மஸ்ரூம் டிக்கா மசாலா செய்முறை | mushroom tikka masala seimurai in tamil

மஸ்ரூம் டிக்கா மசாலா செய்முறை | mushroom tikka masala seimurai in tamil

Qries

– Advertisement –

இன்றைய காலத்தில் பலரும் பல விதமான உணவுப் பொருட்களை விரும்பி சாப்பிடுகிறார்கள். அப்படி விரும்பி சாப்பிடக்கூடிய உணவுப் பொருட்களை ஹோட்டலில் இருந்து வாங்கி சாப்பிடுகிறார்கள் என்பதுதான் குறிப்பிடத்தக்க ஒன்றாக திகழ்கிறது. ஹோட்டலில் சாப்பிடுவதை விட வீட்டில் செய்து சாப்பிடும் பொழுது பொருளாதார ரீதியாகவும் சரி அளவிலும் சரி அதிக பலனையே நம்மால் பெற முடியும். அந்த வகையில் டிக்கா மசாலாவை பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதுவும் குறிப்பாக ஹோட்டலில் வாங்கி சாப்பிடுவார்கள். எப்படி தான் வீட்டில் செய்தாலும் ஹோட்டலில் வரும் சுவை என்பது வராது என்றும் கூறுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இப்படி மஸ்ரூமை வைத்து டிக்கா மசாலா செய்து கொடுங்கள். இனிமேல் ஹோட்டலுக்கு போக வேண்டும் என்ற எண்ணமே அவர்களுக்கு வராது. அந்த மஸ்ரூம் டிக்கா மசாலாவை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
தேவையான பொருட்கள்
மஸ்ரூம் – 300 கிராம்நெய் – 1 டேபிள் ஸ்பூன்கடலை மாவு – 3 டேபிள் ஸ்பூன்காஷ்மீரி சில்லி பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்தயிர் – 1/2 கப்மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்தனியாத்தூள் – 1 டீஸ்பூன்உப்பு – தேவையான அளவுதக்காளி – 1முந்திரி – 8எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்வெங்காயம் – 1இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்சீரகம் – 1 டீஸ்பூன்கரம் மசாலா – 1 டீஸ்பூன்
– Advertisement –

செய்முறை
முதலில் அடுப்பில் கடாயை வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு நெய்யை ஊற்றிக் கொள்ளுங்கள். நெய் உருகியதும் அதில் கடலை மாவை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். நிறம் மாறக்கூடாது. பிறகு அதில் காஷ்மீரி சில்லி பவுடரை சேர்த்து நன்றாக ஒரு முறை கலந்து அடுப்பில் இருந்து இறக்கிக் கொள்ளுங்கள். அடுத்ததாக ஒரு பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கெட்டியான தயிரை ஊற்றி அதை நன்றாக அடித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதனுடன் நாம் நெய்யில் வறுத்த கடலை மாவு இருக்கும் அல்லவா அதை போட்டு நன்றாக கலக்க வேண்டும். பிறகு இதில் மஞ்சள்தூள், தனியாத்தூள், தேவையான அளவு உப்பை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இப்பொழுது இதில் இரண்டாக நறுக்கி வைத்திருக்கும் மஸ்ரூம்மை சேர்த்து நன்றாக கலந்து 20 நிமிடம் அப்படியே ஊற வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் தக்காளி ஊற வைத்திருக்கும் முந்திரி பருப்பை சேர்த்து நைசாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது கடலை மாவு வறுத்த பாத்திரம் இருக்கும் அல்லவா? அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு எண்ணெய் ஊற்றி நாம் ஊற வைத்திருக்கும் மஸ்ரூம்மை அதில் சேர்த்து இரண்டு நிமிடம் மட்டும் நன்றாக பிரட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
– Advertisement –

இப்பொழுது மறுபடியும் அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். மீதமிருக்கும் எண்ணையை ஊற்றுங்கள். எண்ணெய் காய்ந்ததபாருங்கள் சீரகத்தை சேர்க்க வேண்டும். சீரகம் பொரிந்ததும் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து நன்றாக வதக்குங்கள்.
இஞ்சி பூண்டு பேஸ்ட் பச்சை வாடை நீங்கிய பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் தக்காளி விழுதை சேர்த்து கால் கப் அளவிற்கு தண்ணீரை ஊற்றி அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு மிளகாய் தூளையும் உப்பையும் சேர்த்து நன்றாக மூடி போட்டு அதன் பச்சை வாடை போகும் வரை கொதிக்க விட வேண்டும். பிறகு இதில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் மஸ்ரூமை சேர்த்து ஒரு கப் அளவிற்கு சுடு தண்ணீரையும் ஊற்றி கரம் மசாலாவையும் போட்டு மூடி போட்டு ஆறிலிருந்து ஏழு நிமிடம் குறைந்த தீயில் வைத்து வேக விடுங்கள். ஏழு நிமிடம் கழித்து பொடியாக நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி தழையை தூவி ஒரு முறை திரட்டி அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். சுவையான மஸ்ரூம் டிக்கா மசாலா தயார்.
இதையும் படிக்கலாமே:காரசாரமா மஸ்ரூம் சிந்தாமணி
மஸ்ரூமுக்கு பதிலாக சிக்கன், பன்னீர் போன்ற எதை வைத்து வேண்டுமானாலும் இதே முறையில் டிக்கா மசாலா தயார் செய்யலாம். ஹோட்டல் சுவையையே மிஞ்சும் அளவிற்கு அருமையான மஸ்ரூம் டிக்கா மசாலாவை ஒருமுறை செய்து பாருங்கள்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top