நோய் தீர தன்வந்திரி மந்திரம் | Noi Theera manthiram in Tamil

நோய் தீர தன்வந்திரி மந்திரம் | Noi Theera manthiram in Tamil

Qries

– Advertisement –

இன்றைய காலக்கட்டத்தில் நோயில்லாத வீடே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் யாரேனும் ஒருவர் மருந்து மாத்திரை எடுத்துக் கொள்ளும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள் . இது உண்மையிலே கடுமையான காலகட்டம் என்று தான் சொல்ல வேண்டும் எப்போதும் வீட்டில் ஒருவர் உடல்நிலை குறைபாடோடு இருந்தால் அந்த வீட்டில் நிம்மதி எப்படி இருக்கும்.
சில நோய்கள் இன்றைய காலக்கட்டத்தில் தொடர்ந்து மருந்து மாத்திரை எடுத்துக் கொள்ளும்படி ஆகி விட்டது. இன்னும் சிலருக்கோ தீராத வியாதிகளால் தொடர்ந்து துன்பப்பட்டுக் கொண்டிருப்பார்கள். அதற்கு எத்தனை சிகிச்சை எடுத்தும் சரியாகாது. இன்னும் சிலருக்கு எதனால் இந்த வியாதி வந்தது என்றே தெரியாமல் துன்பப்படுவார்கள் இப்படியானவர்களுக்கு அருமருந்து தான் இந்த மந்திரம் அதை குறித்து நாம் இப்போது தெரிந்து கொள்வோம்.
– Advertisement –

தீராத நோய் தீர மந்திரம்
நாம் எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பு நேரம் காலம் பார்த்து செய்வது மிக மிக அவசியம். ஒரு நோய்க்கு நாம் மருந்து எடுத்துக் கொள்ளும் போதும் சரி, சிகிச்சைக்கு சொல்லி போதும் சரி நாம் அதற்கான நேரம் காலம் பார்த்து தான் செய்ய வேண்டும்.
சில நாட்களில் நாம் செய்யும் சிகிச்சை உடனே நல்ல பலனை தரும். சில நாட்கள் செய்யும் சிகிச்சை வெகு நாட்களாகவும் எடுத்துக் கொண்டே போகும். இது நோய்க்கு மட்டுமல்ல நம் வாழ்வில் செய்யும் ஒவ்வொரு காரியங்களுக்கும் இந்த நாள் கிழமை பார்ப்பது பொருந்தும். அந்த வகையில் நாம் எந்த ஒரு சிகிச்சையை தொடங்கும் போதும் சில மந்திரங்களை சொன்ன பிறகு துவங்கினால் விரைவில் குணமடைவோம் என்று சொல்லப்படுகிறது.
– Advertisement –

மந்திரம்
ஓம் நமோபகவதேவாசுதேவாய தன்வந்த்ரயேஅமிர்தகலச ஹஸ்தாயசர்வ ஆமய விநாசநாயத்ருலோக்யநாதாயமகாவிஷ்ணவே நமஹ
இந்த மந்திரத்தை நாம் சிகிச்சைக்கு மருத்துவமனை செல்லும் போது அல்லது ஒரு சிகிச்சைக்கு மருந்து எடுத்துக் கொள்ளும் போது மூன்று முறை தொடர்ந்து சொன்ன பிறகு எடுத்தால் எப்பேர்ப்பட்ட நோயும் விரைவில் குணமாகும் என்று சொல்லப்படுகிறது.
– Advertisement –

குறிப்பாக ஏதேனும் அறுவை சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு செல்வதாக இருந்தால் இதை சொல்லலாம் அது அதிக பிரச்சனை இல்லாமல் விரைவில் முடிந்து குணமாகும். அதே போல் கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனைக்கு செல்லும் போது இந்த மந்திரத்தை சொன்ன பிறகு சென்றால் பிரசவம் கூட சுலபமாக முடியும் அதிக சிரமம் இருக்காது என்றெல்லாம் சொல்லப்படுகிறது.
இதையும் படிக்கலாமே:

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top