தன வரவை அதிகரிக்கும் மந்திரம் | Dhana Varavai Athikarikkum Manthiram in Tamil

தன வரவை அதிகரிக்கும் மந்திரம் | Dhana Varavai Athikarikkum Manthiram in Tamil

Qries





– Advertisement –

இன்று தன திரியோதசி இன்றைய தினத்தில் பணவரவை அதிகரிப்பதற்கு நாம் பல வழிமுறைகளை பின்பற்றலாம் அதிலும் குறிப்பாக சுக்கிர பகவானுக்குரிய வெள்ளி பொருளை நம்முடைய வீட்டில் வாங்கி வந்து வைப்பதன் மூலம் சுக்கிர பகவானின் அருளையும் மகாலட்சுமி தாயாரின் அருளையும் பரிபூரணமாக பெற முடியும் என்று கூறப்படுகிறது. இப்படி செய்ய இயலாது என்பவர்கள் இன்று இரவு 12 மணிக்குள் இந்த ஒரு மந்திரத்தை கூறும் பொழுது அவர்களுக்கு சுக்கிர பகவானின் அருளால் தன வரவு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அந்த மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
என்னதான் நாம் வழிபாடுகளையும் பரிகாரங்களையும் மேற்கொண்டாலும் அந்த வழிப்பாடுகளிலும் பரிகாரத்திலும் நாம் மந்திரங்களை கூறும் பொழுது அதனால் நமக்கு அதிக அளவில் பலன் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அந்த அளவிற்கு மந்திரத்தில் அதிக அளவில் பலன் இருக்கிறது. இந்த மந்திர உச்சாடலை ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமாக கூற வேண்டும். அதுவும் குறிப்பாக அவர்களுக்கு உகந்த நாளில் நாம் கூறும் பொழுது அதனால் நமக்கு பலவிதமான நன்மைகள் உண்டாகும் என்றே கூறப்படுகிறது.
– Advertisement –

இன்றைய தினம் தன திரியோதிசி இன்றைய தினத்தில் நாம் சுக்கிர பகவானுக்குரிய உலோகமான வெள்ளியை வாங்கி வைத்து வழிபாடு செய்வதன் மூலம் வாழ்க்கையில் அதிக அளவில் பண வரவை சம்பாதிக்க முடியும் என்றே கூறப்படுகிறது. பணம் வசதி இருப்பவர்கள் தாங்கள் நினைத்த பொருளை வாங்கி அதனால் பண வரவை அதிகரித்துக் கொள்ள இயலும். ஆனால் பண வசதி இல்லாமல் கஷ்டப்படுப்பவர்களால் வெள்ளி உலோகத்திற்கு உரிய கிரகமாக கருதப்படும் சுக்கிர பகவானின் மந்திரத்தை முழுமனதோடு இன்று இரவு 12 மணிக்குள் கூற வேண்டும். அதுவும் 11 முறை கூறினால் போதும்.
குறிப்பாக மாலை 6:30 மணியிலிருந்து 8:30 மணிக்குள் இந்த மந்திரத்தை கூறும் பொழுது அதிக அளவில் பலன் கிடைக்கும் என்றே கூறப்படுகிறது. அப்படி இல்லாத பட்சத்தில் இரவு 12 மணிக்குள்ளாவது இந்த மந்திரத்தை கூறலாம். இந்த மந்திரத்தை கூறுவதோடு ஒரு வெள்ளை நிற பேப்பரில் பச்சை அல்லது நீல நிற பேனாவை பயன்படுத்தி 11 முறை எழுதினாலும் அதிக பலனை கிடைக்கும். இந்த மந்திரத்தை நாம் எந்த இடத்தில் வேண்டுமானாலும் அமர்ந்து கூறலாம் அல்லது எழுதலாம் அமைதியான இடத்தில் அமர்ந்து எந்தவித இடையூறுகளும் இன்றி முழு மனதோடு இந்த மந்திரத்தை எழுதிக் கூற வேண்டும் என்பதுதான் குறிப்பிடத்தக்கது.
– Advertisement –

மந்திரம்ஓம் ஷூம் சுக்கிராய நமஹ
இதையும் படிக்கலாமே:தன ஆகர்ஷணம் ஏற்பட ஏற்ற வேண்டிய தீபம்
இந்த எளிமையான ஒரு வரி மந்திரத்தை முழுமனதோடு எந்தவித இடையூறுகளும் இன்றி 11 முறை உச்சரித்தாலோ அல்லது எழுதினாலோ சுக்கிர பகவானின் அருளால் தன வரவு அதிகரிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

– Advertisement –








Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top