் வழிபாடு உங்களுக்கு நன்மையை தரும்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இந்த வாரம் மன நிம்மதியான வாரமாக இருக்கப் போகின்றது. இதனால் வரை உங்களைத் தொடர்ந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் படிப்படியாக சரியாகும். கடன் சுமையிலிருந்து வெளிவருவீர்கள். செலவுக்கு ஏற்ற பணம் கைக்கு வரும். பதவி உயர்வு கிடைப்பதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். தொழிலில் மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். முன்பின் தெரியாதவர்களுக்கு கடனுக்கு பொருளை விற்பனை செய்ய வேண்டாம். தினமும் அம்மன் வழிபாடு உங்களுக்கு நல்லதை செய்யும்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று திறமையான வாரமாக இருக்கப் போகின்றது. எல்லா விஷயத்திலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். சிக்கலான விஷயங்களை கூட சுலபமாக செய்து முடிப்பீர்கள். யாருக்காவது கஷ்டம் என்றால் உடனடியாக உங்களைத்தான் தேடி ஓடி வரப் போறாங்க. அந்த அளவுக்கு உங்களுடைய செல்வாக்கு உயரப் போகிறது. அடுத்தவர்களுக்கு நிறைய உதவி செய்வீர்கள். மனநிறைவை அடைவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தினமும் பக்கத்தில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யுங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டிய வாரமாக இருக்கிறது. அலட்சியப் போக்கு இருக்கக் கூடாது. யாராவது இனாமாகவோ அல்லது விலை மலிவாகவோ ஏதாவது ஒரு பொருளை கொடுத்தால் ஏமாந்து வாங்கி விடாதீர்கள். நீங்கள் பணத்தால் நஷ்டப்படுவீர்கள். அதிக விலை கொடுத்து எந்த பொருளையும் வாங்காதீர்கள். இந்த வாரம் அன்றாட வேலையை மட்டும் கூடுதல் கவனத்தோடு செய்ய வேண்டும். புது முயற்சிகளை செய்யக்கூடாது. புது பொருட்களை வாங்கக்கூடாது. மூன்றாவது நபரை நம்பி பணம் கொடுக்கக் கூடாது. பைரவர் வழிபாடு உங்களுக்கு இந்த வாரம் நன்மையை செய்யும்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சோம்பேறித்தனமான வாரமாகத்தான் இருக்கும். இன்றைய வேலையை நாளைக்கு செய்யலாம் என்று நினைப்பீர்கள். நாளைய வேலையை அதற்கு மறுநாள் தள்ளிப் போடுவீர்கள். இதனால் இந்த வாரம் உங்களுக்கு வேலை சுமை கொஞ்சம் பாரமாக இருக்கும். சோம்பேறித்தனத்தை கூடுமானவரை தவிர்க்க பாருங்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். தினமும் ஒரு மணி நேரம், காலை முன்பாகவே கண் விழித்துக் கொள்ளுங்கள். சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். வாழ்க்கையில் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற குறிக்கோளை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். தினமும் பெருமாள் வழிபாடு உங்களுக்கு நன்மையை செய்யும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இந்த வாரம் மன நிறைவான வாரமாக இருக்கும். உங்கள் கைவிட்டுப் போன பணம் எல்லாம் மீண்டும் உங்களை தேடி வரும். பணம் மட்டுமல்ல சில உறவுகள் நண்பர்கள் கூட உங்களை புரிந்து கொள்வார்கள். எதிரி பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர வாய்ப்புகள் இருக்கிறது. வேலை தொழில் எல்லாம் நீங்கள் நினைத்ததை விட நல்லபடியாக நடக்கும். கூடுமானவரை அடுத்தவர்களுக்கு உதவி செய்யக் கூடிய வழக்கத்தை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள் நல்லது. தினமும் குரு பகவானை மனதார நினைத்து வழிபாடு செய்வது நன்மையை தரும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பிரச்சனைகள் நீங்க கூடிய வாரமாகத் தான் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரஷர் குறையும். மேலதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். உங்களை புரிந்து கொள்ளாத சக ஊழியர்கள் புரிந்து கொள்வார்கள். குடும்பத்திலும் அப்படித்தான். உறவுகளோடு இருந்த பிரச்சனைகள் எல்லாம் சரியாகிவிடும். தொழிலில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அகல கால் வைக்காதீங்க. முன்பின் தெரியாத தொழிலை துவங்குவதற்கு எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ள வேண்டாம். இருக்கிற தொழிலை எப்படி மேம்படுத்துவது என்று சிந்தித்தால் போதும். தினமும் மகாலட்சுமி வழிபாடு நன்மையை தரும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முழுவதும் வெற்றிகரமான வாரமாக இருக்கப் போகிறது. உங்களால் எந்தெந்த காரியத்தை எல்லாம் இதுநாள் வரை சாதிக்க முடியவில்லையோ அதற்கான முயற்சிகளை எல்லாம் இந்த வாரம் மேற்கொள்ளுங்கள். குறிப்பாக மாணவர்களுக்கு கல்வியில் இருக்கக்கூடிய தடைகள் விலகும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் விலகும். சிறு தொழில் குறு தொழில் செய்பவர்களுக்கு கூட நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்ப தலைவிகள் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். வீட்டில் இருக்கும் பெரியவர்களோடு முன்கோபடக்கூடாது. மற்றபடி உங்களுக்கு நல்லது நடக்கும் பொன் பொருள் சேரும். தினமும் சிவன் வழிபாடு நன்மையை கொடுக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிக்கல்கள் விலகக் கூடிய வாரமாக இருக்கும். நீண்ட நாள் கோர்ட்டு கேஸ் வழக்கு, நீண்ட நாட்களாக விற்க முடியாத சொத்து வாங்க முடியாத சொத்து இப்படிப்பட்ட பிரச்சனைகளை சரி செய்வீர்கள். வீண் விரைய செலவுகள் கட்டுப்படுத்தப்படும். வருமானம் அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றம் இருக்கும். செய்யும் வேலையில் உங்களுடைய ஆர்வம் அதிகரிக்கும். இன்னும் முன்னேற வேண்டும் என்ற ஊக்கத்தை மேம்படுத்திக் கொள்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும் இந்த வாரம் நரசிம்மர் வழிபாடு உங்களுக்கு நன்மையை செய்யும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சங்கடங்கள் நீங்க கூடிய வாரமாக இருக்கப் போகின்றது. தேவைக்கு ஏற்ப வருமானம் இருக்கும். இழுபறியாக இருந்த வேலையை எல்லாம் சுலபமாக செய்து முடித்து விடுவீர்கள். வண்டி வாகனம் பழுது பார்ப்பது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயத்தில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். வாழ்க்கை துணைக்கு ஆதரவாக நடந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் செய்யும் தவறை நீங்களே உணரும் சந்தர்ப்பங்கள் அமையும். எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். இந்த வாரம் அம்பாள் வழிபாடு மன அமைதியை தரும்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam