
– Advertisement –
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய நேரத்தில் ஆரோக்கியமான உணவுகளை தர வேண்டும் என்றுதான் பலரும் விரும்புவர். ஆனால் அவர்களோ குழம்பு காய்கறி என்று எடுத்துச் செல்ல விரும்ப மாட்டார்கள். மேலும் புதிது புதிதாக வெரைட்டியாக சாப்பிட வேண்டும் என்று தான் ஆசையும் படுவார்கள். அப்படி அவர்கள் சாப்பிடக்கூடிய சாதத்தில் ஆரோக்கியமான காய்கறிகளை சேர்த்து செய்தோம் என்றால் அவர்களை அறியாமலேயே சாப்பிட்டு விடுவார்கள். அப்படி முட்டை கோஸை வைத்து செய்யக்கூடிய ஒரு புலாவை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்சீரகம் – 1/2 டீஸ்பூன்கடுகு – 1/2 டீஸ்பூன்வெங்காயம் – ஒன்றுபச்சை மிளகாய் – 2புதினா -/ஒரு கைப்பிடி அளவுகருவேப்பிலை – ஒரு கொத்துஉப்பு – தேவையான அளவுவேர்கடலை – 2 டேபிள் ஸ்பூன்முட்டைகோஸ் – ஒரு கப்,மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்வடித்த சாதம் – 2 கப்
– Advertisement –
செய்முறை
அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். அது சூடானதும் அதில் எண்ணெயை ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, சீரகம் இரண்டையும் சேர்க்க வேண்டும். கடுகு வெடித்து சீரகம் பொறிந்த பிறகு அதில் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்க வேண்டும். பச்சை மிளகாயை இரண்டாக கீரி அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு கொத்து கருவேப்பிலையும் இரண்டாக கிள்ளி சேர்த்து தேவையான அளவு உப்பை சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
வெங்காயம் பொன்னிறமான பிறகு இதில் வேர்க்கடலையை சேர்த்து வேர்க்கடலை நன்றாக சிவக்கும் வரை வறுக்க வேண்டும். வேர்கடலை நன்றாக சிவந்த பிறகு அதில் ஒரு கைப்பிடி அளவு புதினாவை சேர்த்து புதினா வதங்கும் வரை வதக்க வேண்டும். புதினாவும் பதங்கிய பிறகு நீளவாக்கில் நறுக்கிய முட்டைகோசை அதில் சேர்த்து இதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூளையும் சேர்த்து நன்றாக வதக்கி இரண்டு நிமிடம் வேக விட வேண்டும். தண்ணீர் எதுவும் தெளிக்க கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
– Advertisement –
இரண்டு நிமிடம் கழித்து கோஸின் பச்சை வாடை போன பிறகு வடித்த சாதத்தை அதில் சேர்த்து அடுப்பை சற்று அதிகப்படுத்தி ஒரு நிமிடம் நன்றாக சாதத்துடன் இந்த முட்டைகோஸ் கலக்கும்படி நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு அடுப்பிலிருந்து இறக்கி விடலாம். மிகவும் சுவையான கேபேஜ் புலாவ் தயாராகி விட்டது.
இதையும் படிக்கலாமே:ரவை கொழுக்கட்டை செய்முறைசட்டு என்று விரைவில் வேகமாகவும் அதே சமயம் காய்கறி சேர்த்த ஒரு புலாவை இப்படி செய்து கொடுத்து பாருங்கள். குழந்தைகள் சாப்பிட எந்த வித தயக்கமும் காட்ட மாட்டார்கள்.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam