– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் போராட வேண்டிய சூழ்நிலை இருக்கும். எடுத்த உடனேயே எல்லா விஷயத்திலும் வெற்றியை எதிர்பார்க்கக் கூடாது. தோல்வி அடைந்தவுடன் சோர்வு வரக்கூடாது. தன்னம்பிக்கையோடு செயல்பட வேண்டிய வாரம் இது. நிதி நிலைமை கொஞ்சம் மோசமாக இருக்கும். செலவுகளை சமாளிப்பதில் பிரச்சனை இருக்கும். எதற்கும் துவண்டு போகக்கூடாது. இறைவனின் மீது முழுசாக நம்பிக்கை வையுங்கள். பிரச்சனைகள் வந்தாலும் அதனை சமாளிக்கும் தெம்பு உங்களிடத்தில் இருக்கிறது. தினமும் குலதெய்வத்தை வழிபாடு செய்யுங்கள். வேலையிலும் தொழிலிலும் வழக்கத்தை விட கூடுதல் அக்கறை காட்டுங்கள். ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துங்கள் நல்லது நடக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இந்த வாரம் முழுவதும் பொறுமை காக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்திற்கும் அவசரப்படக்கூடாது. முன்கோபடக்கூடாது. வாயிலிருந்து வார்த்தைகளை கொட்டி விடக்கூடாது. வேலையில் மேலதிகாரிகளை அனுசரணையோடு பேச வேண்டும். அவர்கள் உங்களை திட்டினாலும் நீங்கள் பொறுமை காக்க வேண்டும். வேலை முக்கியமல்லவா. வியாபாரத்தில் கூடுதல் கவனம் இருக்கட்டும். முதலீடு செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் வாக்குவாதம் செய்யக்கூடாது. மனைவியை அனுசரித்து செல்ல வேண்டும். இந்த வாரம் பொறுமையாக இருந்தால் சுலபமாக ஜெயிக்கலாம். தினமும் சிவனை நினைத்து ஐந்து நிமிடம் மனதை தியான நிலையில் வையுங்கள்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இந்த வாரம் எல்லா விஷயத்தையும் சரியாக பிளான் செய்து முடிப்பீர்கள். குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே உங்களுடைய வேலையை செய்து முடிப்பதால், பிரச்சனைகள் பெருசாக இருக்காது. மன நிம்மதி இருக்கும். இரவில் நல்ல தூக்கம் வரும். வீட்டில் நல்ல பெயர் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சேமிப்பை அதிகப்படுத்துவீர்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை இருக்கும். தினமும் துர்க்கை அம்மன் வழிபாடு நன்மையை கொடுக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இந்த வாரம் முழுவதும் புது புது அனுபவங்களை கற்றுக் கொள்ள வேண்டிய வாய்ப்புகள் வரும். சந்தோஷம் அதிகரிக்கும். செலவுகளும் அதிகரிக்கும். வேலை செய்ய முடியாத அளவுக்கு பிசியாக இருப்பீர்கள். அன்றாட வேலையை அன்றாடம் முடித்து வைத்து விடுங்கள். அப்போதுதான் வார இறுதியில் பெருசாக பிரஷர் இருக்காது. பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். நல்லது நடக்கும். வீட்டில் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விசேஷங்கள் நடக்கும். தினம் தோறும் முருகர் வழிபாடு நன்மையை தரும்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றம் தரக்கூடிய வாரமாக இருக்கும். நீண்ட நாள் முயற்சிகள் வெற்றி அடையும். வாழ்க்கையில் நல்ல உயர்ந்த இடத்தை அடைவதற்கு உண்டான சந்தர்ப்பங்கள் இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சொத்து வாங்கக்கூடிய யோகம் கூட சில பேருக்கு இருக்கு. வண்டி வாகனம் வாங்கக்கூடிய யோகமும் கைக்கூடி வரும். இறையருள் உங்களுக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். கமிஷன் தொழில் கட்டுமான தொழில் எல்லாம் நல்ல லாபத்தை கொடுக்கும். தினமும் துர்க்கை அம்மன் வழிபாடு செய்வது நல்லது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உற்சாகமான வாரமாக இருக்கும். ஜெயித்தே ஆக வேண்டும் என்று சில விஷயங்களில் ரொம்பவும் அயராது உழைப்பீர்கள். ரொம்பவும் கஷ்டப்படுவீர்கள். ஓய்வு எடுக்கும் நேரம் குறையும். வேலை செய்யும் நேரம் அதிகரிக்கும். கஷ்டப்படும் அளவுக்கு பலனும் நிச்சயமாக இந்த வார இறுதியில் கிடைக்கும். வேலையில் கவனம் செலுத்துவது போல, குடும்பத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளை மனைவியை பார்ப்பதற்கு கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள். இல்லை என்றால் வீட்டில் சண்டை வர வாய்ப்புகள் இருக்கிறது. தினமும் அனுமன் வழிபாடு உங்களுக்கு நல்லதை செய்யும்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசி காரர்களுக்கு இந்த வாரம் தேவையற்ற மன கசப்பான சம்பவங்கள் நடக்க வாய்ப்பு இருக்கிறது. உடனே பயந்து விட வேண்டாம். சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போகும். அந்த