முட்டைக்கோஸ் முட்டை அவியல் | Muttaikose muttai aviyal

முட்டைக்கோஸ் முட்டை அவியல் | Muttaikose muttai aviyal

Qries

– Advertisement –

சிலருக்கு முட்டைகோஸ் என்றாலே கொஞ்சம் கூட பிடிப்பதில்லை. அதன் வாசனையை கண்டாலே ஓடி விடுவார்கள். முட்டைக்கோஸில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. பைட்டோ நியூட்ரியன்ட்கள், வைட்டமின் ஏ, சி, கே ஆகிய சத்துக்களும் அதிகம் நிறைந்துள்ள இந்த முட்டைக்கோசை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது அவசியமாகும். முட்டைக்கோஸ் பிடிக்காதவர்களுக்கு கூட முட்டை சேர்த்து இப்படி அவியல் செய்து கொடுத்து பாருங்கள், ரசித்து ருசித்து கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் காலி பண்ணி விடுவார்கள். அருமையான சுவையில் இந்த அவியல் எப்படி தயாரிப்பது? என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவு மூலம் தொடர்ந்து அறிவோம் வாருங்கள்.
முட்டைகோஸ் முட்டை அவியல் செய்ய தேவையான பொருட்கள் :
முட்டைகோஸ் – அரை கிலோபெரிய வெங்காயம் – ஒன்றுபச்சை மிளகாய் – ஒன்றுவரமிளகாய் – ஒன்றுதேங்காய் துருவல் – அரை கப்சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்.கடுகு – அரை டீஸ்பூன்உளுத்தம் பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்கருவேப்பிலை – ஒரு கொத்துமஞ்சள் தூள் – சிட்டிகை அளவுபெருங்காயத்தூள் – சிறிதளவுஉப்பு – தேவைக்கேற்பமுட்டை – நான்கு
– Advertisement –

முட்டைக்கோஸ் முட்டை அவியல் செய்ய தேவையான பொருட்கள் :
முட்டை அவியல் செய்ய தேவையான எல்லா பொருட்களையும் முதலில் தயார் செய்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். முட்டைக்கோசை எவ்வளவு மெல்லியதாக சீவ முடியுமோ அவ்வளவு மெல்லியதாக துருவி வைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் அவியல் தூள் கிளப்பும் ருசியாக இருக்கும். தேங்காயையும் பூப்போல துருவி வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் அடிகனமான வாணலி ஒன்றை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். ஒரு வரமிளகாயை கிள்ளி அதில் போடுங்கள். இதனுடன் ஒரு பச்சை மிளகாயை இரண்டாக வெட்டி சேர்த்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –

பிறகு ஒரு கருவேப்பிலை கொத்தை உருவி போட்டு தாளித்துக் கொள்ளுங்கள். பின் சிட்டிகை அளவு மஞ்சள் தூளும், பெருங்காயத்தூளும் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் துருவி வைத்துள்ள முட்டைக்கோசை சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். எண்ணெயில் நன்கு கலந்து விட்டதும், மூடி போட்டு மூடி வையுங்கள். அரை நிமிடம் கழித்து துருவி வைத்துள்ள தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். மீண்டும் மூடி போட்டு ரெண்டு நிமிடம் வதக்குங்கள். முக்கால் பதம் நன்கு வெந்து வந்ததும் அவியலின் நடுவே ஒரு குழியை தயார் செய்யுங்கள்.
இதையும் படிக்கலாமே:தங்கம் கனவு பலன்
அந்த குழியில் நான்கு முட்டைகளையும் உடைத்து ஊற்றுங்கள். இப்போது மூடி வைத்து மூடி வைத்து அரை நிமிட இடைவெளியில் நன்கு முட்டையை மட்டும் கிண்டி வேக விடுங்கள். முட்டை வெந்து தூள் தூளாக பிரிந்து வந்ததும், தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து விடுங்கள். அவ்வளவுதான் நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி சுடச்சுட சாப்பிட்டால் அவ்வளவு அற்புதமான முட்டைக்கோஸ் முட்டை அவியல் ரெடி! நீங்களும் இதே போல ட்ரை பண்ணி பாருங்க, உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும். முட்டைக்கோஸ் பிடிக்காது என்று சொல்லுபவர்களும், இனி அடிக்கடி முட்டைக்கோஸ் வாங்கிட்டு வந்து தருவாங்க.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top