– Advertisement –
அனைத்து தேவர்களுக்கும் குருவாக திகழக்கூடியவர்தான் குருபகவான். அப்படிப்பட்ட குருபகவான் பார்க்கும் பார்வையிலேயே பல நன்மைகள் உள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதனால் தான் குரு பார்க்க கோடி நன்மை என்று கூறுவார்கள். அவர் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடம் அவ்வளவு சிறப்புக்குரியதாக திகழ்கிறது.
மேலும் பெருமளவு பணத்திற்கு அதிபதியாக திகழக் கூடியவரும் குரு பகவான் தான். செல்வ செழிப்பு உயர வேண்டும் என்றாலும் அதற்கும் குரு பகவானின் அருள் வேண்டும். இதோடு மட்டுமா சுப காரியங்கள் எதுவாக இருந்தாலும் அது குருபகவானின் அருள் இல்லாமல் நடைபெறாது என்று தான் கூற வேண்டும். திருமணம் செய்ய போறவர்கள் முதலில் குரு எங்கு இருக்கிறார் என்பதை தான் பார்ப்பார்கள்.
– Advertisement –
குழந்தை பாக்கியம் இல்லை என்பவர்கள் குருவால் ஏதாவது பிரச்சினை இருக்கிறதா என்பதை தான் முதலில் பார்ப்பார்கள். இப்படி பல விஷயங்களுக்கு குரு காரண கர்த்தாவாக திகழ்கிறார். அப்படிப்பட்ட குருவின் அருளை பெறுவதற்கு சொல்லக்கூடிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
தேவ குருவாக திகழக்கூடியவரின் பார்வைக்கு அவ்வளவு பலன் இருந்தாலும் அவர் யாருடன் சேர்ந்து இருக்கிறார் என்பதை பொருத்துதான் நல்ல பலன்களையும் தீய பலன்களையும் தருவார் என்று ஜோதிட ரீதியாக கூறப்படுகிறது. அப்படி தீய பலன்களை தரும் பட்சத்தில் அந்த பலன்களில் இருந்து தப்பிக்கவும் குருபகவானின் அருளை பெறுவதற்கும் நாம் செய்யக்கூடிய எளிமையான வழிமுறைகள் பல இருக்கின்றன.
– Advertisement –
குரு பகவானுக்குரிய கிழமையான வியாழக்கிழமை அன்று குரு பகவானுக்கு கொண்டைக்கடலை மாலை வாங்கி சாற்றுவது என்பது மிகவும் விசேஷம். அதேபோல் யார் ஒருவர் தன்னுடைய குருவாக திகழக்கூடிய ஆசிரியர்களை மதிக்கிறார்களோ அந்த அளவிற்கு குருபகவானின் அருளும் கிடைக்கும் என்றுதான் கூற வேண்டும்.
மேலும் மஞ்சள் நிற ஆடை அணிந்து கொள்வதன் மூலம் குரு பகவானின் அருள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் குரு பகவானுக்கு மஞ்சள் நிறம் என்பது மிகவும் பிடித்தமான நிறம். வியாழக்கிழமை அன்று மட்டுமாவது மஞ்சள் நிற ஆடை அணிந்து கொள்வது, தினமும் நெற்றியில் மஞ்சளை பூசி கொள்வது, ஆலயத்தில் இருக்கக்கூடிய தக்ஷிணாமூர்த்திக்கும் குரு பகவானுக்கும் மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்வது அல்லது மஞ்சள் நிற மலர்களை வாங்கித் தருவது இப்படி பல காரியங்கள் குருபகவானின் அருளை பெறுவதற்காக செய்வது உண்டு.
– Advertisement –
இந்த காரியங்களை செய்வதோடு மட்டுமல்லாமல் குருபகவானிற்குரிய மந்திரங்களையும் நாம் மனதார உச்சரித்தோம் என்றால் குரு பகவானின் அருள் நமக்கு கிடைக்கும். அப்படிப்பட்ட மந்திரங்கள் பல இருந்தாலும் அதில் மிகவும் எளிதாக சொல்லக்கூடிய மந்திரத்தை பற்றி தான் பார்க்க போகிறோம்.
இந்த மந்திரத்தை வியாழக்கிழமை தோறும் கூற வேண்டும். 333 முறை கூறவேண்டும். எமகண்டம், ராகு காலம் தவிர்த்து எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கூறலாம். கிழக்கு முகமாக அமர்ந்து கொண்டு கூறுவது என்பது மிகவும் சிறப்பு. வீட்டில் இருப்பவர்களாக இருந்தால் வீட்டு பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு இந்த மந்திரத்தை சொல்லலாம். கோவிலில் சென்று சொல்பவர்களாக இருக்கும் பட்சத்தில் தக்ஷிணாமூர்த்திக்கு முன்னாடி அமர்ந்து தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு மந்திரத்தை கூற வேண்டும்.
மந்திரம்
தட்சிணாமூர்த்தியே காக்க காக்க
இதையும் படிக்கலாமே செல்வநிலை உயர மஹாலக்ஷ்மி மந்திரம்
மிகவும் எளிமையான இந்த ஒரு வரி மந்திரத்தை 333 முறை வியாழக்கிழமை தோறும் கூறி வர குரு பகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். அதனால் பெரும் செல்வம் ஏற்படும். மங்கள காரியங்கள் அனைத்தும் தடையின்றி நடைபெறும்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam