– Advertisement –
நம்முடைய உணவுப் பழக்க வழக்கங்களில் சிற்றுண்டி என்றால் முதலில் ஞாபகத்திற்கு வருவது இட்லி தோசை தான். அரிசி மாவில் செய்யப்படும் இட்லி தான் மிகவும் சுவையான அதே நேரத்தில் ஆரோக்கியமான உணவும் கூட. என்ன தான் உடம்புக்கு நல்லது என்றாலும் தினமும் இதையே செய்து கொடுத்தால் சலித்து போகத் தான் செய்யும்.ஆகையால் எப்போதும் ஒரே போல இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரக் கூடிய சோள ரவையில் ஒரு முறை இட்லி தோசை செஞ்சு கொடுத்து பாருங்க. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. வாங்க அந்த இட்லி எப்படி செய்யறதுன்னு இந்த சமையல் குறிப்பு பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
சோள ரவை – 1 கப்,தயிர் – 1 கப்,வெங்காயம் – 1,கடலைப்பருப்பு – 1 ஸ்பூன்,உளுத்தம் பருப்பு -1 ஸ்பூன்,கடுகு – 1/2 ஸ்பூன்,உப்பு – 1/2 ஸ்பூன்,சமையல் சோடா – 1/4 டீஸ்பூன்,கேரட் – 1 துருவியது,வெங்காயம் -1 பொடியாக நறுக்கியது,பச்சை மிளகாய் – 1 பொடியாக நறுக்கியது,கொத்தமல்லி – சிறிதளவு பொடியாக நறுக்கியது,எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்.
– Advertisement –
செய்முறை
இந்த இட்லி செய்வதற்கு முதலில் அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன் கடுகு சேர்த்து பொரிய விடுங்கள். அதன் பிறகு கடலை பருப்பு உளுத்தம் பருப்பு இரண்டையும் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்குங்கள். பின்பு பொடியாக அரிந்து வைத்த வெங்காயம் பச்சை மிளகாய் இரண்டையும் சேர்த்து வதக்க வேண்டும்.
இவையெல்லாம் வதங்கிய பிறகு அளந்து வைத்த ரவையை இத்துடன் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். ரவையுடன் நாம் சேர்த்த வெங்காயம், கடலைப்பருப்பு அனைத்தும் ஒன்றாக கலக்கும் வரை வதக்க வேண்டும். அதன் பிறகு துருவிய கேரட்டை சேர்த்து மேலும் இரண்டு நிமிடம் நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.
– Advertisement –
இவையெல்லாம் சேர்ந்து வதங்கிய பிறகு அடுப்பை அணைத்து விட்டு அப்படியே ஆற விடுங்கள். இந்த ரவை நன்றாக ஆறிய பிறகு ஒரு பவுலில் மாற்றிக் கொள்ளுங்கள். இத்துடன் தயிர், உப்பு, சமையல் சோடா, கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்த பிறகு 15 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். 15 நிமிடம் கழித்து மாவை இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது அடுப்பில் இட்லி பாத்திரம் வைத்து நீங்கள் எப்போதும் ஊற்றுங்கள்.பத்து நிமிடம் வேக விட்டு எடுங்கள். நல்ல சுவையான சத்து மிக்க சோள ரவை இட்லி தயார். இதே மாவை கொஞ்சம் தண்ணியாக கரைத்து தோசையும் வார்க்கலாம்.
இதையும் படிக்கலாமே:ஆரோக்கியமான கருப்பு லட்டு செய்முறை
இந்த இட்லி தோசைக்கு எந்த வகையான சட்னியை வேண்டுமானாலும் சைடிஷ் ஆக செய்து கொள்ளலாம். சோள ரவை இட்லியை ஒரு முறை நீங்களும் செஞ்சு பாருங்க நிச்சயம் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam