வெங்காயம் வெட்டும் முறை | Vengayam vettum murai

வெங்காயம் வெட்டும் முறை | Vengayam vettum murai

Qries

– Advertisement –

காய்கறிகளில் மிகவும் முக்கியமான ஒரு காய்கறி என்றால் அது வெங்காயம். தக்காளி இல்லாமல் கூட சமைத்து விடலாம், வெங்காயம் இல்லாமல் சமைப்பது என்பது சற்று கடினமாகத் தான் இருக்கும். இந்த அளவிற்கு சமையலில் மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த வெங்காயம் வெட்டும் பொழுது சரசரவென்று கண்ணீர் எரிச்சலுடன் வந்து கொண்டே இருக்கும். கண்களில் எரிச்சல் இல்லாமல் எப்படி வெங்காயம் வெட்டுவது? என்னும் பயனுள்ள சமையல் குறிப்பு சார்ந்த தகவல்களை தொடர்ந்து அறிந்து கொள்வோம் வாருங்கள்.
வெங்காயம் நறுக்கும் பொழுது அதிலிருந்து வரக்கூடிய நுண் புகையும், வாசனை உடன் கூடிய ஒரு வித நெடியும் கண்களில் எரிச்சலை உண்டாக்கி, கண்ணீரை வரவழைக்கும். எப்பேர்ப்பட்ட சமையல் கலை நிபுணராக இருந்தாலும், வெங்காயம் வெட்டும் பொழுது கண்ணீர் சிந்தித்தான் ஆக வேண்டும். சரி, வெங்காயம் வெட்டும் பொழுது கண்ணீர் சிந்தாமல் இருக்க வழி இருக்கிறதா? என்றால் நிறையவே இருக்கிறது.
– Advertisement –

முதலில் வெங்காயத்தை வெட்டும் போது கூர்மையான கத்தியை பயன்படுத்துங்கள். கூர்மை குறைந்த கத்தியை பயன்படுத்தும் பொழுது அதிகமான சாறு வெளியேறும் இதனால் வெங்காய சாற்றில் இருக்கும் எரிச்சல் ஊட்டும் சேர்மம் அதிகப்படியாக சுரந்து நம் கண்களை எரிச்சல் அடைய செய்யும். கூர்மையான கத்தியால் வெட்டும் பொழுது இந்த பிரச்சனையை குறைக்கலாம்.
வெங்காயம் வெட்ட போவதற்கு 15 நிமிடம் முன்பு பிரிட்ஜில் வைத்து விடுங்கள். அதன் பிறகு எடுத்து தோல் உரித்து வெட்ட ஆரம்பித்தால் குளிர் நிலையில் இருக்கக்கூடிய வெங்காயத்தில் இருக்கும் சேர்மங்கள் தன் நிலையை இழந்து விரைவாக செயல்படாது போகும். இதனால் வெங்காயம் வெட்டும் பொழுது கண்ணீர் வராது பாதுகாப்பாக இருக்கலாம்.
– Advertisement –

அடுத்ததாக வெங்காயம் வெட்டும் பொழுது மின்விசிறிக்கு கீழே அமர்ந்து கொண்டு வெட்டிப் பாருங்கள். காற்றின் பரவலால் ஃபேன் இருக்கும் இடத்திற்கு நேராக கீழே அமர்ந்து வெட்டும் பொழுது கண்களுக்கு நேரடியாக நெடி செல்லாமல் தடுக்கலாம். இதனால் கண்களில் எரிச்சலும், கண்ணீரும் வராது பாதுகாக்கலாம்.
வெங்காயம் வெட்டும் பொழுது பலகைக்கு பக்கத்தில் மெழுகுவர்த்தி ஒன்றை ஏற்றி வையுங்கள் அல்லது விளக்கு கூட வைத்துக் கொள்ளலாம். இப்படி செய்யும் பொழுது நெருப்பில் இருந்து வரும் பிழம்பு வெங்காயத்தில் இருந்து வெளியே வந்து ஊடுருவ கூடிய சேர்மங்களின் புகையை தடுத்து எரித்து விடும். இதனால் கண்களுக்கு எரிச்சலும், கண்ணீரும் வராமல் இருக்கும்.
– Advertisement –

வெங்காயம் தோல் உரிக்கப்பட்டு இரண்டாக பிளந்த பின்பு ஓடும் தண்ணீரில் காண்பியுங்கள். பாத்திரம் கழுவும் சிங்கின் குழாயை திறந்து விட்டு அதில் சிறிது நேரம் வெங்காயத்தை காண்பித்த பிறகு வெட்டினால் வெங்காயத்தில் இருக்கும் கண்ணீரை வரவழைக்கும் சேர்மங்கள் கரைந்து விடும். இதனால் எளிதில் கண்களை எரிச்சல் அடைய செய்து கண்ணீரை வரவழைக்காது.
இதையும் படிக்கலாமே:பீன்ஸ் மசாலா செய்முறை
மற்றொரு எளிமையான வழிமுறையையும் பின்பற்றி பார்க்கலாம். வெங்காயம் வெட்டும் பொழுது கண்ணீர் வராமல் இருக்க கண்களில் கூலிங் கிளாஸ் அணிந்து கொள்ளுங்கள். இதனால் நேரடியாக வெங்காயத்தின் சேர்மங்கள் மூலம் வரக்கூடிய புகை அல்லது நெடி கண்களை பாதிக்காது பாதுகாக்கலாம். எனவே வெங்காயம் வெட்டும் பொழுது இனி கண்ணீர் வருவதற்கு வாய்ப்பு இல்லை. இதில் எது உங்களுக்கு எளிமையாகவும், பலன் தரக்கூடியதாகவும் இருக்கிறது என்பதை பரிசோதித்து பாருங்கள். பின் வெங்காயம் வெட்டும் பொழுது இனி மகிழ்ச்சியாக வெட்டலாம்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top