சத்தான புரத தோசை செய்யும் முறை

சத்தான புரத தோசை செய்யும் முறை

Qries


இன்றைய காலத்தில் வேலைக்கு செல்பவர்களாக இருந்தாலும் சரி வீட்டில் இருக்கக் கூடிய இல்லத்தரசிகளாக இருந்தாலும் சரி உளுந்தை ஊறவைத்து மாவு அரைத்து விட்டார்கள் என்றால் போதும் நினைக்கும் பொழுதெல்லாம் தோசை ஊற்றி சாப்பிட்டு விடலாம். ஒரு சிலர் அந்த மாவு அரைப்பதற்கு கூட நேரம் இல்லாமல் கடைகளில் இருந்து மாவை வாங்கி வந்து தோசை ஊற்றி சாப்பிடுவார்கள். இப்படி எப்பொழுதும் போல் அரிசி உளுந்தை பயன்படுத்தாமல் புரதச்சத்து மிகுந்த பொருட்களை பயன்படுத்தி மாவு அரைத்தோம் என்றால் அந்த தோசை ஆரோக்கியமான தோசையாக மாறிவிடும். அந்த வகையில் இன்று புரதச்சத்து மிகுந்த தோசையை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.தேவையான பொருட்கள்பச்சைப்பயிறு – ஒரு கப்மைசூர் பருப்பு – ஒரு கப்அவல் – ஒரு கப்வெந்தயம் – 1/2 டீஸ்பூன்சீரகம் – ஒரு டீஸ்பூன்கடலைப்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்உப்பு – தேவையான அளவுஇஞ்சி – ஒரு இன்ச்பச்சை மிளகாய் – 2கருவேப்பிலை கொத்தமல்லி – விருப்பத்திற்கு ஏற்ப – Advertisement -செய்முறைமுதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பச்சை பயிறு, மைசூர் பருப்பு, அவல், வெந்தயம், சீரகம், கடலைப்பருப்பு இவை அனைத்தையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவி அந்த தண்ணீரை கீழே ஊற்றி விடுங்கள். பிறகு நல்ல தண்ணீரை ஊற்றி மூண்று மணி நேரம் மூடி போட்டு ஊற வைத்துக் கொள்ளுங்கள்.மைசூர் பருப்பு கிடைக்காத பட்சத்தில் சாதாரண துவரம் பருப்பை கூட இதற்கு பயன்படுத்தலாம். 3 மணி நேரம் இந்த பருப்புகள் அனைத்தும் ஊறிய பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு இதனுடன் தேவையான அளவு உப்பு, இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு நன்றாக அரைக்க வேண்டும். கொத்தமல்லி கருவேப்பிலையும் சேர்த்து அரைத்தால் கூடுதல் சுவையாகவும் இருக்கும். சத்துக்கள் அதிகமாகவும் கிடைக்கும். இப்படி அரைத்த இந்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி தோசை ஊற்றும் பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். – Advertisement – அவ்வளவுதான் மற்ற மாவை போல இந்த மாவை புளிக்க வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நாம் தோசை மாவு அரைத்த உடனேயே இந்த தோசையை ஊற்றி விடலாம். இப்பொழுது அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்து கல் நன்றாக சூடானதும் அதில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் தோசை மாவை ஊற்றி தோசை ஊற்ற வேண்டும் பிறகு இதில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். இவை இரண்டுமே ஆரோக்கியமானதாக திகழ்கிறது என்பதால் தான் குறிப்பிட்டு இந்த இரண்டு பொருட்களை கூறியிருக்கிறோம். ஒரு புறம் வெந்ததும் அதை திருப்பிப்போட்டு மறுபுறம் எடுத்தால் சுவையான சத்துமிகு புரதச்சத்து மிகுந்த தோசை தயாராக இருக்கும்.இதையும் படிக்கலாமே:மாங்காய் சட்னி செய்முறைஆரோக்கியமான இந்த தோசையை ஒரு முறை வீட்டில் செய்து பாருங்கள். மாவு அரைக்கும் நேரமும் மிச்சமாகும் மாவு புளிக்க வைக்க வேண்டும் என்ற அவசியமும் இருக்காது. எளிதில் செய்யக்கூடிய சத்து மிகுந்த தோசையை ஒரு முறை சாப்பிட்டு பார்ப்போமா?

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top