பிரச்சனையால் கொஞ்சம் உடம்பும் மனதும் சோர்வடையும். கவலைப்படாதீங்க. பிரச்சனைகளை கடந்து வர பாருங்கள். பிரச்சனை வந்தால் அதிலேயே சோர்ந்து போய் உட்கார்ந்து விடக்கூடாது. வேலையில் சின்ன சின்ன தடைகள் தாமதங்கள் ஏற்படும். மேலதிகாரிகள் கொஞ்சம் திட்டுவார்கள். இருந்தாலும், வேலையை கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள். இந்த வாரம் வேகத்தை விட, விவேகத்தோடு நடந்து கொள்வது தான் புத்திசாலித்தனம். மன தைரியத்தை உயர்த்த வேண்டும் என்றால் தினமும் நரசிம்மரை மனதார நினைத்து வழிபாடு செய்தாலே போதும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டம் நிறைந்த, வெற்றி நிறைந்த வாரமாக இருக்கும். நீங்கள் எதைத் தொட்டாலும் அதில் சக்சஸ் தான். தலை குனிந்த இடத்தில் தலை நிமிர்ந்து நிற்பீர்கள். உங்களால் நஷ்டம் அடைந்த விஷயத்தை எல்லாம் லாபமாக மாற்றுவீர்கள். உறவுகளோடு நல்லிணக்கம் ஏற்படும். பிரச்சனையாக இருந்த கணவன் மனைவி உறவு ஒன்று சேரும். மன அழுத்தம் நீங்கும். தலைவலி நீங்கும். நிம்மதி பிறக்கும். தினம் தோறும் குலதெய்வத்திற்கு நன்றி சொல்லுங்கள். குடும்பத்தில் மேலும் சந்தோஷம் அதிகரிக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திறமைகள் வெளிப்படும் வாரமாக இருக்கும். எவ்வளவு பிரச்சனையை உங்கள் தலைமையில் கொண்டு வந்து போட்டாலும், அதை சர்வ சாதாரணமாக சரி செய்து விடுவீர்கள். அடுத்தவர்களுடைய குழப்பத்திற்கும் ஒரு விடிவு காலத்தை சொல்லுவீர்கள். சந்தோஷமாக வளம் வருவீர்கள். சுறுசுறுப்பாக இருப்பீர்கள். உங்களைப்போல் வாழ வேண்டும் என்று நாலு பேர் ஆசைப்படுவார்கள். எதிர்காலத்திற்கு தேவையான நல்ல திட்டங்களை தீட்டுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படும். பெரியவர்களை ஆசிர்வாதமும் இறைவனின் ஆசிர்வாதமும் உங்களுக்கு கிடைக்கும். தினமும் வீட்டு பக்கத்தில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு போங்க இன்னும் நல்லது நடக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொருளாதாரம் கொஞ்சம் சீர்படும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். கடன் சுமையிலிருந்து வெளிவருவீர்கள். மன அழுத்தத்தை கொடுத்த பிரச்சனைகள் எல்லாம் ஒவ்வொன்றாக உங்களை விட்டு விலகும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். விவசாயம் கட்டுமான தொழில் செய்பவர்கள் காய்கறி, வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த வாரம் நல்ல லாபம் இருக்கும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். வண்டி ஓட்டும் போது கவனமாக இருந்து கொள்ளுங்கள். தினமும் அம்மன் வழிபாடு உங்களுக்கு நல்லது செய்யும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றமான வாரமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது. கடின உழைப்பை முதலீடாக போடுவீர்கள். வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகளை சரி செய்வீர்கள். கடனை வசூல் செய்வதில் அக்கறை காட்டுங்கள். வாரா பணத்தை கொண்டு வருவதற்கு உண்டான முயற்சிகளை மேற்கொண்டால், நிலுவையில் உள்ள பணம் கையை வந்து சேரும். நீங்கள் தொழிலில் முதலீடு செய்யலாம், அல்லது சொத்து சுகம் கூட வாங்கலாம். உங்களுடைய நேரம் நன்றாக இருக்கிறது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். தினமும் வாராகி அம்மன் அங்காளம்மன் போன்ற உக்கிர தெய்வங்களின் வழிபாடு, உங்கள் பிரச்சனைக்கு சீக்கிரமாக தீர்வை கொடுக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மனது ஈடுபடும். மன நிம்மதி இருக்கும். கோவில் குளங்களுக்கு சென்று வருவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். குழந்தைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். நிதிநிலைமை கொஞ்சம் மோசமாகத்தான் இருக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை சில பேருக்கு உண்டாகும். வேலையில் அதிகமாக பேசக்கூடாது. வியாபாரத்திலும் அதிகமாக பேசக்கூடாது. குறைவாக பேசி நிறைய சாதிப்பவர்களுக்கு இந்த வாரம் நிச்சயம் நல்லது நடக்கும். அதிகம் பேசினால் பிரச்சனையில் நீங்கள் சிக்கிக் கொள்வீர்கள். ஜாக்கிரதை, ஆரோக்கியத்தில் கவனம் காட்டுங்கள். குறிப்பாக கால் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவன குறைவு வேண்டாம். தினம் தோறும் ஐயப்பன் வழிபாடு உங்களுக்கு அருள் புரியும்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam