– Advertisement –
இருப்பதிலேயே ரொம்பவும் எளிமையான சட்னி இந்த தேங்காய் சட்னி. காலையிலேயே சட்டுபுட்டுன்னு சமையல் வேலையை முடிக்க தேங்காய் சட்னியை வைத்தாலே போதும். தேங்காய் சட்னியை என்னதான் விதவிதமான வகைகளில் முயற்சி செய்தாலும், அந்த ருசி வரமாட்டேன் என்கிறது என்பவர்களுக்கு, இந்த தேங்காய் சட்னியின் ரகசியம் தெரிந்தால் நீங்களும் அசத்தி விடுவீர்கள். ஹோட்டல் தேங்காய் சட்னி சுவையின் ரகசியம் என்ன? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.
தேங்காய் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
தேங்காய் – அரை மூடி
பச்சை மிளகாய் – 3
வறுத்த வேர்க்கடலை – ஒரு கைப்பிடி அளவிற்கு
வறுத்த கடலைப்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
இஞ்சி – ஒரு இன்ச்
சீரகம் – அரை ஸ்பூன்
சின்ன வெங்காயம் – ரெண்டு
உப்பு – தேவையான அளவிற்கு
எலுமிச்சை சாறு – அரை மூடி அல்லது கெட்டி தயிர் – ஒரு டேபிள் ஸ்பூன்.
தாளிக்க தேவையானவை:
– Advertisement –
சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
கடுகு – அரை ஸ்பூன்
உளுந்து – அரை ஸ்பூன்
வரமிளகாய் – 1
கருவேப்பிலை – சிறிதளவு.
தேங்காய் சட்னி செய்முறை விளக்கம்:
தேங்காய் சட்னி அரைக்க தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். முதலில் அரை மூடி தேங்காயை நன்கு துருவி பூ போல எடுத்துக் கொள்ளுங்கள். இதனை ஒரு மிக்ஸர் ஜாரை கழுவி எடுத்து அதில் சேர்த்துக் கொள்ளுங்கள். பின் இதனுடன் வறுத்த வேர்க்கடலை ஒரு கைப்பிடி அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு சிறு துண்டு இஞ்சியை தோல் நீக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.
பின் முக்கியமான ஒரு ரகசிய பொருள் வறுத்த கடலைப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த கடலைப்பருப்பை வறுத்து தேங்காய் சட்னியுடன் சேர்க்கும் பொழுது அதனுடைய ருசியே தனியாக அபாரமாக இருக்கும். பெரிய பெரிய ஹோட்டல்களில் எல்லாம் இப்படித்தான் தேங்காய் சட்னி அரைப்பார்கள். பின் இவற்றுடன் காரத்திற்கு பச்சை மிளகாய், சுவைக்கு இரண்டு சின்ன வெங்காயத்தை தோலுரித்து சேர்த்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –
தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து, ஜீரகம் கொஞ்சம் போட்டுக் கொள்ளுங்கள். பின் கடைசியாக அரை முடி எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளுங்கள். எலுமிச்சைச்சாறு சேர்க்க விருப்பமில்லை என்றால், புளிக்காத கெட்டி தயிர் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது மிக்ஸியை இயக்கி நன்கு கொரகொரவென்று அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின் இதற்கு தாளிக்க தேவையான பொருட்களைக் கொண்டு தாளித்து சேர்க்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே:கொலு வைப்பவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!
முதலில் அடுப்பில் தாளிப்பு கரண்டி ஒன்றை வைத்து, தேவையான அளவுக்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும், உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்து, ஒரு வரமிளகாயை கிள்ளி போட்டு, கொஞ்சம் கருவேப்பிலையை உருவி சேர்த்து படபடவென பொரிந்து வரும் பொழுது சட்னியுடன் சேர்த்து கலந்து பரிமாறினால் அட்டகாசமான ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி தயார்! இதை இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட்டு பாருங்கள், அவ்வளவு அருமையாக இருக்கும்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam