விரும்பியது கிடைக்க சிவ மந்திரம் | virumbiyathu kidaikka siva manthiram in tamil

விரும்பியது கிடைக்க சிவ மந்திரம் | virumbiyathu kidaikka siva manthiram in tamil

Qries


சாதாரண பிரதோஷத்தை விட சனி மகா பிரதோஷம் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று நம் அனைவருக்குமே தெரியும். அப்படிப்பட்ட சனி மகா பிரதோஷ நாளை முழுமையாக நாம் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் அளவில்லா நன்மைகளை நம்மால் பெற முடியும். சிவபெருமானின் அருளால் நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறும் என்று கூட கூறலாம். அப்படிப்பட்ட சனி மகா பிரதோஷ நாளன்று விரும்பியது கிடைக்க சிவபெருமானின் எந்த மந்திரத்தை கூற வேண்டும் என்று தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.விரும்பியது கிடைக்க மந்திரம்சாதாரணமாக நாம் செய்யக்கூடிய எந்த வழிப்பாடாக இருந்தாலும் முழு மனதோடு செய்தோம் என்றால் அந்த வழிபாட்டிற்குரிய பலனை நம்மால் பெற முடியும். அப்படி நாம் செய்யக்கூடிய வழிபாட்டை விட மந்திரத்தைக் கூறி செய்யக்கூடிய மந்திர வழிபாடு என்பது அதிக அளவில் பலனை தரும். நமக்கு தெரிந்த எளிமையான மந்திரம் எந்த மந்திரமாக இருந்தாலும் அந்த மந்திரத்தை முழுமனதோடு அந்த தெய்வத்தை நினைத்துக் கூற வேண்டும். மந்திரம் தெரியவில்லை என்பவர்கள் அந்த தெய்வத்தின் பெயரையே மந்திரமாக கருதியும் கூறலாம். அந்த வகையில் சனி மகா பிரதோஷ நாளன்று கூற வேண்டிய ஒரு மந்திரத்தை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம். – Advertisement -சிவபெருமானுக்கு என்று பலவிதமான மந்திரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒவ்வொரு விதமான பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக பஞ்சாட்சர மந்திரம் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த மந்திரமாக கருதப்படுகிறது. பலரும் சிவபெருமானை வழிபாடு செய்யும்பொழுது அந்த மந்திரத்தை கூறி வழிபாடு செய்வார்கள். இருப்பினும் அதைவிட மிகவும் எளிமையான சில மந்திரங்கள் இருக்கின்றன. அந்த மந்திரங்களை ஒவ்வொரு நொடியும் நாம் கூறும்பொழுது சிவபெருமானிடம் நாம் நெருங்கிக் கொண்டே செல்கிறோம் என்று பொருள்படுமாம்.அந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்த மந்திரமாக அந்த மந்திரம் திகழும் என்றும் அந்த மந்திரங்களை தொடர்ச்சியாக நாம் கூறும்பொழுது சிவபெருமானின் திருவடிகளில் நாம் சரணாகதி அடைகிறோம் என்று பொருள்படும் என்றும் கூறப்படுகிறது. அப்படி சிறப்பு வாய்ந்த மந்திரங்களில் ஒரு மந்திரம் தான் நாம் கேட்டதை நமக்கு கிடைக்கச் செய்யும் அற்புதமான மந்திரமாக கருதப்படுகிறது. – Advertisement – இந்த மந்திரத்தை சனி மகா பிரதோஷ நாளன்று பிரதோஷ நேரமான 4:30 மணியிலிருந்து 6 மணிக்குள் கூற வேண்டும். ஆலயத்தில் இருப்பவர்களாக இருக்கும் பட்சத்தில் அங்கேயே கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு இந்த மந்திரத்தை கூறலாம். வீட்டில் இருப்பவர்களாக இருக்கும் பட்சத்தில் சிவபெருமானுக்கு முன்பாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து கையில் சிறிதளவு விபூதியை வைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை கூற வேண்டும். இந்த மந்திரத்தை 106 முறை கூறிவிட்டு 27 முறை எழுதினால் நாம் என்ன நினைத்து இந்த மந்திர வழிபாட்டை செய்கிறோமோ அது நமக்கு நடக்கும் என்று கூறப்படுகிறது. மந்திரத்தை கூறி முடித்த பிறகு கையில் இருக்கக்கூடிய விபூதியை நெற்றியில் அணிந்து கொள்ள வேண்டும்.மந்திரம்“ஓம் சிவ சிவ ஓம்”இதையும் படிக்கலாமே:கடன் அடைய சொல்ல வேண்டிய மந்திரம்எளிமையான இந்த மந்திரத்தை முழுமனதோடு யார் ஒருவர் சிவபெருமானை நினைத்து கூறுகிறார்களோ அவர்கள் நினைத்தது நினைத்தபடி நடக்கும் கேட்டது கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top