![Qries](https://nithyasubam.in/wp-content/uploads/2024/04/99-ns-add.png)
– Advertisement –
இருக்கும் குழம்பு வகைகளில் ரொம்பவே ஈஸியான ஒரு வகை ரசம் தான். சட்டுனு ஐந்து நிமிடத்தில் செய்யக்கூடிய இந்த ரசம் எல்லோருக்கும் அவ்வளவு சுவையாக வந்து விடுவது கிடையாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான முறையில் ரசம் வைப்பார்கள். ரசம் வைக்க தேவைப்படும் பொருள் என்னவோ ஒரே மாதிரியாகத் தான் இருக்கும், ஆனால் சுவை மட்டும் எப்படி வெவ்வேறு ஆகிறது? என்று தான் குழம்பி போவோம். இப்படி பாடாய்ப்படுத்தி எடுக்கும் இந்த ரசம் எப்படி சுவையாக வைப்பது? என்னும் குறிப்பை இந்த சமையல் குறிப்பு சார்ந்த பகுதியில் அறிவோம் வாருங்கள்.
ரசம் வைக்க தேவையான பொருட்கள் :
புளி – 50 கிராம்பழுத்த தக்காளி – மூன்றுமிளகு – ஒரு ஸ்பூன்சீரகம் – ஒரு டீஸ்பூன்பூண்டு பற்கள் – பத்துவரமிளகாய் – 1பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன்மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்கருவேப்பிலை – ஒரு கொத்துமல்லித்தழை – தேவையான அளவுஉப்பு – தேவையான அளவுவெல்லம் – ஒரு மிளகு அளவு.
– Advertisement –
தாளிக்க :சமையல் எண்ணெய் – ஒரு ஸ்பூன்கடுகு – அரை ஸ்பூன்கருவேப்பிலை – ஒரு கொத்துவரமிளகாய் – ஒன்று
ரசம் செய்முறை விளக்கம் :
ரசம் வைப்பதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். முதலில் 50 கிராம் அளவிற்கு புளியை ஓரிரு முறை கழுவி சுத்தம் செய்து ஊற வைத்துக் கொள்ளுங்கள். புளியை தயாரிக்கும் பொழுது கால்களால் மிதித்து தயாரிக்கிறார்கள், எனவே சில முறை அலசி விட்டு பயன்படுத்துங்கள். ஒரு பாத்திரத்தில் பழுத்த தக்காளி பழங்களை எடுத்து கழுவி சுத்தம் செய்து கைகளால் நன்கு மசித்து வைத்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –
புளி நன்கு ஊறியவுடன் தக்காளியுடன் புளிக்கரைசலை விதைகள், நார் எல்லாம் இல்லாமல் வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் ஒரு கொத்து கறிவேப்பிலையை ஒன்று இரண்டாக கிள்ளி சேர்த்து, தேவையான அளவிற்கு கல் உப்பு போட்டு கைகளால் நன்கு கலந்து 2 சோம்பு தண்ணீர் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு மிக்ஸர் ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மிளகு, சீரகம், பூண்டு பற்கள், வரமிளகாய் சேர்த்து கொரகொரவென்று அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள்.
அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விட்டுக் கொள்ளுங்கள். ஒரு கொத்து கருவேப்பிலையை தாளித்த பின்பு நீங்கள் அரைத்து வைத்த பொருட்களை சேர்த்து, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் போட்டு இரண்டு நிமிடம் நன்கு வாசனை போக வறுத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு நீங்கள் தயார் செய்து வைத்துள்ள ராச கலவையையும் சேர்த்து ஒரு முறை கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். கடைசியாக நறுக்கிய மல்லித்தழை தூவி, ஒரு மிளகு அளவு வெல்லத்தை சேர்த்து மூடி போட்டு விடுங்கள். அவ்வளவுதாங்க, கொஞ்ச நேரம் பொறுத்து சுட சுட சாதத்துடன் ஊற்றி சாப்பிட்டு பாருங்கள், அட்டகாசமான ரசம் சூப் போல ரெடி!
இதையும் படிக்கலாமே:வெள்ளிக்கிழமை பிறந்தவர்களின் பலன்
டிப்ஸ்:ரசத்துக்கு புளியை கரைக்கும் போது ரொம்பவும் அழுத்தி மொத்த சாறையும் எடுக்க கூடாது, கசக்கும். மிளகு, ஜீரக பொருட்களை அப்படியே சேர்க்காமல் எண்ணெயில் வதக்கி சேர்த்தால் சுவை தரும். தூள் உப்பு போடக்கூடாது. மிளகாய் காரம் அதிகம் சேர்க்க கூடாது.
– Advertisement –
![Qries](https://nithyasubam.in/wp-content/uploads/2024/04/marriage-ns-adv.png)
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam