
– Advertisement –
காலையில் எழுந்ததும் இட்லி, தோசை என்று டிபன் செய்யும் பொழுதே சட்டுனு செய்து அசத்தக்கூடிய இந்த ஈசி தக்காளி சட்னி வதக்கி அரைக்காமல், அரைத்து வதக்க போகிறோம். சாம்பார் பொடி சேர்த்து செய்யும் இந்த அரைத்த தக்காளி சட்னி ரெசிபி இதே முறையில் நீங்களும் செய்து பாருங்க, சுவை அட்டகாசமாக இருக்கும். அரைத்து விட்ட தக்காளி சட்னி செய்வது எப்படி? என்பதை தொடர்ந்து இந்த சமையல் குறிப்பு படித்து கற்றுக் கொள்ள போகிறோம்.
தக்காளி சட்னி செய்ய தேவையான பொருட்கள் :
அரைக்க:தக்காளி – மூன்றுசாம்பார் பொடி – இரண்டு ஸ்பூன்உப்பு – தேவையான அளவு
– Advertisement –
தாளிக்க:சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்கடுகு – அரை டீஸ்பூன்உளுந்து – ஒரு டீஸ்பூன்கருவேப்பிலை – ஒரு கொத்துசீரகம் – அரை ஸ்பூன்நறுக்கிய இஞ்சி – ஒரு ஸ்பூன்வரமிளகாய் – ஒன்றுபச்சை மிளகாய் – ஒன்றுமஞ்சள் தூள் – கால் ஸ்பூன்பெருங்காயத்தூள் – இரண்டு சிட்டிகைகொத்தமல்லித்தழை – சிறிதளவுதண்ணீர் – ஒரு கப்
தக்காளி சட்னி செய்முறை விளக்கம்:
இந்த அருமையான சுவையான தக்காளி சட்னியை செய்வதற்கு தேவையான எல்லா பொருட்களையும் தயார் செய்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்து அதில் மூன்று பழுத்த தக்காளி பழங்களை சுத்தம் செய்து ஒன்று இரண்டாக வெட்டி சேர்த்துக் கொள்ளுங்கள். பின் அதனுடன் ரெண்டு டீஸ்பூன் அளவிற்கு சாம்பார் தூளும், தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து அரைக்க வேண்டும். ரொம்பவும் நைசாக இல்லாமல் கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –
இப்போது அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து அதில் தேவையான அளவிற்கு சமையல் எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும், உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். பின் இதனுடன் சீரகம், பொடியாக நறுக்கிய கருவேப்பிலை மற்றும் இஞ்சி துண்டுகள் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். காரத்திற்கு ஒரு பச்சை மிளகாய், ஒரு வரமிளகாய் இவற்றை இரண்டாக கிள்ளி சேர்த்து வதக்குங்கள்.
பின்னர் நீங்கள் அரைத்து வைத்துள்ள தக்காளி கலவையை சேர்த்து நன்கு கலந்து விட்ட பின்பு ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள். தக்காளியின் பச்சை வாசம் போக நன்கு கொதித்து சட்னி கெட்டி ஆக வர வேண்டும். சட்னி கொதிக்கும் பொழுது மேலே தெறிக்க ஆரம்பிக்கும், எனவே மூடி போட்டு மூடி 5 நிமிடம் வேக வையுங்கள். கொதித்து நன்கு எண்ணெய் பிரிய கெட்டியாக வந்ததும், நறுக்கிய மல்லித்தழை தூவி அடுப்பை அணைத்து விடுங்கள்.
இதையும் படிக்கலாமே:
அவ்வளவுதான் ரொம்பவும் சுலபமாக செய்யக்கூடிய இந்த தக்காளி சட்னி ருசியில் நம்பர் 1 ஆக இருக்கும். இட்லி, தோசை, ஊத்தாப்பம், உப்புமா, வடை போன்றவற்றுக்கு தொட்டு சாப்பிட அவ்வளவு அருமையாக இருக்கும். இதன் சுவையை சொல்லி மாளாது, அவ்வளவு சூப்பராக இருக்கக்கூடிய இந்த ஈசி தக்காளி சட்னியை நீங்களும் இதே மாதிரி மெத்தடில் ட்ரை பண்ணி பாருங்க, உங்களுக்கும் ரொம்பவும் பிடித்து போய்விடும்.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam