– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அவசரப்படாமல் நிதானமாக செயலாற்றும் வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படுவதில் சற்று கால தாமதம் ஏற்படும். ஒரு சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சற்று கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒரு முக்கியமான முடிவுகளை எடுப்பதாக இருந்தாலும் தக்க ஆலோசனை பெற்ற பிறகு எடுப்பது நல்லது. அவசரப்பட்டு எதையும் செய்ய வேண்டாம். சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. நம்பிக்கையுடன் செயல்பட்டால் எல்லா பிரச்சனைகளும் தீரும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். புதிதாக எந்த வேலைக்கும் முயற்சி செய்யாமல் இருப்பது நல்லது. உடன் பணி புரிபவர்களுடன் சற்று ஒத்துழைத்து நடந்து கொள்வதன் மூலம் பிரச்சினைகள் வராமல் பார்த்துக் கொள்ள முடியும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது என்றாலும் நஷ்டம் ஏற்படாமல் இருக்கும். தொழில் ரீதியாக எந்தவித முடிவுகளையும் எடுக்காமல் இருப்பது நல்லது. தொழிலை விரிவுபடுத்த நினைப்பவர்கள் அதற்குரிய முயற்சிகளில் ஈடுபடலாம். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு துர்க்கை அம்மனை வழிபட வேண்டும்.
– Advertisement –
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று எச்சரிக்கையுடன் செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பண வரவு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உள்ளது. வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். பழைய கடன்களை தீர்ப்பதற்குரிய நிலையும் ஏற்படும். மூத்தவர்களிடம் கண்ணியமாக நடந்து கொள்வது நன்மையை தரும். வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை.
வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. ஒரு சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு ஊதிய உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. இருப்பினும் எதிரிகளால் வேலையில் தடைகள் உண்டாகலாம். கவனம் தேவை. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பது சற்று சிரமமாக தான் உள்ளது. தொழில் ரீதியாக எந்த முடிவையும் எடுக்காமல் இருப்பது நல்லது. முடிவுகள் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அதற்குரிய ஆலோசனையை பெற்று எடுப்பது நல்லது. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றகரமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பயணங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அசதியும் சோர்வும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. தவறாக புரிந்து கொண்டவர்கள் திரும்பி வந்து சேருவார்கள். கௌரவம் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. புதிதாக வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் விரும்பிய வேலை கிடைக்கும். ஒரு சிலருக்கு விரும்பிய சலுகைகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. தொழிலை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் வெற்றியைத் தரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு விநாயகரை வழிபட வேண்டும்.
– Advertisement –
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஐஸ்வரியம் பெருகும் வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஒரு சிலருக்கு வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். திருமணம் முயற்சிகள் சாதகமாக அமையும். முழு ஆதரவு கிடைக்கும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று குறைவாக இருக்கும். வேறு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல மாற்றம் ஏற்படும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். ஒரு சிலருக்கு வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்திற்கு மாற்றும் அளவிற்கு முன்னேற்றம் உண்டாகும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு நரசிம்மரை வழிபட வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பிரச்சினைகள் தீரும் வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு பண வரவு ஏற்படும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பண வரவும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிறிய உபாதையாக இருந்தாலும் உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளில் மற்றவர்களின் தலையீட்டை தவிர்ப்பது நல்லது. பிறரிடம் பேசும் பொழுது பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது.
வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாக இருக்கும். உடன் பணி புரிபவர்களுடன் எந்தவித வேலையும் ஒப்படைக்காமல் கவனமாக செய்வதன் மூலம் பிரச்சினைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பதற்கு கூடுதலாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று குழப்பம் ஏற்படும் வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். குடும்பத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் காரணமாக மனதில் தேவையற்ற சஞ்சலங்கள் தோன்ற வாய்ப்புகள் இருக்கிறது. உடன் பிறந்தவர்களால் பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் அவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. தேவையற்ற செலவுகளால் சேமிப்புகள் கரையும். பயணங்களை மேற்கொள்ளும் பொழுது உடைமைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாக இருக்கும். வேலையில் திறம்பட செயல்படுவதன் மூலம் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெற்று அதனால் சலுகைகள் கிடைக்க வாய்ப்புகளும் உள்ளது. தொழிலை பொருத்தவரை எதிர்பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைக்கும். அதனால் தொழிலை நல்ல முறையில் முன்னேற்றுவதற்குரிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பணியாளர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அனுகூலமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவச் செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. பழைய வாகனங்களை மாற்றி புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு உண்டாகும். மனக்குழப்பம் அதிகரிக்கும். அதனால் முடிவுகள் எடுப்பதை தள்ளி போடுவதோ அல்லது பிறரின் ஆலோசனை கேட்டு எடுப்பதோ நல்லது. முன் கோபத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது.
வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று குறைவாக இருக்கும். ஒரு சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உள்ளது. தொழிலை பொருத்தவரை எதிர்பார்த்ததை விட அதிக அளவு லாபம் ஏற்படும். இதுவரை இருந்து வந்த மறைமுக எதிரிகளின் பிரச்சினைகள் நீங்கும். உடன் இருப்பவர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு பழனி ஆண்டவரை வழிபட வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மன குழப்பம் அதிகரிக்கும் வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு பணவரவு ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். இருப்பினும் ஏதோ ஒரு கட்டத்தில் முடிவெடுக்க முடியாமல் தடுமாறுவீர்கள். உறவினர்களால் சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. கவனம் தேவை.
வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று கூடுதலாக இருக்கும். அதில் அதிக அளவு கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உண்டாகும். உடன் பணி புரிபவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைக்கும். எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்க அதற்கேற்றார் போல் உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். தொழிலை விரிவுபடுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அபிராமி அம்பிகையை வழிபட வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பு மிகுந்த வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். இருப்பினும் புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது என்றாலும் நஷ்டம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும். தொழிலில் அதிக அளவு போட்டிகளை சமாளிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அதனால் புதிய முயற்சிகளை இந்த வாரத்தில் மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு வைரவரை வழிபட வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வருமானம் அதிகரிக்கும் வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு பணவரவு ஏற்படும். செலவுகள் ஏற்பட்டாலும் பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்கும். உறவினர்களிடம் பக்குவமாக நடந்து கொள்வது நல்லது. இல்லையேல் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். திருமணம் முயற்சிகள் வெற்றியைத் தரும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். புதிதாக வேலைக்கு முயற்சி செய்வதை தவிர்ப்பது நல்லது. உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மைகள் உண்டாகும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. இருப்பினும் பணியாளர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு குலதெய்வத்தை வழிபட வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கவனத்துடன் செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்ததை விட அதிக அளவு பணவரவு ஏற்படும். இருப்பினும் எதிர்பாராத செலவுகளும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. ஒரு சிலருக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த நல்ல செய்தி வந்து சேரும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாக இருக்கும். புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்த நினைப்பவர்களுக்கு இது ஒரு நல்ல வாரமாக திகழும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டம் நிறைந்த வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பாராத பண வரவும் பொருள் சேர்க்கையும் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. ஒரு சிலருக்கு வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையும் அதனால் ஆதாயமும் ஏற்படும். திருமணம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக முடியும். அனுகூலமாக நடைபெறும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். இருந்தாலும் அதற்கேற்ற சலுகைகள் பெறுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தவும் சொந்த இடத்திற்கு மாற்றவும் நல்ல வாய்ப்புகள் உண்டாகும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு வெங்கடேச பெருமாளை வழிபட வேண்டும்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam